கேளுங்க ... கேளுங்க... நல்லா கேளுங்க
Thu Jul 02, 2015 9:34 pm
தலைக்கவசம் கொடுங்கள்
ஓட்டுநரின் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யவதுக்கு பதில், 1000 ரூபாய் வாங்கி கொண்டு ஒரு நல்ல தலைக்கவசம் கொடுங்கள், நிச்சயம் மறுமுறை தலைக்கவசம் இல்லாமல் வரமாட்டான்,
அப்படியே வந்தால் மறுபடியும் ஒரு 1000 ஒரு நல்ல தலைக்கவசம், மறுபடி வருவானா? அட மறுபடியும் வந்தால் மறுபடியும்,ஒரு 1000 ஒரு நல்ல தலைக்கவசம், மறுபடி வருவானா? நிச்சயம் மறுபடி வரமாட்டான் எத்தனை தலைக்கவசம் வாங்குறது,
இதே மாதிரிதான் வாகன இன்சூரன்சும், 800 ரூபாய் வாங்கிகொண்டு இன்சூரன்சு போட்டு கொடுத்துடுங்க மறுபடி நிச்சயமா அவன் இன்சூரன்சு இல்லாமல் வரமாட்டான்,
அதே போல் ஓட்டுநரின் உரிமம் இல்லாமல் வந்தால் LLR போட்டு கொடுங்க, ஒரு வருடத்தில் அனைவரும் அனைத்தும் வைத்து இருப்பான்
ஆட்சியாளர்களே செய்வீர்களா?
Re: கேளுங்க ... கேளுங்க... நல்லா கேளுங்க
Fri Jul 03, 2015 7:16 am
Babu Pk
ஹெல்மெட் கட்டாயமாக்கலில் எனக்கு உடன்பாடில்லை. இது மக்களின் உயிர்மேல் அக்கறை கொண்டு ஏற்படுத்தப்பட்ட சட்டமாகத் தெரியவில்லை.
அப்படியெனில்,
1. தரமான ஹெல்மெட்டுகள் மட்டுமே சந்தையில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதா?
2. பல்வேறு அளவுகளில் ஹெல்மெட்டுகள் தயாரிக்க நிறுவனங்களுக்கு கூறப்பட்டுள்ளதா?
3. விதி மீறல்களின் போது போலீசார் லஞ்சம் வாங்காமல் தடுத்திட என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?
4. 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்றால், அதற்கு கீழுள்ளவர்களின் உயிர்களுக்கு மதிப்பில்லையா அல்லது அவர்கள் இருசக்கர வாகனத்தில் பயணிக்கக்கூடாதா?
5. விபத்துகள் நேராமல் இருக்க, சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதா?
6. கனரக வாகனங்களின் போக்குவரத்துகள் கட்டுக்குள் உள்ளனவா?
7. வாகன ஓட்டுனர் உரிமம் முறையான தேர்வில்தான் வழங்கப்படுகின்றதா?
8. ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டால் அவர் வேறு ஒரு போக்குவரத்து அலுவலகத்தில் உரிமம் எடுக்க முடியாமல் இருக்க ஏற்பாடு இருக்கின்றதா?
9. அலுவலகங்கள், போகுமிடங்களில் வண்டிகளுக்குப் பார்க்கிங் இருப்பது போல் ஹெல்மெட்டுகளைப் பாதுகாக்கவோ வைக்கவோ வசதி இருக்கிறதா?
நடைமுறைச் சிக்கல்கள்.
1. கொண்டை வைத்துள்ளோர்கள் ஹெல்மெட் போடுவது சிரமம்.
2. சிறுவர்களின் அளவிற்கு ஹெல்மெட் இல்லை.
3. நடுத்தரவர்க்கத்தினர், கணவன் மனைவி இரு குழந்தைகள் என ஒரு இருசக்கர வாகனத்தில் பயணிக்கின்றனர். (அதுவே தவறு.) நான்கு ஹெல்மெட்டுகள் போட்டுக்கொண்டு போய் எங்கே கழட்டி வைப்பார்கள், அதனை எப்படிப் பாதுகாப்பார்கள்?
4. ஹெல்மெட் அடிக்கடி தொலையவும் திருடு போகவும் வாய்ப்பு உள்ள நிலையில் திரும்பத் திரும்ப வாங்கிட மக்களால் முடியுமா? பெட்ரோல் விலை உயர்வோடு ஹெல்மெட் விலையும் சேர்ந்து கொண்டால் என்னதான் செய்வார்கள்?
இது போலீசார் லஞ்சம் வாங்கவும், லஞ்சம் கொடுத்தால் தப்பு செய்யலாம் என்று பொதுமக்களின் எண்ணம் வளரவும்தான் வழி செய்யும்.
மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு, புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்றெல்லாம் சொல்லி மக்கள் உடல் நலத்தைக் கெடுக்கும் அரசு, ஹெல்மெட் போடாமல் பயணிப்பது உயிருக்கு ஆபத்து என்று தெருவெங்கும் அறிவிப்பு வைப்பதோடு நின்று கொள்ளலாம். பிடுங்க வேண்டிய ஆணிகள் நிறைய இருக்கும்பொழுது இந்த தேவையற்ற ஆணியைப் பிடுங்க வேண்டியதில்லை.
மொத்தத்தில் இது ஒரு பொதுஜனவிரோதப் போக்கு.
இனி உங்கள் கருத்துகள்.....
பின்குறிப்பு : இந்தப் பதிவு ஹெல்மெட் கூடாது என்பதற்காக அல்ல. கட்டாயப்படுத்தலில் நியாயம் இல்லை என்பதைச் சொல்வதற்காகத்தான்.
Re: கேளுங்க ... கேளுங்க... நல்லா கேளுங்க
Wed Jul 08, 2015 8:28 pm
நல்லா சொல்றாங்கப்பா டீடெயில்
ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம் ....
ஊழல் மந்திரிகளின் பதவிக்கான ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் ....
பல மாடி கட்டிடங்களால் பல பேர் பலியாகியும் கட்டுவதற்கு உரிமம் கொடுத்த அதிகாரியின் ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள்
தவறான மருத்துவத்தால் பல பேர் பலியாகியும் மருத்துவம் கொடுத்த மருத்துவரின் சான்றிதழ்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள்
ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் ....
மலைகளே காணாமல் போகும் அளவிற்கு கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல் செய்யமாட்டார்கள்
மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும் ஹெல்மெட்டுக்காக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படுமாம் ...
சிரிப்பு சிரிப்பா வருதுங்க .....
#பழனி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum