மேத்யூ ஃபௌண்டன் மௌரிஸ்
Thu Jul 23, 2015 8:24 pm
கடல்களில் பாதையுண்டு என்று உலகுக்கு காட்டிய பரிசுத்த வேதாகமம்
பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள் கடலில் பிரயாணம் செய்வதற்கு பயப்படுவார்களாம் ஏன் தெரியுமா? பூமியானது தட்டையாக உள்ளது எனவே ஒரு இடத்தில் தொடங்கி மறு இடத்தில் விழுந்துவிட்டால் என்னாவது என்ற பயம்தான் காரணமாம்,
பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள் கடலில் பிரயாணம் செய்வதற்கு பயப்படுவார்களாம் ஏன் தெரியுமா? பூமியானது தட்டையாக உள்ளது எனவே ஒரு இடத்தில் தொடங்கி மறு இடத்தில் விழுந்துவிட்டால் என்னாவது என்ற பயம்தான் காரணமாம்,
இன்றைக்கு உள்ளவர்களுக்கு இது சிரிப்பாக தோன்றலாம், காரணம் இன்று விஞ்ஞானம் பூமி தட்டை வடிவத்திலல்ல உருண்டை வடிவத்தில் உள்ளது என்பதை தெளிவுப் படுத்தியுள்ளது,எனவே நாம் கடல் வழியில் ஒரு முனையில் பிரயாணம் தொடங்கி மீண்டும் தொடங்கிய இடத்திற்கே சுற்றி வந்து விட இயலும் என்பதை விஞ்ஞான அறிவினால் அறிந்துகொள்ள முடிகிறது, ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த மனிதர்கள் எவ்வாறு இந்த விஞ்ஞான உண்மையை அறிந்திருக்க இயலும்,
ஆம் பரிசுத்த வேதாகமத்தில் யோபு என்ற பக்தர் இவ்வாறு கூறுகிறார், யோபு 26:10 ல் “அவர் தண்ணீர்கள்மேல் சக்கரவட்டம் தீர்த்தார்; வெளிச்சமும் இருளும் முடியுமட்டும் அப்படியே இருக்கும்“,
ஆங்கிலத்தில் “He hath compassed the waters with bounds, until the day and night come to an end”.
அதுபோல பூமி உருண்டை வடிவத்தில் உள்ளது என்பதையும் பைபிள் தெளிவாக தெளிவுப்படுத்தியுள்ளது, ஏசாயா 40:22 ல் “அவர் பூமி உருண்டையின் மேல் வீற்றிருக்கிறவர்…” 2500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வேதம் துல்லியமாக தெளிவுப்படுத்தியுள்ளது,
இந்த பூமியில் நாம் அனைவரும் அறிந்ததின்படி நிலப்பரப்பைக் காட்டிலும் நீர்ப்பரப்பே அதிக இடத்தை பிடித்துள்ளது, இந்த நீர்ப்பரப்பிற்கு வழிகள் உண்டு என்பதை இன்று நாம் அறிவோம் ஆனால் இந்த நீர்ப்பரப்பிற்கு வழி உண்டு என்பதை கண்டறிந்த மேத்யூ ஃபௌண்டன் மௌரி(MATHEW FOUNTAINE MAURY) என்ற விஞ்ஞானிக்கு எப்படி தெரிய வந்தது என்று நீங்கள் அறிவீர்களானால் ஆச்சர்யத்தில் மூழ்கிவிடுவீர்கள், எப்படி என்பதை தெரிந்துகொள்வோமா? வாருங்களேன் என்னோடு,
மேத்யூ ஃபௌண்டன் மௌரிஸ் தன்னுடைய 19 வது வயதில் அமெரிக்க கப்பற்படையில் சேர்ந்தார், அவருடைய திறமையினாலும் கடின உழைப்பாலும் சீக்கிரத்தில் அவர் அமெரிக்க கப்பற்படையில் உயர் பதவியை 1842ல் அடைந்தார்,
அவர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்தவராய் தன் வேலையில் அதிக கவனம் செலுத்தினார், அவர் 33 வயதாக இருந்த போது ஒரு விபத்திலே அவருடைய வலது கால் உடைந்துபோனது, அந்த சமயங்களிலும் அவருடைய வீட்டில் தினமும் தவறாமல் குடும்பமாக வேத புத்தகத்தை வாசிப்பதை நடைமுறைப் படுத்தி வந்தனர் அதற்கு அவருடைய தகப்பனார் வழிகாட்டியாக இருந்துள்ளார் என்று மௌரியின் மகள் டயானா தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்,
ஒருமுறை மௌரியின் மகள் வேத புத்தகத்தில் சங்கீதம் 8 ஐ எடுத்து சத்தமாக மௌரியின் செவிபட வாசித்தபோது அதிலே 8 வது வசனத்தை படிக்கிறாள், அந்த சமயத்தில் அந்த சமயத்தில் அந்த வசனம் அவர் செவிகளில் பட்டபோது பளிச்சென்று முகம் பிரகாசித்தது, காரணம் அவர் துறை சார்ந்த ஒரு தேடலுக்கான பதில் அதில் இருந்தது, அப்படி அந்த வசனம் என்னதான் சொல்கிறது, சங்கீ 8:8 “ஆகாயத்து பறவைகளையும் சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்ஜரிக்கிறவைகளையும் அவனுடைய பாதத்திற்க்கு கீழ்ப்படுத்தினீர்.”
தமிழ் மொழியாக்கம் இவ்வாறு சொல்கிறது ஆனால் ஆங்கில மொழிப்பெயர்ப்பில் “The fowl of the air, and the fish of the sea, and whatsoever passeth through the paths of the seas.என்று மூல ஆங்கில் வேதாகமத்தில் உள்ளது, அதன் கடைசி பகுதியின் அர்த்தம், “எவைகளெல்லாம்கடல்களின் பாதைகளில் கடந்துபோகிறதோ அவைகளும்” என்பதுதான் அதன் சரியான மொழிபெயர்ப்பாகும், எனவே கடல்களில் பாதை உண்டு என்ற வேத வசனத்தை படித்தபோதுதான் அவருக்கு கடல் வழி பாதைகளை அறிய வேண்டும் என்ற தூண்டுதல் உண்டானது, அதன் விளைவாக பல்வேறு ஆய்வுகளின் மூலமாக கடல் வழியை கண்டுபிடித்தார்,
அதன்பின் 1855ல் தி ஃபிசிக்கல் ஜியோகிரபி ஆஃப் த சீ(THE PHYSICAL GEOGRAPHY OF THE SEA) என்ற புத்தகத்தை வெளியிட்டார், அது அந்நாட்களில் மிகவும் புகழ்பெற்ற புத்தகமாக விளங்கியது, அந்த புத்தகத்தில் மௌரி வேத வசனங்களை மேற்கோள் காட்டி குறிப்பிட்டிருந்தார், அது சில அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை எனவே அமெரிக்காவிலுள்ள யுனிவர்சிட்டி ஆஃப் சௌத் (UNIVERSITY OF SOUTH)ல் அவர் 1860ல் அவர் பேசியதாவது, “அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த என் துறை சார்ந்த விஞ்ஞானிகள், என்னுடைய ஃபிசிக்கல் ஜியோகிரபி புத்தகத்தின் கருத்துக்களை உறுதிபடுத்துவதற்கு பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டி எழுதியுள்ளதால், அவர்கள் குறை கூறி வருகின்றனர், காரணம், மதப்புத்தகம் விஞ்ஞானத்தோடு ஒத்துப்போகும் நம்பகத்தன்மையற்றவை என்பது அவர்கள் கருத்து, ஆனால், என்னை மன்னித்துவிடுங்கள், ஏனென்றால், பைபிளில் என்னென்ன விஷயங்களை அது சொல்கிறதோ அது அனைத்தும் நம்பகத்தன்மையுடையது, பரிசுத்த வேதாகமம் உண்மையுள்ளது”என்று சொல்லி முடித்தார், அவர் பரிசுத்த வேதாகமத்தை நம்பினார், இந்த தேவன் அவரை உயர்த்தினார்,
மௌரியை குறை கூறியவர்களின் பெயர்களை இன்று நமக்கு தெரியாது, ஆனால் மௌரிக்கு உலகம் கொடுத்த புனைப்பெயர்கள் என்னென்னவென்று தெரியுமா?, “கடல்களின் பாதைகளை கண்டறிந்தவர்(PATH FINDER OF THE SEAS)”, “நவீன கடலியல் மற்றும் கடல் சார்ந்த சீதோஷன நிலை ஆய்வுகளின் தந்தை(Father of Modern Oceanography and Naval Meteorology)”, பிற்காலத்தில் “கடலியல் விஞ்ஞானி (Scientist of the Seas)” என்று மக்களால் புகழப்பட்டார்,
இன்றைக்கும் அமெரிக்காவின் விர்ஜினியாவில் மௌரியின் நினைவிடத்தில் அவருக்கு ஒரு உருவச்சிலையையும் அதனோடே ஒரு வேதாகமத்தையும் சேர்த்து வடிவமைத்துள்ளனர், இது எதைக் காட்டுகிறதென்றால், கடல்களில் வழிகளை கண்டுபிடிக்க அவருக்கு வழிகாட்டியது பரிசுத்த வேதாகமமதான் என்பதை பறைசாற்றுகிறதல்லவா.
http://en.wikipedia.org/wiki/Matthew_Fontaine_Maury
http://www.apologeticspress.org/apcontent.aspx?category=13&article=361
http://www.bible.ca/b-science-evidences.htm
http://en.wikipedia.org/wiki/Matthew_Fontaine_Maury
http://www.apologeticspress.org/apcontent.aspx?category=13&article=361
http://www.bible.ca/b-science-evidences.htm
Permissions in this forum:
You cannot reply to topics in this forum