தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
அலுவலகத்தில் மகிழ்ச்சியாக இருக்க... Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அலுவலகத்தில் மகிழ்ச்சியாக இருக்க... Empty அலுவலகத்தில் மகிழ்ச்சியாக இருக்க...

Fri Jul 10, 2015 2:38 pm
அலுவலகத்தில் மகிழ்ச்சியாக இருக்க... கடைபிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்!
அலுவலகத்தில் மகிழ்ச்சியாக இருக்க... Happy-work-shutterstock-107639858-WEBONLYசமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றில்  வேலைக்குச் செல்பவர்களில்,  24% பேர் (உலக அளவில்), அலுவலக சூழலில் மகிழ்சியிழந்து காணப்படுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவர்களால் சரியாக வேலை செய்ய  முடியவில்லை, மன உழைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்கிறது இந்த ஆய்வறிக்கை.
அலுவலகத்தில் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என மனிதவள மேலாண்மை வட்டாரத்தில் பேசினோம். அவர்கள் தெளிவான விளங்கங்களை கொடுத்திருக்கிறார்கள். அவை இங்கே உங்களுக்காக...
1. காலம் தவறாமை!
அலுவலகம் ஆரம்பிக்கும் நேரத்திற்குள் அலுவலகம் வந்துவிட்டாலே உற்சாகம் நம்மை அரவணைத்துக் கொள்ளும். அது அன்றைய நாள் இறுதிவரை அலுவலகத்தில், குழுவில் மகிழ்ச்சியை உருவாக்கும். அதுமட்டுமின்று நாம் அணியும் ஆடைகளும் மகிழ்சியை நிர்ணயம் செய்வதால், சிறந்த ஆடைகளையே அலுவலகத்திற்கு அணிந்து செல்ல பழகுங்கள்.
ஆள் பாதி ஆடை பாதி என்பது அலுவலக சூழலின் மகிழ்ச்சிக்கும் பொறுந்தும். அதுமட்டுமில்லாமல் அலுவலக நண்பர்களுடன் எப்போதும் நட்பு பாராட்டுவதால் அலுவலக சூழலை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியும்.
அலுவலகத்தில் மகிழ்ச்சியாக இருக்க... Dollarphotoclub_70270528%20350
2. பதவி, பணியை அறிந்து செயல்படுங்கள்!
 தங்களின் அலுவலகத்தில் தங்களுக்கான பதவி, அந்த பதவிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பணி என்ன என்பதை தெளிவாக அறிந்து முதலில் அதை சிறப்பாக செயலாற்றுங்கள். அதன் பிறகு அடுத்தடுத்த பணிகளை தொடருங்கள். "ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகால்" என்று பணியாற்றும் போது அலுவலக சூழல் விரக்தியைத் தவிர வேறு எதையும் வழங்காது.
கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பதன் மூலம் சீனியர்களிடமிருந்தும் பாராட்டுகள் கிடைக்கும். இது ஒருவருக்கு உற்சாகத்தை கொடுக்கும். இந்த உற்சாகமே ஒருவரை மகிழ்ச்சியாக வேலை செய்ய வைக்கும்.

3. சீனியர்களின் அறிவுரையை ஏற்கவும்!

அலுவலகத்தில் தங்களுக்கு மேல் பணியாற்றும் சீனியர்களின் அறிவுரைகளை ஒருபோதும் தவிர்க்காதீர்கள். தவிர்ப்பதாலேயே அலுவலகத்தில் மகிழ்ச்சியின்மை ஏற்படுகிறது. அவர்கள் உங்களின் வளர்ச்சிப் பாதையின் வழிகாட்டியாக இருப்பார்களே தவிர வளர்ச்சியை தட்டிப்பறிக்க மாட்டார்கள். அவர்கள் தரும் அறிவுரைகளை வைத்து அதன்படி நடந்து கொள்ளும் போது வேலையையும் எளிமையாக்க முடியும், அதன் மூலம் நிம்மதியான சூழலையும் உருவாக்கிக் கொள்ளலாம்.

அலுவலகத்தில் மகிழ்ச்சியாக இருக்க... IStock_000027759225Large%203504. பாஸிட்டிவ் மனநிலை!

ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் நடக்கும் பாஸிட்டிவான விஷயங்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுங்கள். அலுவலகத்தில் உங்களை பற்றி யார் புறம் பேசினாலும் அதை கவனிக்காமல் செயலாற்றினாலே சந்தோஷமின்மையை தவிர்த்துவிடலாம்.
அதை பெரிதாக எடுத்துக் கொண்டு அதை பற்றி ஆழ்ந்து யோசிப்பதால் சோகம்தான் தொற்றிக் கொள்ளுமே தவிர, வேலைகளில் கவனத்தை செலுத்த முடியாமல் போய்விடும்.
மாறாக, பாஸிட்டிவ் மனநிலையுடன் பணியாற்றினால் மனம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருப்பதுடன், செய்யும் வேலையும் சீக்கிரமாக பிழையின்றி முடியும்.
5. அலுவலகம் Vs குடும்பம்!
இன்றைய நிலையில் பெரும்பாலானவர்களால், அலுவலக சூழலையும், குடும்பச் சூழலையும் பேலன்ஸ் செய்ய முடிவதேயில்லை. இதுவே ஒருவருக்கு அலுவலக சூழல் மகிழ்ச்சியில்லாமல் போவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.
அலுவலக நேரங்களில் குடும்ப விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்வதால், அலுவலக பணிகள் கெட்டு அதனால் மன உழைச்சலுக்கு ஆளாக வேண்டி இருக்கிறது. இதை தவிர்க்க, இரு வேறு சூழலையும் நிம்மதியாக கொண்டுசெல்வது எப்படி என்று ஆராய்ந்து செயலாற்றுவது அவசியம். 
 


-செ.கார்த்திகேயன்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum