சாதனையாளனும் வேதனையாளனும்
Tue Jul 21, 2015 9:16 pm
ஆனால் , மதியம் 2.30 வரை நீண்டு விட்டது ஷாப்பிங். ஃப்ரீயாக இரண்டு குண்டூசி கிடைக்கிறது என்று அரை கிலோ பர்கரை முண்டியடித்து வாங்கிய வெற்றி ஆயாசமும் களைப்பும். அந்தக் கணவன் துவண்டு ஒரு மூலையில் உட்கார்ந்துவிட்டான். விட்டால் படுத்துவிடுவான். மனைவியும் மெல்லிய குரலில் “ போறப்ப ஓட்டல்லயே சாப்பிட்டுட்டுப் போயிரலாமே...” என்கிறாள்.
ஏன் அவர்களால் உத்தேசித்திருந்த வேலைகளைச் செய்ய முடியவில்லை...?
களைப்பாகிவிட்டார்கள் என்பது பொதுவான பதில்.
ஆற்றல் எனும் பாத்திரம்
நமக்கான சக்தியை நாம் சாப்பிடும் உணவிலிருந்து பெறுகிறோம்.
இப்படிச் சேகரித்த மன, உடல் ஆற்றல்களை ஒரு பாத்திரத்தில் பிடித்து வைக்கிற மாதிரி கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த ஆற்றல் ஒவ்வொரு இயக்கத்திலும்---மாலுக்குள் நுழைகிறபோது கொஞ்சம், வந்ததற்கு நினைவாகச் செல்லில் ஃபோட்டோ எடுத்துக்கொள்வதில் கொஞ்சம்...இப்படி சிறிது சிறிதாகச் செலவாகிறது.
நேரடியாகப் புரிந்துகொள்ள முடிகிற உடல் சார்ந்த களைப்பை மட்டுமே நிறையபேர் கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர்.இதுதவிர வேறொரு ஆற்றல் இழப்பும் இருக்கிறது. சொல்லப்போனால் அதுதான் உங்களின் ஆற்றல் பாத்திரத்தை விரைவாகக் காலி செய்கிறது. சம்பவங்களின் தாக்கத்தினால் ஏற்படும் களைப்புதான் அது.
ஓடுகிற பேருந்திலிருந்து இறங்குகிறவர் கீழே விழாமல் இருக்க, பேருந்தின் திசையிலேயே சிறிது தூரம் ஓடுவதைப் போல மனமும், ஷாப்பிங்கில் அதை வாங்கியது தப்போ?; இதை அதிகமாக வாங்கியிருக்கலாமோ? என்று முடிந்த சம்பவங்களின் பின்னால் ஓடிய பிறகே ஆசுவாசம் கொள்கிறது.
இதனால்தான் “அஞ்சே அஞ்சு நிமிஷம் டி.வி பாத்துட்டு படிக்க உக்காந்திடறேன்...” என்பவர்கள், படிக்க உட்கார்ந்தாலும் மனம் உடனடியாக புத்தகத்தில் ஒன்றுவதில்லை. அரட்டையடித்துவிட்டு யாராலும் சட்டென மீள முடிவதில்லை. மனம் சும்மா ஓடுமா? எரிபொருளைக் காலி செய்துகொண்டேதான் ஓடும்.
ஒரு ஆற்றல்தான்
நல்லது என்றாலும், கெட்டது என்றாலும் சம்பவங்களின் பாதிப்பு இருக்கவே செய்யும். அதனாலும் ஆற்றல் மறைமுகமாகச் செலவாகிறது. இப்படிக் காலியாகிப்போய் உள்ள உங்களிடம் “ டார்கெட்டை ரீச் பண்ண வீறு கொண்டு கிளம்பு...” என்றால் என்ன செய்வீர்கள்?
அது எப்படிப் பாடுமய்யா...? அது எப்படி ஆடுமய்யா...? என்று சோகப்பாடல்தான் பாடுவீர்கள்.
திரும்பவும் சக்தி பெற அத்தனை செல்களுக்கும் ஓய்வளித்து ,உணவு பெற்று, அது ஆற்றலாக மாற்றம் பெற்ற பின்னரே நீங்கள் “ I AM BACK..” என்று பன்ச் டயலாக் பேச முடியும். ஆனால், அதுவரை நீங்கள் ஏற வேண்டிய வாகனம் நிற்காது. நதிகள் யாருடைய பாதங்களுக்காகவும் காத்திருப்பதில்லை.
உங்களிடம் ஷாப்பிங் செய்ய ஒரு சக்தி, வண்டி ஓட்ட ஒரு சக்தி, வேடிக்கை பார்க்க ஒரு சக்தி என்றெல்லாம் விதவிதமான சக்திகள் இருக்கவே முடியாது. இருப்பது ஒரே ஆற்றல்தான். அதை வெவ்வேறு வடிவங்களில் செலவு செய்கிறோம்.
யார் சொன்னது? மனிதா, நீ அபரிதமான ஆற்றல் படைத்தவன். உன் ஆற்றல் உனக்கே தெரியாது போன்ற வாதங்கள் வேறு விஷயம். உங்கள் மனம் சூப்பர்மேன் போல் விமானத்தை நிறுத்தினாலும், அறையிலுள்ள கட்டிலை நகர்த்த இன்னொருவர் உதவி தேவை என்பதே யதார்த்தம்.
இன்னொரு கேள்வி. நல்ல விஷயங்கள், நேர்மறையான விஷயங்களுக்கு மட்டும் சக்தியைச் செலவிட்டால் சக்தி குறையாமல் இருக்குமா...? என்ன,நல்ல விஷயங்களில் ஆற்றல் குறைந்தால் நிறைவு ஏற்படும். தேவையற்ற திசைகளில் ஆற்றல் பகிரப்பட்டால் உங்களுக்குக் குற்ற உணர்வு ஏற்படும்.
கொக்கும் மீனும்
‘எல்லாவற்றிலும் இப்படிக் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தால் வாழ்க்கையை எப்படி ரசிக்க முடியும், என்பவர்களுக்கு ஒரு கொக்கின் கதை சொல்கிறேன்.
அது உறுமீனுக்காகக் காத்திருந்தது. மீன் ட்ராஃபிக்கில் சிக்கி வந்துகொண்டிருந்ததால் போரடித்த கொக்கு ரிலாக்ஸ் செய்து கொள்ள அருகில் இருந்த தவளை, முதலைகளுடன் செல்ஃபி எடுத்து, வாட்ஸ் அப்பில் அனுப்பியது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாய்க் கொக்கு தன் ஆற்றலை இழந்தபோது மீன் வந்தது. ஏற்கெனவே, பலவீனமாகி இருந்த கொக்கு பலவீனமான முயற்சியையே செய்தது. எனவே, மீன் கொக்கின் மதிய உணவாக உருமாறாமல் மீனாகவே கடந்து சென்றது.
எனவே, ஷாப்பிங் போன்றவற்றைச் செய்யலாம்--அன்று அதைவிட முக்கியமில்லாத பணிகள் இல்லாமல் இருந்தால்...! அப்போதுதான் பொழுதுபோக்கும் இனிக்கும்.செய்ய வேண்டிய பணிகளும் சிறப்பாக அமையும்...!
எல்லைக்குட்பட்ட ஆற்றலை எப்படிச் செலவு செய்கிறீர்கள் என்பதில்தான் உங்களின் ஒரு தினம் வெற்றிகரமாக அமைகிறது. ஒரு சாதனையாளனுக்கும் வேதனையாளனுக்கும் உள்ள வேறுபாடும் இதுவே.
தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com
Permissions in this forum:
You cannot reply to topics in this forum