என் வழி தனி வழி
Sat Jul 11, 2015 2:43 pm
என் வழி தனி வழி : Path for Physically Challenged
பொதுப் பயன்பாட்டு கட்டிடங்களில் மாற்று திறனாளிகளுக்கென தனிப்பாதையோ வழிகளையோ வடிவமைக்காத மனநிலை தான் நமது பெரும்பான்மை கட்டிட அறிஞர்களுக்கு இருக்கிறது.
ஆனால், பிரான்ஸில் அப்படி அல்ல அங்குள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் மாற்று திறனாளிகளின் வீல்சேர்கள் சென்று வருவதற்கென தனிப்பாதையை 3 அடி அகலத்தில் கட்டாயம் அமைத்து விடுகிறார்கள். இதே விதிமுறைகளை வணிக வளாக கட்டிடங்களுக்கும் கட்டாயம் பின்பற்று கிறார்கள். அங்கு, ஒரு கட்டுமானத்தின் பணி நிறைவு சான்றிதழ் பெறுவதற்கு தேவையான பல விதிகளில் மாற்று திறனாளிகளுக்கான படிகட்டுப் பாதையும் ஒன்று.
இன்னொரு முக்கியமான விக்ஷயம். ஃப்ரான்சின் மக்கள்
தொகையில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 0.5% கீழேதான். ஆனால், இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 2.5% .மாற்றுத் திறனாளிகள் இருக்கிறார்கள்.
பிரான்ஸிடம் இருந்து நாம் இதை நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டும்.
Re: என் வழி தனி வழி
Sat Jul 11, 2015 2:55 pm
கிரேன் ராட்டினம் : Los Vegas Town
நீங்கள் காணும் இந்த கிரேன் ராட்டினம் ‘லாஸ்வேகாஸ் ’
நகரில் ஒரு உயரமான டவரில் பொருத்தப் பட்டிருக்கிறது. கட்டுமானத் துறைக்கு பயன்படும் பக்கட் கிரேன் போன்று வடிவமைக்கப் பட்டிருக்கும், இந்த ராட்டினத்தில் ஆறு பக்கட்டுகள் இணைக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு பக்கட்டில் இரண்டு பேர் அமர முடியும். ‘ரோலர் கோஸ்டர் ’என்கிற 250 மீட்டர் உயரமுடைய இந்த கட்டிடத்தில் உச்சியில் தான் இது பொருத்தப்பட்டிருக்கிறது.
உலகிலேயே மிக திரில்லான இராட்டின சவாரி இது தான்!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum