கடிகாரத்தின் கதை
Fri Mar 08, 2013 11:30 pm
கி.பி.1504ம் ஆண்டு, முதல் கையடக்க
கடிகாரம், ஜெர்மனியின் நியூரெம்பெர்க நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. பீட்டர்
ஹென்லின் என்பவர் கண்டுபிடித்தார். ஆனால், அந்த கடிகாரத்தில், நிமிட
விநாடிகளை துல்லியமாக பார்க்க முடியாது. கி.பி. 1577ம் ஆண்டு, ஜோஸ்ட் பர்கி
என்பவர் தான் நிமிடங்களையும் கணக்கிடுவதற்கு தேவையான உபகரணத்தை
கண்டுபிடித்தார். ‘டைகோ பிராகி’ என்ற வானவியல் அறிஞர், நட்சத்திரங்களைப்
பற்றிக் கணிக்க, அவருக்கு துல்லியமாக நேரம் காட்டும் கடிகாரம்
தேவைப்பட்டது. அதற்காகத்தான், ஜோஸ்ட் பர்கி, இச்சாதனத்தை உருவாக்கினார்.
மணிக்கட்டில் கட்டிக்கொள்ளும் கைகடிகாரத்தை, முதன் முதலில் அணிந்து
கொண்டு, அந்த முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர், பிரெஞ்ச் கணித மேதை
மற்றும் தத்துவஞானி பிளேஸ் பாஸ்கல். கடிகாரத்தை, ஆங்கிலத்தில் ‘கிளாக்’
என்கிறோம். இச்சொல், பிரெஞ்ச் வார்த்தையான ‘கிளாக்கி’ என்பதில் இருந்து
வந்தது. கிளாக்கி என்பதற்கு ‘ஒலியெழுப்பும் மணி’ என்று பொருள். மணிக்கு,
இலத்தீன் மொழியில் கிளாக்கியோ என்று பொருள்.
கி.பி.
1656ம் ஆண்டு, கடிகாரத்தில் வினாடியையும் துல்லியமாகக் கணக்கிட உதவும்
பெண்டுலம் என்ற உபகரணத்தை, கிறிஸ்டியன் ஹைஜீன்ஸ் என்பவர் கண்டறிந்தார்.
இவர், டச்சு நாட்டை சேர்ந்த இயற்பியலாளர், கணித மேதை, வனவியல் அறிஞர்
மற்றும் கண்டுபிடிப்பாளர் என் பன்முகங்களை கொண்டவர்.
சர்.சான் போர்டு பிளம்மிங், 1878ம் ஆண்டு, உலகளவில், நில்லையான, தரமான
நேரத்தை கண்டறிந்தார். பிரபஞ்ச அளவிலான நிலையான நேரத்தை ( Universal
Standard Time) உருவாக்கி, அதை “ராயல் கனடியன் இன்ஸ்டிடியூட்”க்கு
பரிந்துரைத்தார். 1884ம் ஆண்டு, அது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
முதல் இயந்திர அலாரம் கடிகாரம், 1787ம் ஆண்டு, அன்றைய
இங்கிலாந்தின் காலனிநாடுகளில் ஒன்றான நியூ ஹம்ப்சையர் பகுதியை சேர்ந்த லீவி
ஹச்சின்ஸ்என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் உருவாக்கிய லறம் கடிகாரம்
அதிகாலை நான்கு மணிக்கு மட்டுமே, அலாரம் அடிப்பதாக இருந்தது. 1876 அக்டோபர்
24ம் தேதி, சேத் இ.தாமஸ்கண்டு பிடித்த இயந்திர அலாரம் கடிகாரம், எந்த
நேரத்திலும் அலாரம் அடிக்கும் விததிதில் தயாரிக்கப்பட்டது. இவ்வளவு கதை
இருக்கிறது கடிகாரத்தின் பின்னல். நேரத்தை வீண் செய்யாதீர்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum