இதோ சீக்கிரம் வருகிறேன்
Sat Aug 08, 2015 6:02 pm
இதோ சீக்கிரம் வருகிறேன்(வெளி 22:12)
கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார். ஆமோஸ் 3:7
சபைகளில் இவைகளை உங்களுக்கு சாட்சியாக அறிவிக்கும் படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். வெளி22:16
(திரியேக தேவன்) பிதா,குமாரன்,பரிசுத்த ஆவி மத் 28.19
மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டு வரக்கண்டேன்.
(வலு சர்ப்பம், மிருகம், கள்ளத்தீர்க்கதரிசி) வெளி16:13
10 காலங்கள்
1. தூதர்களின் காலம் (பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், என்று மகிமைப் படுத்திய காலம்)
2. அறியாமையின் காலம் (ஆதாம்,ஏவாள் அறியாமையினால் பாவம் செய்த காலம்)
3. மனசாட்சியின் காலம் (நோவா-ஆபிரகாம்)
4. நியாயப்பிரமாணத்தின் காலம்( மோசே-யோவான்)
5. இடைக்காலம் (இயேசு பூமியில் இருந்த காலம்)
6. கிருபையின் காலம்( இப்பொழுது)
7. உபத்திரவ காலம்(அந்திக்கிறிஸ்து 666 அன்பாக கொடுக்கப்படுகிற காலம், உபத்திரவத்தின் ஆரம்ப காலம் 3 ½ வருடங்கள்)
8. மகா உபத்திரவ காலம் (666 கட்டாயமாக்கப்படும் காலம்)
9. 1000 வருட அரசாட்சிக்காலம்(இயேசுக்கிறிஸ்துவும் பரிசுத்தவான்களும் அரசாளும் காலம்)
10. பிந்திய நித்தியம்(பரிசுத்தவான்கள் அனைவரும் ஆண்டவரை பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், என்று போற்றும் காலம்)
இவற்றில் எதிலாவது இயேசுவின் வருகையின் காலம் என்று கூறி இருக்கிறதா??
கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்கார்ருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார். ஆமோஸ் 3:7
ஆண்டவர் வருகைக்கு முன்பு அநேக அடையாளங்கள் வெளிப்படவேண்டி இருக்கின்றது. அதில் வெளிப்படுத்தின விஷேசத்தில் 7 முத்திரைகளை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
Permissions in this forum:
You cannot reply to topics in this forum