பாசிப்பருப்பு டோக்ளா.. செய்வது எப்படி??
Thu Jul 09, 2015 7:54 am
தேவையானவை:
பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, கொத்தமல்லித்தழை, கேரட் துருவல், தேங்காய்த் துருவல், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், சமையல் சோடா, உப்பு சேர்த்துக் கலந்து, தயிர் விட்டு இட்லி மாவு பதத்துக்குக் கலக்கவும் (தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்). கலந்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, இதில் சேர்க்கவும். மேலாக தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை, கேரட் துருவல் தூவி, சிறு துண்டுகளாக நறுக்கிப் பரிமாறவும். #ரெசிப்பி #அவள்விகடன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum