'நரி' க்குப் பயிற்சி
Fri Jul 17, 2015 9:21 pm
அப்பா நரி ஒன்று தன் மகன் நரிக்குப் பயிற்சி கொடுத்தது.
ஓடுதல், தாவுவது, வேட்டையாடுவது இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயிற்சி கொடுத்து தன் குட்டியைத் திறமைசாலியாக வளர்த்தது.
இப்போது குட்டி நரியால் சிறிய முயல்களையும், எலிகளையும் எளிதாக வேட்டையாட முடியும்.
குட்டி கொஞ்சம் பெரிதானது.
அப்பா நரி சொன்னது " மகனே! இதுவரை நான் கற்றுக் கொடுக்காத ஒரு புதிய வித்தையை நாளை காலையில் உனக்கு கற்றுக் கொடுக்கப் போகிறேன். ஆம். நாளை உனக்கு வானத்தில் பறக்கும் வித்தையை சொல்லித் தருகிறேன். நீ சீக்கிரம் கிளம்பித் தயாராக இரு" என்றது. அப்பா நரி சொன்ன இந்த வார்த்தையைக் கேட்ட அடுத்த நொடியே குட்டி கற்பனையில் மிதக்க ஆரம்பித்து விட்டது. அடடா. இனி நான் பறவை போல் பறப்பேன். தரையில் வாழும் உயிரினங்களை தின்று சலித்துப் போனால் வானத்துப் பறவை களையும் பிடித்து ஆசை தீர சாப்பிடுவேன். என்ன சந்தோஷம்! அந்த இரவு முழுவதும் குட்டி நரிக்குத் தூக்கமே வரவில்லை. எப்போது விடியும் என்று காத்திருந்தது. அதிகாலையிலேயே எழுந்து தன் அப்பாவை எழுப்பியது. சிறிது நேரத்திலேயே இருவரும் கிளம்பிவிட்டனர். குட்டி சந்தோஷமாய்க் குதித்துக் குதித்து ஓட அப்பா நரி அமைதியாகப் பின் தொடர்ந்தது. அப்பா ஒரு பெரிய பாறையின் அருகே வந்து நின்று குட்டி யிடம் சொன்னது, " இந்தப் பாறை மேல் உடனே ஏறு" .
அடுத்த நிமிடமே குட்டி பாறையின் மேல். "இப்ப நல்லா கவனி. உன் காது மடல் ரெண்டையும் நேரா நீட்டிக்க, முன்னங்கால் ரெண்டையும் மேலே தூக்கு, வாலை வேகமா ஆட்டு. நான் குதிக்க சொல்லும்போது தாவிக்குதி. அப்ப நீ பறக்க ஆரம்பிச்சுடுவ. கீழே இறங்கணும்னு நினைச்சா
வாலை மெதுவா ஆட்டிக்கிட்டே முன்னங்காலை கொஞ்சம் கொஞ்சமா மடக்கு. கீழே இறங்கிடுவ". குட்டிக்கு உற்சாகம் பெருக்கெடுத்து ஓடியது. அப்பான்னா இவர்தான் அப்பா. என் செல்ல அப்பா.
அப்பாவை மனதுக்குள் கொஞ்சியபடியே அதன் கட்டளைக்காகக் காத்திருந்தது. திடீரென அப்பா சொன்னது " தாவு " .
அப்பா சொல்லிக் கொடுத்த எல்லா ஏற்பாடுகளோடும் தாவியது. "இனி வானமும் என்னுடையது". குதித்தது. ஆனால் பறக்கவில்லை. உயரமான அந்தப் பாறையின் அடிவாரத்தில் வந்து விழுந்தது. காலில் எலும்பு முறிந்தது போன்ற வலி. வாயில் அடிபட்டு ஓரிரு பற்களும் உடைந்ததால் வாயெல்லாம் ரத்தம். நொண்டி நொண்டி நடந்தபடி அப்பாவைப்பார்த்து கத்தியது, "பெத்த புள்ளை கிட்டேயே பொய்சொல்லிக்
கொல்லப் பாத்தியே! நீயெல்லாம் ஒரு அப்பனா?
அப்பா நரி அமைதியாய் சொன்னது, " ஒரு நரி கத்துக்க வேண்டிய முதல் பாடம் தன் தகப்பன் பேச்சைக் கூட நம்பாதே என்பதுதான்.
செல்லமே! உலகம் சொல்லிக் கொடுக்கும் பாடம் இப்படித்தான் இருக்கும். வேதம் சொல்லும் பாடத்தைக் கேட்டால் சேதத்துக்கு வேலையில்லை!
11 நீங்கள் களவுசெய்யாமலும், வஞ்சனைபண்ணாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.
3. லேவியராகமம் 19 :11
John Saravanan
Permissions in this forum:
You cannot reply to topics in this forum