விஞ்ஞானி ஐன்ஸ்டின்
Thu Jul 23, 2015 8:17 pm
.>>தீர்ந்துபோகாத ஞானத்தை தரவல்லது பைபிள்-சொன்னவர் விஞ்ஞானி ஐன்ஸ்டின்
>>உலகப் புகழ் பெற்ற இயற்பியல் வல்லுனரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கையொப்பமிட்ட பைபிள் 68 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் 40 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்) ஏலம் போனது.
>>1932-ம் ஆண்டு ஐன்ஸ்டைனும் அவரது மனைவி எல்சாவும் கையொப்பமிட்ட இந்த பைபிள், ஹரியட் ஹாமில்டன் என்ற அமெரிக்கருக்கு இருவராலும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ஆகும்
>>இந்த பைபிள் வற்றாத ஞானத்தையும் ஆறுதலையும் தர வல்லது,இது தொடர்ந்து படிப்பதற்கு மிகவும் தகுதியானது’ என்று முன் பக்கத்தில் ஜெர்மானிய மொழியில் ஐன்ஸ்டைன் குறிப்பிட்டுள்ளார்
>>நம்முடைய கைகளில் காணபடுகிற பரிசுத்த வேதாகமம் ஏதோ படிப்பறிவில்லாத முற்கால மக்கள் கிறுக்கிப் போன கை ஏடு அல்ல,
>>இது மனித ஞானத்திற்கப்பாற்பட்ட தேவ ஞானத்தால் தேவ ஆவியால் நிறையப்பட்டு எழுதிய விலையேறப்பெற்ற பொக்கிஷம் என்பதற்கு எவ்வளவோ சாட்சிகள் நம்மை சுற்றி காணப்படுகிறது,
>>எத்தனையோ விஞ்ஞானிகள் அதற்கு சாட்சியாக இருக்கின்றனர், அந்த வரிசையில் உலக பிரசித்திப் பெற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டினும் விதிவிலக்கில்லாமல் பைபிள் ஞானப்பொக்கிஷம் எனபதை அவர் கைப்படவே எழுதி ஒப்புக்கொண்டுள்ளார்,
>>இதை படித்தபின்பாவது வேதத்தை இகழும் பூமிக்குறிய ஞானிகள் சிந்திக்க வேண்டும்
சங்கீதம் 19:7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
ஆதாரம்: times of India (June 28-2013)
Permissions in this forum:
You cannot reply to topics in this forum