தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பயமுறுத்துகிறதா உடல் பருமன்? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பயமுறுத்துகிறதா உடல் பருமன்? Empty பயமுறுத்துகிறதா உடல் பருமன்?

Mon Jul 06, 2015 10:46 pm
கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது.

கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்:
அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது. வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும்கூட உடல்பருமனுக்குக் காரணங்கள். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். கூடுதல் உடல்பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வாதம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.

உடல்பருமனுக்கு எளிய சித்த மருத்துவம்:

இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol) ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.

கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.

சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.

பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.

எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள் ஸ்பூனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.

சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:

தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.

நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:

இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள்.

தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பயமுறுத்துகிறதா உடல் பருமன்? Empty Re: பயமுறுத்துகிறதா உடல் பருமன்?

Mon Jul 06, 2015 10:51 pm
உடல் ஸ்லிம் ஆக வேண்டுமா...அதிகாலையில் விழித்தெழுங்கள்

அப்படி அதிகாலையில் விழித்து விடுபவர்கள் ஸ்லிம் ஆவதுடன் மகிழ்ச்சியாகவும், நல்ல உடல்நலத்துடன் இருப்பார்கள் என்று லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
லண்டனில் உள்ள பிரபல பல்கலைக்கழகம் ரோஹாம்டன் பல்கலைக்கழகம்.

இதில் ஆராய்ச்சிப் பிரிவில் உள்ள பேராசிரியர்கள், அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுபவர்களை பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், காலை யில் வெகு நேரம் கழித்து எழுபவர் களை விட அதிகாலையில் எழுபவர்கள் சுறுசுறுப்பாக இயங்குவதையும் மனதில் உற்சாகத்துடன் காணப்படுவதையும் உணர்ந்தனர்.

ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் 1068 பேரிடம் அவர்களின் தூக்கம், விழிப்பு பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பி பதில் பெற்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் சராசரியாக அதிகாலை 6.58 மணிக்குள் விழித்து விடுபவர்கள். இன்னொரு பிரிவினர் 8.54 மணிக்கு பின் எழுபவர்கள். இவர்களின் உடல் நலம், செயல்பாடுகள், தோற்றம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்தனர்.

அதில் அதிகாலையில் விழித்து விடுபவர்கள் பெரும்பாலும் ஸ்லிம் ஆக காட்சியளித்தனர். அவர்களிடம் காலையில் வேலை யை துவங்கும் போது காணப் படும் உற்சாகம் வெகு நேரம் நீடித்தது. அதே சமயம், லேட் ஆக எழுபவர்களிடம் உற்சாகம் குறைந்து காணப்பட்டது.

அதே போல், இரவில் அதிகமாக டி.வி. பார்ப்பவர்களே காலையில் தாமதமாக விழிக்கிறார்கள் என்பதும், அவர்களில் பலரும் காலை உணவை தவிர்த்து விடுகின்றனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டது.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பயமுறுத்துகிறதா உடல் பருமன்? Empty Re: பயமுறுத்துகிறதா உடல் பருமன்?

Mon Jul 06, 2015 10:58 pm
உடல் இளைக்க 9 முறை சாப்பிடுங்க

லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் உடல்பருமனை குறைப்பதற்கான வழிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இங்கிலாந்து, ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு செய்யப்பட்டனர். 

இவர்களுக்கு ஒரே கலோரி அளவுள்ள உணவு 6 முதல் 9 முறை கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

3 வேளையை 2 வேளையாக குறைப்பதாக கூறி அதிகமாக சாப்பிடுவது ஆபத்து. கொஞ்சம் கொஞ்சமாக 9 முறை சாப்பிடுவதால் ரத்தக்கொதிப்பு, கொழுப்பு கட்டுப்படும். உடல் எடையும் சீராகும். 

உண்ணும் உணவு ஊட்டச்சத்துள்ளதாக இருக்க வேண்டும், குறைவாக, போதிய இடைவெளி விட்டு சாப்பிடவேண்டும். இயற்கை உணவுகளை அதிகரித்து கொழுப்பு உணவை தவிர்ப்பது நல்லது. உடற்பயிற்சியும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பயமுறுத்துகிறதா உடல் பருமன்? Empty Re: பயமுறுத்துகிறதா உடல் பருமன்?

Mon Jul 06, 2015 11:01 pm
தொப்பை மற்றும் உடல் பருமனைக் குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள் :- 

1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

4. ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

5. பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

6. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

7. வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

8. கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும். 

9. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பயமுறுத்துகிறதா உடல் பருமன்? Empty Re: பயமுறுத்துகிறதா உடல் பருமன்?

Mon Jul 06, 2015 11:04 pm
உடல் பருமன் தவிர்க்க முடியாத பிரச்சனைகள் போல மாறிவிட்டது. அதை தவிர்க்க என்ன செய்யலாம். நம் நாட்டில் பொற்கொடி என்னும் கரிசலாங்கண்ணியை அடிக்கடி பருப்பு, நெய் சேர்த்து பொரியல், குழம்பு கடைசல் ஆக உணவு பதார்த்தமாக உண்பது வழக்கம். இதனால் உடம்பில் தேங்கிய கெட்ட நீர்கள் வெளியாவதுடன் உடல் பலம் பெற்று மலச்சிக்கல் நீங்கி புத்திக்குத் தெளிவும், ஆரோக்கியமும் கிடைக்கும். 

உடல் கனமும், பருமனையும், தொந்தியையும்குறைக்க விரும்புபவர்கள் நாள் தோறும் பகல் உணவில் இரண்டு முதல் நான்கு வாரம் தொடர்ந்து உண்டுவர, நல்ல பலனுண்டு. வாழைத் தண்டு, வெள்ளை முள்ளங்கி இவைகளைப் பொடியாக நறுக்கி, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து, பச்சையாக வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வர, அங்கங்கே விழும் சதை மடிப்புகள் மறையும். 

வாழைத் தண்டை வாரத்திற்கு இரண்டு முறையாவது உணவுடன் சேர்த்துக் கொள்ள உடல் பருமன் குறையும். மேலும் உடல் பலத்திற்கு காலையில் எழுந்ததும் தேன் 2 ஸ்பூன் எடுத்து கால் தம்ளர் பசும்பாலில் கலந்து பருகவும். 

இரவில கொண்டைக் கடலை 1 பிடி எடுத்துத் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் வேக வைத்து, அதனை வடிகட்டி அதில் சீமை அத்திப் பழம் 2, பசும்பால் அரை டம்ளர் கலந்து காய்ச்சி, கற்கண்டு சிறிது சேர்த்து, காலை நேரத்தில் பருகவும். 

ராகி, கோதுமை, புழுங்கல் அரிசி இவற்றை அரை கிலோ எடுத்து லேசாக வறுத்துப் பொடி செய்து, கஞ்சி செய்து, அதில் கால் ஸ்பூன் பொடியைக் கலந்து தினம் 1 வேளை பருகி வரவும். எல்லாவற்றுக்கும் மேலாக கீழ்க்கண்ட முறைப்படி கஞ்சி செய்து தினம் ஒரு வேளை கட்டாயம் பருக வேண்டும். 

பாதாம் பருப்பு -2, பிஸ்தா பருப்பு 5, கசகசா 1 ஸ்பூன் இவையனைத்தையும் மாலை நேரத்தில் கால் டம்ளர் பசும்பாலில் ஊற வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின் அதனை அப்படியே அரைத்து ஒரு டம்ளர் பசும்பாலில் காய்ச்சி பனங்கற்கண்டு சேர்த்து பருக வேண்டும். இப்படி 3 மாதம் சாப்பிட, உடம்பு கல் போன்று வலிமை பெறும்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பயமுறுத்துகிறதா உடல் பருமன்? Empty Re: பயமுறுத்துகிறதா உடல் பருமன்?

Mon Jul 06, 2015 11:24 pm
உடல் பருமனுக்கான தீர்வுகள்

உடல் பருமனை குறைக்க என்ன பண்றதுனு யோசிகரிங்களா உடல் பருமன் பிரச்சனையில் இரண்டு வகைகள் உண்டு.

1. உடல் முழுவதும் பருமனாக இருக்கும் மார்பிட் ஒபிஸிட்டி 
2. தொப்பை மட்டும் பெரிதாக இருக்கும் 'அப்டமினல்' அல்லது 'சென்ட்ரீபீடல் ஒபிஸிட்டி'.

மிக அதிக உடல் பருமன் கொண்டவர்களுக்கு சராசரி ஆயுட்காலத்தைவிட பதினைந்து வருடங்கள் குறைவான ஆயட்காலம் என்பது மருத்துவத்தால் நிரூபிக்கப்பட்ட உண்மை. இவர்களுக்கு இதய நோய்கள், ரத்தத்தில் அதிக கொலஸ்ஸட்ரால், சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

என்ன கரணம் உடல் பருமனாக!

உடல் ஆரோக்யமாக இருக்க உண்ணும் உணவு சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும் கார்போ ஹைட்ரேட் புரதம் கொழுப்பு வைட்டமின் மினரல் போன்றவை சமசீர் அளவு இருக்க வேண்டும்.இதில் கார்போஹைட்ரேட் என்பது உடல் இயங்குவதற்கான சக்தியைத் தரக்கூடியது.

2. புரதம் உடலின் கட்டமைப்புகளில் பங்கேற்கிறது. தசை, கல்லீரல், அடிபட்ட எலும்பைச் சேர்க்கிறது என்றால் அது புரதத்தின் வேலையே!

இதன் அடிப்படை அங்கம் அமினோ அமிலம். உணவில் புரதம் சைவமாகவும் இருக்கலாம், அசைவமாகவும் இருக்கலாம். சென்னா, பொரி கடலை, பருப்பு, வகைகள் போன்றவை சைவ புரதம். பால், முட்டை போன்றவற்றில் இருக்கும் புரதம் எளிய அசைவ புரதம். மட்டன், சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றில் இருக்கும் புரம் சிக்கலான அசைவ புரதம்.

3. கொழுப்பு: வனஸ்பதி, தேங்காய் எண்ணெய், சன் பிளவர் ஆயில் போன்றவை சாதாரண கொழுப்பு. மாட்டிறைச்சி, சிக்கன், மட்டன் போன்றவற்றில் இருக்கும் கொழுப்பு அசைவ கொழுப்பு. இதில் சிக்கனில்தான் கொஞ்சம் கொழுப்பு குறைவாக உள்ளது.

4. விட்டமின்களை உடலால் தனியாகத் தயாரித்துக் கொள்ள முடியாது. அதனை நாம்வெளியில் இருந்து தான் உட்கொள்ள வேண்டும். இது உடலின் பல செயல்முறைகளுக்கான என்சைமாக பயன்படுகிறது.

கனிமங்கள், தாதுப்பொருட்களை சோடியம், துத்தநாகம், நிக்கல், கோபால்ட் போன்ற உணவில் சேர்;ந்துள்ள மினரல்களை நாம் தினசரி உணவு லிஸ்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அத்தோடு ஒரு லிட்டரிலிருந்து இரண்டு லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதும் சமச்சீர் உணவில் அடங்குகிறது.உணவில் சரியான விகிதம் பார்க்கும்போது கார்போஹைட்ரேட் 40-50 சதவீதம், புரதம் 30-40 சதவீதம், கொழுப்பு 10 சதவீதம் இருக்க வேண்டும்.

மக்கள் நிறைய சாப்பிடுகிறார்கள். ஆனால் சரிவிகித உணவை சரியான அளவில் சாப்பிடுவதில்லை.நெய், வெண்ணெய், எண்ணெய் போன்றவற்றை அளவோடு சாப்பிட்டால் நல்லது. பிஸ்கட், கேக் போன்றவற்றில் வெண்ணெய் இருக்கிறது. உடல்பருமன் இருப்பவர்கள் இவைகளைத் தவிர்ப்பது நல்லது. எண்ணெய் இல்லா சப்பாத்தி அல்லது சுக்கா ரொட்டி நல்ல செலக்ஷன்.

புழுங்கலரிசி போன்றவற்றிலிருந்து சிக்கலான கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.

புரதத்தில் சைவ புரதம் நன்று.

ஆனால் நீங்கள் அசைவ உணவு உண்பதில் நாட்டமுடையவர்களாக இருப்பின் சிக்கன், முட்டை, மீன் எடுத்துக் கொள்வது நல்லது. இரால், மட்டன் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் புரதத்தில் நிறைய கொழுப்பும் இணைந்து வருவதால் முடிந்தவரை அதைத் தவிர்ப்பது நல்லது.

பச்சை நிற காய்கறியிலிருந்து விட்டமின்கள், மினரல்கள் நிறைய கிடைக்கும். அதனை உண்பதும் மிக நல்லது. அத்தோடு போதிய தண்ணீர் அருந்துவதும் அவசியம்.

மேற்சொன்ன விகிதித்தில் உணவைக் எடுத்துக் கொள்ளாமல் கொழுப்பு அதிகம் சேர்ந்த உணவுகளை எடுத்துக் கொண்டு போதிய உடற்பயிற்சி இல்லாமல் உடல் பருமன் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.
Sponsored content

பயமுறுத்துகிறதா உடல் பருமன்? Empty Re: பயமுறுத்துகிறதா உடல் பருமன்?

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum