அவரில் நிலைத்திருங்கள்
Sat Aug 08, 2015 5:21 pm
" நானே திராட்சைச் செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான் (யோவான் 15:5)."
நமது தேவன் இல்லாமல், நம்மால் வெற்றிகரமான, கனி நிறைந்த வாழ்வு வாழமுடியாது.
திராட்சை கொடியானது, செடியோடு இணைந்திருக்கும்போதுதான், ஜீவனையும், பெலனையும், அந்த செடிக்குரியது என்னவெல்லாம் இருக்கின்றதோ அவையாவற்றையும் பெற்றுக் கொள்ளும்.
அதைப்போலவே, நீடித்த வாழ்வு, செழிப்பு, வியாதியில்லாத வாழ்வு, மற்றும் எல்லா நன்மைகளும் அவருக்குள் இருக்கின்றன. நாம் அவரில் நிலைத்திருந்தால், அந்த எல்லா ஆசீர்வாதங்களையும் நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
எப்படி அவரில் நிலைத்திருப்பது?
உங்கள் வாழ்வில் கடந்தவை, நிகழ்கால சூழ்நிலைகள், எதிர்காலத்தைக் குறித்ததான பயம், இவையாவற்றையும் மறந்து விடுங்கள். அந்த இன்பமான அவரது அன்பையும், பிரசன்னத்தையும் அனுபவியுங்கள். அவர் தானாகவே உங்கள் வாழ்வில் நன்மையையும், கிருபையையும் ஓடச் செய்வார்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum