எங்களுக்கும் தாத்தாக்கள் உண்டு
Fri Jul 17, 2015 10:40 pm
குல்லா வியாபாரி ஒருவன் ஒரு காட்டின் வழியாகப் பயணம் செய்ய நேர்ந்தது.
சிறிது நேரப் பயணத்துக்குப் பின் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து உணவருந்திவிட்டு குல்லாக்கள் இருந்த கூடையைக் கீழே இறக்கி வைத்து விட்டு உறங்க ஆரம்பித்தான். அவன் தாத்தாவும் இதுபோலவே காட்டில் அயர்ந்து தூங்கியதாகவும், அந்த சமயத்தில் மரத்தின் மேலிருந்த குரங்குகள் தொப்பியையெல்லாம் எடுத்து அணிந்து கொண்டு மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டதாகவும், அவர் தனது தலையில் இருந்த குல்லாவைக் கழற்றிக் கீழே எறிய , எல்லாக் குரங்குகளும் தன் தலையில் இருந்த குல்லாவைக் கழற்றி வீச அவர் அவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு புத்திசாலித்தனமாகத் தப்பினார் என்றும் ஏற்கனவே கூறியிருந்தார்.
எனவே
அவனும் தைரியமாக உறங்கிப் போனான். தூங்கி எழுந்து பார்த்தால் எதிர்பார்த்த படியே கூடையில் இருந்த குல்லாக்கள் எல்லாம் மரத்தில் இருந்த குரங்குகளின் தலையில். அவன் கலங்கவில்லை. இருக்கவே இருக்கிறது தாத்தா சொன்ன யோசனை.
அவனும் தைரியமாக உறங்கிப் போனான். தூங்கி எழுந்து பார்த்தால் எதிர்பார்த்த படியே கூடையில் இருந்த குல்லாக்கள் எல்லாம் மரத்தில் இருந்த குரங்குகளின் தலையில். அவன் கலங்கவில்லை. இருக்கவே இருக்கிறது தாத்தா சொன்ன யோசனை.
தலையில் இருந்த குல்லாவைக் கழற்றிக்கீழே வீசினான். குரங்குகளை ஏறெடுத்துப் பார்த்தான். ஒரு குரங்கு கூடக் குல்லாவைக் கழற்றி வீசவில்லை. மீண்டும் பல முறை அதே மாதிரிக் கழற்றி வீசிப் பார்த்தான். ஒரு குரங்கு கூட வீசவில்லை. வெறுத்துப் போய்த் தரையில் சோர்ந்து விழுந்தான்.
அப்போது ஒரு குரங்கு சிரித்துக் கொண்டே சொன்னது "நண்பா! எங்களுக்கும் தாத்தாக்கள் உண்டு ".
செல்லமே! இந்த இறுதிக் காலத்தில் நம்மைப் போலவே சத்துரு வும் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறான். கவனமாய் விழித்திருந்து ஜெயம் கொள்ளுவாயா?
சிநேகிதனை விசுவாசிக்க வேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம். உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு.
மீகா 7 :5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum