வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே
Sat Jul 18, 2015 9:01 am
வயதான பெரியவர்
ஒரு பெரியவருக்கு பல ஆண்டுகளாக காது கேட்கவில்லை. பிரபல மருத்ததுவர், சில காது கேட்கும் கருவிகளை பொருத்தி, “ஐயா இனி உங்களுக்கு நூறு சதவீதம், காது கேட்கும்” என்று சொல்லி அனுப்பி வைத்தார். காது கேட்பதை உணர்ந்த பெரியவர் சந்தோஷத்தோடு வீடு திரும்பினார்.
ஒரு மாதம் கழித்து, பெரியவர் மீண்டும் மருத்துவரிடம் வந்தார். மருத்துவர் பரிசோதித்து பார்த்துவிட்டு “ஐயா எல்லாம் சரியாய் இயங்குகிறது. இனிமேல் பிரச்சனை ஒன்றும் இல்லை, உங்கள் குடும்பத்தினர் இது குறித்து மகிழ்ச்சி அடைந்தார்களா?” என்று கேட்டார். அதற்கு பெரியவர் “என் காது கேட்பதுபற்றி நான் இன்னும் குடும்பத்தினரிடம் தெரிவிக்கவில்லை. இப்போதுதான் அவர்கள் பேசுவதை எல்லாம் நன்றாக கேட்டுகொண்டிருக்கிறேன். கடந்த ஒரு மாதத்தில் மூன்றுமுறை உயிலை மாற்றி எழுதியிருக்கிறேன்” என்றாராம்.
நீதி: இன்றைக்கு உலகம் முகத்திற்கு முன்பு ஒரு வேஷம் போடுகிறது. பின்பாக ஒன்றை பேசிக்செல்கிறது. இவர்களும் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே.
Re: வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே
Sat Jul 18, 2015 9:02 am
அது ஞாயிற்று கிழமை அதிகாலை நேரம்.
ஒரு தாய் தனது மகனின் படுக்கை அறைக்கு செல்கிறாள். தூங்கிகொண்டிருந்த மகனை எழுப்பி,
ஆலயத்துக்கு போகச்சொல்கிறாள். மகனோ தன்னால் ஆலயத்துக்கு போகமுடியாது என்று சொல்கிறான். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் அவனிடம், "ஏன் உன்னால் இன்று ஆலயத்துக்கு போகமுடியாது?" எனக்கேட்கிறாள்.
"நான் ஆலயத்துக்கு போக முடியாது என்று சொன்னதற்கு இரண்டு காரணங்களை சொல்கிறேன். ஒன்று: ஆலயத்துக்கு வருகிறவர்களை எனக்கு பிடிக்கவில்லை. இரண்டு: ஆலயத்துக்கு வருகிறவர்களுக்கு என்னை பிடிக்கவில்லை." என்று மகன் தாயிடம் சொல்கிறான்.
இதைகேட்ட தாய் கோபத்தோடு மகனிடம், "நீ இன்றைக்கு ஆலயத்துக்கு போகவேண்டும் என்று சொல்வதற்கு இரண்டு காரணங்களை சொல்கிறேன். ஒன்று: உனக்கு கழுதை வயது ஆகிவிட்டது. இரண்டு: நீதான் அந்த சபைக்கு போதகர்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum