பூட்டிய அறையில் ....
Sat Jul 18, 2015 8:55 am
“......... கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று, உங்களுக்கு சமாதானம் என்றார்”. (யோவான் 20:19)
உயிர்த்தெழுந்த இயேசு, உயிர்த்தெழுந்த காலையில், தாம் உயிர்த்தெழுந்ததை காண்பிக்க எத்தனையோ காரியங்களை செய்தார். அவற்றுள் ஒன்று பூட்டியிருந்த வீட்டில் பிரவேசிப்பது. இந்த வார்த்தையின் மூலம் இன்றும் உயிர்த்தெழுந்த வல்லமையை காண்பிக்க தேவன் வல்லமை உள்ளவராய் இருக்கிறார்.
பகுதி – I – பூட்டிய நிலையில் பிரவேசிக்கும் தேவன்
1. உயிர்த்தெழுந்த இரட்சகர் அசாத்தியமானவைகளை செய்பவர்:
இயேசு மனிதரால் கூடாதவைகளை செய்பவர் – இருளாய் இருக்கும் இடத்தில்யாரும் வெளிச்சத்தை கொண்டுவரலாம். ஆனால் இருளிலிருந்து வெளிச்சத்தை கொண்டுவரமுடியாது. அவர் மறித்து நான்கு நாளான மனிதனை எழுப்பியவர். உங்கள் வாழ்விலும் அற்புதங்களை செய்வாராக.
2. முன்னுதாரணம் இல்லாத அற்புதங்களை செய்பவர்:
கெபியை மூடி, கல்லை சீல்வைத்து தானியேலை போட்டார்கள். அங்கே தூதனை அனுப்பி சிங்கங்களின் வாயை கட்டினார். சீஷர்களை விடுவிக்க தேவன் சிறைச்சாலைக்குள் தூதனை அனுப்பினார். யாரும் எங்கும் செய்திராததை தேவன் தம் பிள்ளைகளுக்கு செய்திடுவார்.
3. எனக்காக மறுபடியும் செய்ய வல்லவர்:
உயிர்த்தெழுந்த இயேசு மூன்று முறை பூட்டப்பட்ட அறைக்குள் பிரவேசித்தார். இது எதை உணர்த்துகிறது? அவர் எங்கோ யாருக்கோ செய்ததை அவர் எனக்காக மீண்டும் செய்ய வல்லவர்
4. நம்முடைய வாழ்க்கையின் மத்தியில் இருக்க விரும்புகிறவர்:
நம் வாழ்வின் சூழ்நிலைகளின் மையப்பகுதியிலே, உணர்சிகளின் மத்தியிலே, நம்முடைய தீர்மானங்கள் மத்தியிலே, விவாதங்கள் மத்தியிலே, நம்பாத உள்ளங்களின் மத்தியிலே மையம் கொள்ள விரும்புகிறார். சமாதானத்தை தருவார்.
பகுதி – II -பூட்டப்பட்ட அறையில் வெளிப்பட்டதற்கான மூன்று காரணங்கள்:
1. கதைவை பூட்டினவர்களே அதை திறக்கவேண்டும்:
தேவபிள்ளைக்கு விரோதமாக பிசாசு கதவை அடைத்தால் தேவனே திறப்பார். தேவ பிள்ளைகள் பூட்டினால் அவரே உள்ளே வந்து நமக்கு உணர்த்துவாரே தவிர அவரே அதை திறப்பதில்லை. நம் வாழ்கையில் எதையாவது பூடியோ தடுத்தோ வைத்திருந்தால், அதை தேவன் நீக்கமாட்டார். மாறாக நம்மை திறக்க வைப்பார்.
2. அவருடைய வல்லமையான சாட்சியாக நம்மை மாற்றுவதற்கு:
எலிசா தீர்க்கதரிசி விதைவையிடம் உன் பிள்ளைகளுடன் உள்ளே கதவை பூட்டி உன்னிடம் உள்ள எண்ணையை காலியான பாத்திரங்களில் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கம் வை என்றான். ஏனென்றால் தேவகிரியை செய்யும் இடத்தில மனித குறுக்கீடுகள் இருக்கக்கூடாது. அண்டை வீட்டாரிடம் பாத்திரங்களை கொடுக்கும்பொழுது அவர்கள் காரணம் கேட்டால் சாட்சி பகர சொன்ன ஆண்டவர், முதலாவது பூட்டிய அறையில் தன் அற்புதத்தை செய்து நம்மை அனுபிக்கசெய்து பின் சாட்சிபகர வைக்கிறார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum