தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
வணிக வளாகங்கள் கட்டும்போது கவனிக்க... Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வணிக வளாகங்கள் கட்டும்போது கவனிக்க... Empty வணிக வளாகங்கள் கட்டும்போது கவனிக்க...

Thu Jul 02, 2015 3:04 am
நகரங்களின் அடையாளங்களும் தற்போது வணிக வளாகங்களும் முக்கிய இடம் பெற்றிருக்கின்றன. பொதுவான ஒருங்கிணைப்புப் பாதைகளுடன் கூடிய, பல்வேறு வகையான வணிக நிறுவனங்களைத் தன்னகத்தே உள்ளடக்கியுள்ள, ஒன்று அதற்கு மேலான எண்ணிக்கையிலான கட்டிடங்களை உடைய வணிகக் கூட்டமைப்பு மால் (Shopping Mall) எனஅழைக்கப்படுகிறது. இத்தகைய மால்களில் ஒரே கூரையின் கீழ் அனைத்துவகைப் பயன்பாட்டுப் பொருட்களும் கிடைப்பதுடன், திரையரங்குகள், பொழுதுபோக்கு நிலையங்கள் மற்றும் உணவகங்களும் இடம் பெறுகின்றன.

திறந்தவெளி மைதானங்களில் தனித்தனி சில்லறை வணிக நிறுவனங்களைக் கொண்ட வணிக வளாகம் எனப்படுகிறது. ஆனால், மால் என்பது முற்றிலும் நான்கு புறச் சுவருக்குள், வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் தொடர் கூரையுடன் அடக்கப்பட்ட பல்வேறு வகையான வணிக நிறுவனங்களைக் கொண்ட கட்டிடமாகும்.இவை பல மாடிகளைக் கொண்ட அமைப்பாகவும் இருக்கலாம். இத்தகைய மால்களை வடிவமைக்கும் போது பல விக்ஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியதுள்ளன.

வணிக வளாகங்களுக்கான சர்வதேச ஆலோசனை மன்றம், வணிக நிறுவனங்கள், பொதுவாக விற்பனை நிலையங்கள் அமையும் தரைப்பரப்பளவு மற்றும் அவை சேவை செய்யக்கூடிய நகரங்கள் மற்றும் கிராமங்களடங்கிய நிலப்பரப்பளவு ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றை எட்டு வகைகளாகப் பிரித்து, அவை ஒவ்வொன்றிற்கும் செய்யப்பட வேண்டிய அமைப்பு வசதிகளை நிர்ணயம் செய்து பரிந்துரை செய்கிறது. குறிப்பாக, இத்தகைய பெருங்கட்டிடங்கள் தேவையான வலிமை பெற்றவையாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், இவை சுற்றிலும் அடைக்கப்பட்டுள் ளவையாதலால், தீவிரவாதிகளின் தாக்குதல், தீ விபத்து போன்ற சந்தர்ப்பங்களில், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அதற்கேற்ப விதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில முக்கிய தேவைகள் குறிது கீழே காணலாம்.

1) வணிக மால்கள், பொதுமக்கள் அதிக அளவில், குறிப்பாக விழாக் காலங்களில் மிக அதிக அளவில் கூடும் இடம். இத்தகைய இடங்களில் தாக்குதல் நடத்துவதன் மூலம் பெருமளவில் உயிர்ச்சேதம் மற்றும் பொருள் சேதத்தை ஏற்படுத்தலாம் என்பதாலும், இத்தகைய மால்களுக்குள் நுழைவது எளிது என்பதாலும், தீவிரவாதிகள் தங்கள் நடவடிக்கைகளுக்கு மால்களைத் தேர்வு செய்கின்றனர். ஆகவே, தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில், தேவையான அளவில் பாதுகாவலர் நியமனம், நுழைவு வாயில் சோதனை ஏற்பாடுகள், இரகசிய கேமராக்கள் மூலம் தொடர் கண்காணிப்பு, இடர்கள் நேரிடும்போது பொதுமக்களைப் பாதுகாப்புடன் வெளியேற்றப் போதுமான வழிகள் மற்றும் அறிவிப்பு அமைப்புகள் போன்றவை செய்யப்பட வேண்டும்.

2) வணிக மால்களில் பலவகைப் பொருட்கள், பல மனிதரால் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே, மின் இணைப்புகள் மற்றும் பயன்பாடுகள், வாயு இணைப்புகள் மற்றும் எரிபொருள் பயன்பாடுகளில் சிறிய தவறுகள் பெரிய அளவில் தீ விபத்துக்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

ஆகவே, வணிக மால்களில் தீயணைப்புக் கருவிகள் அங்கங்கு பொருத்தப்படுவதோடு, அவற்றைப் பயன்படுத்துவதற்கு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். தீயை அணைக்கத் தேவையான நீர்தேக்க வசதி மற்றும் இணைப்புக் குழாய் வசதி, குறிப்பிட்ட இடங்களில் வால்வுகளுடன் அமைக்கப்பட வேண்டும். 
தீ விபத்து ஏற்படும்பட்சத்தில், அது உடனே சென்சார் கருவிகள் மூலம் உணரப்பட்டு, கட்டிடம் முழுவதும் ஒலிக்கக்கூடிய தானாக இயங்கும் அபாய அறிவிப்பு மணிகள் பொருத்தப்பட வேண்டும்.

மேற்கூறப்பட்ட இரு சந்தர்ப்பங்களிலும், வாடிக்கையாளர்களும், பணியாளர்களும் விரைந்து வெளியேற்றப்பட வசதியாக கட்டிடத்தின் நான்கு பக்கங்களிலும் பெரிய கதவுகள் அங்கங்கு அமைக்கப்படுவது முக்கியம். ஒன்று அல்லது இரண்டு பாதைகளை மட்டும் கொண்ட மால்களில் இத்தகைய நேரங்களில் நெருக்கித் தள்ளலால் அநேகர் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. அதோடு, பொருட்களை வாங்கி முடித்தவர்கள் உடனுக்குடன் அங்கங்கு வெளியேறுவதால் உட்புறப் பாதைகளில் தேவையற்ற நெருக்கடி குறையும்.

3) மால்கள் அமையும் கட்டிடங்களில் கனமான வீட்டு உபயோகப் பொருட்கள் அதிக அளவில் சேமிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, இக்கட்டிடங்களின் தரைப் பாளங்கள், உத்திரங்கள், தூண்கள் போன்ற முக்கிய உறுப்புகள், இந்திய தர நிர்ணயக் கழகம், சேமிப்புடன் கூடிய வணிகக் கட்டிடங்களுக்காக நிர்ணயித்துள்ள பளுக்களைப் பாதுகாப்புடன் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். தீ விபத்து நேரிடும்போது, இவ்வுறுப்புகள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது தீயினால் ஏற்படும் வெப்பத்தைப் பாதுகாப்புடன் தாங்கும் வண்ணம் அவற்றின் அளவுகளும், கம்பிகளுக்கான கவர்களும் அளிக்கப்பட வேண்டும். 

4) மால்களில் அமைக்கப்படும் உள் சுவர்கள், கண்ணாடிகளாலான தடுப்புச் சுவர்கள் போன்றவை, குறைந்தபட்சம் சிறிய அளவிலான நில அதிர்வுகள் மற்றும் புயல்களைத் தாங்கக் கூடியவைகளாக அமைக்கப்பட வேண்டும். 

5) பொதுவாக, ஒவ்வொரு மால்களிலும் பெரும்பான்மை மக்களால் விரும்பப்படும் ஒன்று அல்லது இரண்டு பிரதான கடைகள் அமைந்திருக்கும். இவற்றை நம்பி பல சிறு கடைகளும் காட்சி நிலையங்களும், மால்களில் இடம் பெற முயற்சிப்பர். ஏனெனில், இத்தகைய கடைகளைத் தேடி வரும் வாடிக்கையாளர்களை விட, மேற்கூறப்பட்ட பிரதான நிறுவனங்களுக்கு வருகை புரியும் வாடிக்கையாளர்கள், வழியில், நடைபாதைகளின் இருபுறமும் அமைந்துள்ள இச்சிறு கடைகளைப் பார்க்கும் போது அவற்றினுள் நுழைந்து பொருட்களை வாங்குவோரே அதிகமாயிருப்பார்கள். 

ஆகவே, வணிக நிறுவனங் களுக்கான இருப்பிடங்கள் திட்ட மிடுகையில், மக்களை ஈர்க்கக்கூடிய பிரதான நிறுவனங்களை கட்டிடத்தின் நுழைவாயில்களின் அருகிலோ, ஒன்றுக்கொன்று அடுத்தடுத்தோ அமைக்காமல், ஏனைய சிறு நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள் வழியாகச் சென்றடையும் வகையிலும், இரு பிரதான நிறுவனங்களுக்கிடையே பல சிறிய, முக்கியமற்ற கடைகள் அமையும் வண்ணம் திட்டமிட வேண்டும். இதன் மூலம் மாலின் மொத்த விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 

6) பிரதானமான மால்களுக்கு அதிக தூரங்களிலிருந்து கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வாடிக்கையாளர் மற்றும் பணியாளர்கள் வருவார்களாதலால், போதிய அளவில் வாகன நிறுத்துமிடத்துடன் மால் திட்டமிடப்பட வேண்டும். போதிய இடவசதியற்ற பெரு நகரங்களில், கீழ்த்தளம் அல்லதுகுட்டையான தரைத்தளம் அமைத்து வாகன நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப்படலாம். அல்லது மால்களுக்கு அருகில் உள்ள காலி இடங்கள் வாடகைக்கு பெறப்பட்டு, வாகன நிறுத்த ஓட்டுநர்கள் மூலம் வாகனங்கள் நிறுத்தப்படலாம். 

எக்காரணம் கொண்டும், மால் கட்டிடங்களைச் சுற்றி, வாகனங்களின் போக்குவரத்திற்காகவும், தீ விபத்து போன்ற இடர்பாடுகளின் போது மீட்பு வாகனங்களின் போக்குவரத்திற்காகவும் அமைக்கப்பட்டுள்ள பாதைகள் வாகன நிறுத்துமிடமாகப் பயன்படுத்தலாகாது.

7) மால்களுக்கு வயதான வர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி கள் பலர் வருவார்கள். பன்மாடிக் கட்டிடங்களில் இயங்கும் மால்களுக்குப் போதிய எண்ணிக் கையில் மேல் தூக்கிகள் மற்றும்நகரும் படிக்கட்டுகள் அமைக்கப் பட வேண்டும். இவை நிர்ணயிக் கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தனவாயும், மின்தடைகளின் போது மாற்றுச் சக்தியில் இயங்கக் கூடியவையாயும் இருக்க வேண்டும். படிக்கட்டுகள் சிறுவர் மற்றும் முதியோர் இலகுவாக ஏறி இறங்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும். 

Cool நம் மாநிலத்தில் மின் பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்சினை. ஆகவே, முழுவதும் மின்சக்தியை மட்டுமே சார்ந்திராமல், சூரிய ஆற்றல், காற்றாலை, ஜெனரேட்டர், பேட்டரிகள் போன்ற மாற்றுச் சக்திகள் மூலம் பாதுகாப்பு சாதனங்கள், விளக்குகள் ஆகியவை இயக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

9) மால்களில், வாடிக்கையாளர்கள் அமர்ந்து ஓய்வெடுக்க போதிய அளவில் வசதியான இருக்கைகளுடன் கூடிய திறந்தவெளி/மூடப்பட்ட காலியிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். 

10) பன்மாடி மால் கட்டிடங்களில் படிக்கட்டுகள், வான்திறப்புகள், நடைபாதைகள் ஆகியவற்றின் பக்கங்களில் யாரும் கீழே விழுந்துவிடாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் படிகளில் பொருட்களைச் சுமந்து செல்வது தவிர்க்கப்பட்டு, வாங்கிய பொருட்களைத் தரைத்தளத்தில் பெறும் வசதி செய்யப்பட வேண்டும். 

11) பொருட்களை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கும் இடம், பிரதான நுழைவாயில்களுக்கு அருகில் இல்லாமல், கட்டிடத்தின் பின் பகுதியில் வெளியேறும் வாயில்களுக்கு அருகில் அமைக்கப்பட வேண்டும். வாகனங்களில் வந்துள்ளவர்கள் பொருட்களை வாகன நிறுத்துமிடங்களுக்கு எடுத்துச் செல்ல தள்ளு வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

12) வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர் பயன்பாட்டிற்கு நவீன கழிவறைகள் அமைக்கப்பட வேண்டும். கழிவறைப் பயன்பாட் டுக்கு மட்டுமின்றி தீ விபத்து சமயங்களில் பயன்படுத்தப்படத் தேவையான நீர் தேக்கத் தொட்டி கள் அமைக்கப்பட வேண்டும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், பொதுமக்கள் அதிக அளவில் கூடக்கூடிய வணிக மால் கட்டிடங்கள், அவற்றின் மீது சுமரக்கூடிய பளுக்களைப் பாதுகாப்புடன் தாங்கும் உறுதி படைத்தவையாகவும், நிறுவனங்களையமைக்கும் பயனீட்டாளர்களின் பயன் பாட்டிற்கு ஏற்றவையாகவும், வசதிகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்பவையாயும் மால்கள் அமையும்படி நமது பொறியாளர்கள் திட்டமிட்டு கட்டுதல் வேண்டும்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum