கட்டிடப் பொறியாளருக்கு கச்சிதமான செக் லிஸ்ட்
Mon Jul 06, 2015 4:49 pm
கட்டிடப் பொறியாளருக்கு கச்சிதமான செக் லிஸ்ட்
---------------------------------------------------------------------------------------
ஒரு சிவில் பொறியாளரின் ‘டெய்லி செக் லிஸ்ட்’ இப்படித்தான் இருக்க வேண்டும்.
1. காலை வணக்கம்.
2. சக மனிதர்களுடன் பகிர்தல்.
3. உடனடியாக இன்றைய வேலையைப் பற்றிய குறிப்பு எடுத்தல்.
4. முக்கியமான வேலை, அவசரமான வேலையென முறைப்படுத்துதல்.
5. மனதிற்கு பிடித்த, மனதிருப்தியைக் கொடுக்கக் கூடிய சூழ்நிலையை எதிர்நோக்கி, ஒவ்வொரு நிமிடமும் தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும்.
6. கடினமான வேலையைக்கூட குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க சக நண்பர்களுடன் பகிர்தல் வேண்டும்.
7.சுறுசுறுப்பாகவும், திறமையாகவும் செயல்படுதல், பலரை சந்தித்து செயல்பட வேண்டிய சூழலில் வேலையைச் செய்திட வேண்டும்.
8. மதிய உணவை பிடித்தவருடன் பகிர்ந்து உண்டு, சிறிது நடைபயிற்சி செய்தல்.
9. முடித்த வேலைக்கு குறிப்பு வைத்துக் கொள்வதுடன், செய்ய வேண்டிய வேலைக்கு தன்னை தயார் செய்து கொண்டு, சுறுசுறுப்புடன் வேலையை எதிர்நோக்கி இருத்தல்.
10. அன்று செய்து முடித்த வேலையின் தரத்தைப் பற்றி சக ஊழியருடன் பகிர்தல்.
11. வேலையில் அதிகாரியை சந்திக்கும்பொழுது, தான் செய்யும் வேலையின் தரத்தைப் பற்றியும், எவ்வாறு செயல்பட்டு வேலையில் முன்னேறிக்கொண்டு இருக்கின்றோம் என்பதைப் பற்றியும் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
12. சாமான்களை, பொருட்களை எடுத்த இடத்தில் வைத்து, இடத்தை சுத்தம் செய்தல்.
13. மிக முக்கியமாக அனைவருக்கும் முன்பே ஒரு சிவில் பொறியாளர்தான் கட்டுமானப் பணியிடத்தில் சென்று இருக்க வேண்டும்.
நமக்கு நாமே கேட்க வேண்டிய கேள்விகள்
1. இந்த மாதம் நாம் அடைய வேண்டியதை அடைந்தோமா?
2. செய்ய வேண்டியதை செய்து விட்டோமா?
3. நாம் செய்யும் செயலில் இன்னும் கொஞ்சம் முன்னேற முடியுமா? என்ன வகையில்?
4. இந்த மாதம் நேரத்தை எவ்வளவு வீணாக்கினோம்?
5. எதை பிறகு செய்யலாம் என்று தள்ளிப் போட்டோம்? அவை எது? ஏன் செய்யவில்லை?
6. மற்றவர்கள் நம்மை விரும்பும்படி நடந்து கொண்டோமா?
7. எதைக் கண்டு பயப்படுகிறோம்? அதை போக்க முயற்சி செய்தோமா?
8. திறமைகளை வளர்த்தோமா?
9. வரவு செலவு கணக்கு இருக்கா?
10. தேவையில்லாதவைக்கு எவ்வளவு நேரத்தை வீணாக்கினோம்?
11. வேலையில் அடிக்கடி தவறு ஏற்படுகிறதா?
12. யாரையாவது பார்க்க பயப்படுகிறோமா?
13. நாளாக, நாளாக, நம்பிக்கை வளர்கிறதா?
14. குறிக்கோள் என்ன? அதை நோக்கி செல்கின்றோமா?
15. இன்று புதிதாய் எதைக் கற்றோம்?
16. நம்மிடம் உள்ள குறை என்ன? அதைக் களைய எப்படி செயல்படுவது?
ஒரு பணியை செய்து முடிப்பதால் அது நமது இலக்கை அடைய உதவுகிறது என்றால் அவசிய வேலை என்றும் அழைக்கப்படும்.
அவசர வேலையை செய்யவில்லையேல் பிரச்சனை உண்டாகிவிடும். எனவே அவசர வேலை, அவசரமில்லாத வேலை, அவசியமான வேலை, அவசியமில்லாத வேலை என பிரித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு தினத்தின் முடிவில்
1. எப்பொழுது பணியைத் தொடங்கினோம்?
2. சற்று முன்னமே தொடங்கி இருக்க வேண்டுமா?
3. வேலையின்போது கவனம் வேறு எங்காவது சென்றதா?
4. ஏன், எப்படி திசை திரும்பியது?
5. அதை தவிர்த்து இருக்கலாமா?
6. திட்டமிட்டபடி நடந்துள்ளதா?
7. அதிக அளவு குறுக்கீடு ஏற்பட்டது யாரால்? எதனால்?
8. ஏதாவது பணியை ஒத்திப்போட நேர்ந்ததா? ஏன்?
9. எப்படி இயங்கி இருக்க வேண்டும்?
என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கண்ட பிறகே அன்றைய நாளை முடிக்க வேண்டும்.
படிப்பை முடித்த உடனேயே நாம் பொறியாளராகி விட்டோம் என்கிற நினைப்பு நமக்கு வந்தால், புதிய விக்ஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஒரு மெத்தனம் வந்துவிடும். 5 வருடம் சிவில் படிக்கிறோம் என்றால் 3 வருடமாவது களப்பணியில் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும்.
களப்பணியிலுள்ள நுணுக்கங்கள், சமகால சந்தை நிலவரங்கள் இவற்றையெல்லாம் நன்கு கற்றுத் தேர்ந்த பிறகுதான் நம்மால் சிறந்த பொறியாளராக விளங்க முடியும்.
சில பொறியாளர்கள் ஒன்றிரண்டு வீடுகளைக் கட்டத் துவங்கிய உடனேயே கட்டுநராகிவிட வேண்டும் என்றும் நினைப்பதுண்டு. ஆனால், கட்டுமானத்துறையில் நிலைத்து நிற்பதற்கு படிப்பறிவுடன் அனுபவ அறிவும் நிரம்ப வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்.
- Er. AG. MARIMUTHU

Permissions in this forum:
You cannot reply to topics in this forum