#மனு_ஸ்மிருதி_என்ன #சொல்கிறது:-
Fri Jul 10, 2015 6:26 pm
ராஜா ராசா
#மனு_ஸ்மிருதி_என்ன #சொல்கிறது:-
மனு தர்மம். மனு நீதி அப்படின்னு நிறைய பேர் சொல்லி கேட்டு இருக்கோம். அது என்னன்னு தெரியாம இருந்தது.
மனு நீதியோட ஆங்கில ஆக்கம் இணையத்துல படிக்க கிடைச்சது.
படிச்சு பார்த்தா. அது மனு தர்மமா தெரியலை. அதர்மமா தெரியுது.
உலகம் ஆரம்பத்துல இருட்டா தண்ணியில மூழ்கி கிடந்ததாம்.
அப்போ சுயம்புவா ஒரு பொன்னிற முட்டை சூரிய வெளிச்சத்தோட தோணுச்சாம். அதுலதான் பிரம்மன் இருந்தாராம். நாரா அப்படின்ற தண்ணியல அயணம் (வசித்தல்) செஞ்சதால அவருக்கு நாராயணா அப்படின்னும் பேராம்.
அப்பாலிக்கா அந்த முட்டை உடைஞ்சு அவர் வெளிய வர மேல் பகுதி சொர்க்கமாவும், கீழ்ப்பகுதி பூமியாவும் ஆச்சாம். அப்புறம் அவர் உலகத்தை படைக்க ஆரம்பிச்சாராம்.
நெருப்பு, காத்து, சூரியன் இதுல இருந்து அவர் ரிக், யஜீர், சாம வேதங்களை எடுத்து அதும்படி சிருஷ்டிய ஆரம்பிச்சாராம்.
அப்புறம் பஞ்சபூதங்கள், காலம், நல்லது கெட்டதெல்லாம் படைச்சுட்டு மனுசப்பயலை படைக்கணும்னு முடிவு பண்ணாராம்.
பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களை முறையே வாய், கை, தொடை, கால் இதிலிருந்து படைச்சாராம். (கதையா இருக்கே ?)
அப்புறம் மரிகி, அத்ரி, ஆங்கிரஸ், புலஹா, கிருது, பிரகதேஸ், வஷிஸ்டர், நாரதர் எல்லாரையும் படைச்சாராம்.
அப்புறம் யக்ஷர்கள், ராக்சசர்கள், அசுரர்கள் (யார் இவங்க?), கந்தர்வர்கள், அப்சரசுகள், நாகர்கள் எல்லாரையும் படைச்சாராம்.
கூடவே புல், பூண்டு பூச்சி, கால்நடை, வனவிலங்கு, பறவை. பாம்பு, மீனு எல்லாம் உட்கார்ந்து படைச்சிருக்காரு.
கிருத, திரேத, துவாபர கலியுகத்தை பத்தி அப்புறம் குறிப்பு இருக்கு.
பிராமணனோட தொழில் வேதத்தை படித்தல் சொல்லி கொடுத்தல்.
ஷத்ரியனோட தொழில் ஜனங்களை காத்தல், பரிசளித்தல் (யாருக்கு), வேதம் படித்தல்.
வைசியன் தொழில் கால்நடை பராமரிப்பு, வாணிகம், உழவு, பரிசளித்தல் (யாருக்கு), வேதம் படித்தல்.
இவங்க மூணு பேருமே பூணூல் தரிக்கலாம். முறையே பருத்தி, சணல், மற்றவை.
சூத்திரனுக்கு தொழில் ஒண்ணே ஒண்ணுதான். இவங்க மூணு பேருக்கும் சேவை செய்தல். அவன் வேதம் படிக்க கூடாது.
ஏன்னா தொப்புளுக்கு மேல இருக்கற பகுதி புனிதம். சுயம்புவான கடவுளுக்கு அதுல இருந்து பிறந்தவங்க புனிதம். அதுவும் புனிதமான வாயில இருந்து பிறந்தவங்க இன்னும் புனிதம். (வாட் ஈஸ் திஸ். மிஸ்டர் மனு.)
பிராமணர்களே யாவரிலும் அதிபுத்திசாலிகள் என்கிறார் மனு. அது இல்லாமல் பெயர் சூட்டும் விதிகளை வகுக்கிறார்.
பிராமணணின் முதல் பெயர் மங்களகரமானதாகவும், சத்ரியனின் முதல் பெயர் வீரமானதாக அதிகாரத்தைகுறிப்பதாகவும், வைசியனின் முதல்பெயர் செல்வத்தைக் குறிப்பதாகவும், சூத்திரனின் பெயர் விலக்கத்தக்கதாகவும் இருக்க வேண்டுமாம்.
அதே போல் இரண்டாவது பெயர் (குடும்பபெயர்) முறையே மகிழ்ச்சி, பாதுகாப்பு, செல்வத்தை குறிக்க சூத்திரனுக்கு மட்டும் அவனது தொழிலை குறிக்க வேண்டுமாம்.
பிராமணன் நான்கு சாதியிலும் திருமணம் செய்யலாம். சத்ரியன் சத்ரிய, வைசிய சூத்திர பெண்களை மணக்கலாம். வைசியன் வைசிய சூத்திர பெண்களை மணக்கலாம். சூத்திரன் சூத்திர பெண்ணை மட்டும் மணக்க வேண்டும்.
அனைவருக்கும் முதல் மனைவி அதே வர்ணத்தில் இருக்க வேண்டும்.
பிராமணண் கடும் விரதமேற்று குறைந்தது 9 ஆண்டுகளாவது வேதம் பயில வேண்டும். குறைந்தது ஒரு வேதத்தையாவது.
பிராமணன் எதை சாப்பிட வேண்டம் எதை சாப்பிடக்கூடாது என்றெல்லாம் சொல்லப் படுகிறது. வெங்காயம் வெள்ளப்பூண்டு சாப்பிடக் கூடாது. மந்திர நீர் தெளிக்கப்படாத இறைச்சியை சாப்பிடக்கூடாது. பன்றி, நாட்டுக்கோழி என்று சாப்பிடக்கூடாத லிஸ்ட் நீளுகிறது.
அரசன் எப்படி தண்டனை விதிக்க வேண்டும் என்பதெல்லாம் இருக்கிறது.
பிராமணனுக்கு வெறும் ஐந்து நாள் உபவாசமும் காயத்ரி மந்திர ஜபமுமாய் போகும் தண்டனை சூத்திரனுக்கு மரணத்தை விதிக்கிறது.
சூத்திரன் காதிலும் வாயிலும் ஈயத்தை காய்ச்சி ஊற்றச் சொல்லும் தண்டனைகள் இருக்கின்றன. மற்றவர்களுக்கு அப்படி இருப்பதாய் காணோம்.
ஒரு சில தண்டனைகள் சூத்திரனுக்க 8 மடங்கு பிராமணனுக்கு 64 மடங்கு என்று இருக்கிறது. அடடே என்று பார்த்தால் அது அபராதத் தொகையாக இருக்கிறது.
சூத்திரனுக்கு எந்த கட்டத்திலும் வேதத்தை சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறது.
பெண்களை இன்னும் சிறப்பாக வைத்திருக்கிறது மனுதர்மம்.
அவர்கள் வேதம் கற்கக்கூடாது. இயற்கையாகவே பெண் அலையாயும் மனம் உடையவள். அவர்கள் காவலில் வைக்கப்படவேண்டியவர்கள்.
நன்றி: http://araiblade.blogspot.in/2008/02/blog-post_22.html?m=1பதிவிலிருந்து
Re: #மனு_ஸ்மிருதி_என்ன #சொல்கிறது:-
Fri Sep 04, 2015 9:58 pm
Sirpi Rajanபகுத்தறிவாதிகள் *VS* மதவாதிகள் (RATIONALIST *VS* THEIST)
• பிராமணனுக்கும், வைசியப் பெண்ணுக்கும் திருமணம் நடந்து பிறந்த பிள்ளை அம்பட்டன் என்றும், சோரத்தால் பிறந்த பிள்ளை குயவர், நாவிதர் என்றும் பிரம்ம புராணம் கூறுகிறது!
• மேலும், பிராமணன்... சூத்திரப் பெண்ணுடன் திருமணம் செய்து பிறந்த பிள்ளை மீனவர் (அ) செம்படவர் என்றும், சோரத்தால் பிறந்த பிள்ளை வேட்டைக்காரன் என்றும் சொல்லுகிறது!
• பிராமணப் பெண்ணைச் சூத்திரன் விபச்சாரம் செய்து பிறக்கும் பிள்ளை சண்டாளன் எனவும் அந்நூலில் உள்ளது.
• பிராமணப் பெண்ணுடன் சண்டாளர் சேர்ந்து பிறந்த பிள்ளைகள்தாம் சக்கிலியர்களாம்!
சண்டாளர்களுக்கும், சத்திரியப் பெண்களுக்கம் பிறந்தவர்கள் ‘கனகர்’ என்று சொல்லப்படுகிற பொற்கொல்லர்களும், சாலியர் எனப்படும் நெசவாளர்களும் ஆவார் என்று எழுதப்பட்டுள்ளன.
இவற்றை நாம் சொன்னால் அடிக்க வருவார்கள். பிரம்ம புராணம் முதலான நூல்கள் சொல்லும்போது கும்பிட்டு ஏற்றுக் கொள்கிறார்கள்.
• வேறு வேறு சாதிக்காரர்கள் சேரும்போது பார்த்துக் கொண்டிருந்தவன் எவன்?
இவனுக்கு வேறு வேலை கிடைக்கவில்லையா?
பிரம்ம புராணம் சொல்லுகிறது......
• பிராமணனுக்கும், வைசியப் பெண்ணுக்கும் திருமணம் நடந்து பிறந்த பிள்ளை அம்பட்டன் என்றும், சோரத்தால் பிறந்த பிள்ளை குயவர், நாவிதர் என்றும் பிரம்ம புராணம் கூறுகிறது!
• மேலும், பிராமணன்... சூத்திரப் பெண்ணுடன் திருமணம் செய்து பிறந்த பிள்ளை மீனவர் (அ) செம்படவர் என்றும், சோரத்தால் பிறந்த பிள்ளை வேட்டைக்காரன் என்றும் சொல்லுகிறது!
• பிராமணப் பெண்ணைச் சூத்திரன் விபச்சாரம் செய்து பிறக்கும் பிள்ளை சண்டாளன் எனவும் அந்நூலில் உள்ளது.
• பிராமணப் பெண்ணுடன் சண்டாளர் சேர்ந்து பிறந்த பிள்ளைகள்தாம் சக்கிலியர்களாம்!
சண்டாளர்களுக்கும், சத்திரியப் பெண்களுக்கம் பிறந்தவர்கள் ‘கனகர்’ என்று சொல்லப்படுகிற பொற்கொல்லர்களும், சாலியர் எனப்படும் நெசவாளர்களும் ஆவார் என்று எழுதப்பட்டுள்ளன.
இவற்றை நாம் சொன்னால் அடிக்க வருவார்கள். பிரம்ம புராணம் முதலான நூல்கள் சொல்லும்போது கும்பிட்டு ஏற்றுக் கொள்கிறார்கள்.
• வேறு வேறு சாதிக்காரர்கள் சேரும்போது பார்த்துக் கொண்டிருந்தவன் எவன்?
இவனுக்கு வேறு வேலை கிடைக்கவில்லையா?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum