உண்மையான டிஎம்டி கம்பிகளை நாம் எப்படி அறிய முடியும்?
Thu Jul 02, 2015 2:51 am
எது ரியல் கம்பி?
--------------------------
உண்மையான டிஎம்டி கம்பிகளை நாம் எப்படி அறிய முடியும்?
சரியான பதப்படுத்தல் மூலம் கிடைக்கும் கம்பியின் நிறத்தை பார்த்தே சிலர் அறிந்து கொள்வார்கள். ஒரு அடி நீளமுள்ள கம்பியை ஒரு முனையில் பிடித்துக் கொண்டு மறுமுனையை தரையில் ஒரு தட்டு தட்டும் போது கம்பியில் அதிர்வுகள் ஏற்படுவதை உணர முடிந்தால் அது தரமான டிஎம்டி கம்பி என்றும், அதிர்வு எதும் ஏற்படவில்லையென்றால் அது வேறு வகை கம்பி என்றும் அறிந்து கொள்ளலாம்.
மேலும், டிஎம்டி கம்பிகள் வாங்கும் போது அதில் சோதனை செய்யப்பட்ட சான்றிதழ் உள்ளதா? ஐ.எஸ்.ஐ தரச் சான்றிதழ் பெற்றவையா? கம்பிகளின் மேல் தர முத்திரை உள்ளதா?பயன்பாட்டாளர்கள் மற்றும் கட்டிட பொறியாளர்களின் அங்கீகாரம் பெற்ற வர்த்தகப் பெயர் கொண்ட தயாரிப்புகளா? என்பதை உறுதி செய்ய வேண்டியது மிக மிக அவசியம்.
எண்ணெய் பிசுக்கு, சேறு, மண் போன்ற எந்த அசுத்தங்களும், ‘பிசிறு’களும் கம்பிகளில் இருக்க கூடாது. இந்த அசுத்தங்களை முழுமையாக சுத்தம் செய்த பிறகே கட்டுமானப் பணிகளுக்கு கம்பிகளை பயன்படுத்த வேண்டும்.இத்தகைய அசுத்தங்கள் இருந்தால், பிணைப்பு வலுவாக அமையாது. அதனால், கட்டிடத்தின் வலுத்தன்மை பாதிக்கப்படும்.
கம்பிகளை தயாரிக்கும் நிறுவனங்கள், மூலப்பொருள்களை சரியான முறையில் சோதித்து பார்த்து பயன்படுத்தியிருக்கும் என்று கூற முடியாது. குறிப்பிட்ட சில பெரிய நிறுவனங்கள் தவிர்த்து மற்ற சிறிய நிறுவனங்கள் அனைத்தும், கழிவு இரும்புகளை உருக்கியே கம்பிகளை தயாரிக்கின்றன. இதனால் ஒவ்வொரு முறையும் கம்பிகளை சோதித்து பார்த்து பயன்படுத்த வேண்டிய பொறுப்பு நுகர்வோர் தலையில் விழுகிறது.
மொத்த கம்பிகளையும் அப்படியே சோதித்து பார்க்க முடியாது. அதில் இரண்டு அடி அளவுக்கு துண்டு எடுத்து, அதன் நீட்டல், வளைவு திறன் ஆகியவற்றை சோதித்து பார்க்க வேண்டும்.கம்பிகளை வளைக்கும் போது அதில் முறிவுகள் ஏற்படக் கூடாது. பக்கங்கள் இணையாகவே இருக்க வேண்டும்.
கம்பிகளை சோதித்து பார்க்க,‘யுனிவர்சல் டெஸ்டிங் மிஷின்’என்ற கருவி உள்ளது.இதன் மூலம், கம்பிகளின் குறுக்களவு, தாங்கும் திறன் உள்ளிட்டவை சோதனையில் தோல்வி அடையும் கம்பிகள் தர
மற்றவை, போலியானவை என அறியமுடியும்.

Re: உண்மையான டிஎம்டி கம்பிகளை நாம் எப்படி அறிய முடியும்?
Thu Jul 02, 2015 2:52 am
சில கம்பிகள்.. பல கேள்விகள்..
-------------------------------------------------
தாங்களே தங்கள் சொந்த வீட்டைக் கட்டிக் கொள்ளும் நடுத்தர மக்களுக்கு கட்டுமானத் துறை பற்றி ஏற்படும் ஐயங்களுக்கு குறைவிருக்காது. அதிலும், கம்பிகள் பற்றிய கேள்விகள் அவர்களுக்குள் ஓயவே ஓயாது. இங்கு முடிந்தவரை அவர்களின் அடிப்படை கேள்விகள் தீரும் என எதிர்பார்க்கிறோம்.
எதற்காக கட்டிடங்களில் கம்பிகளை பயன்படுத்த வேண்டும்?
தொடக்க காலத்தில் கான்கிரீட் தேவைகளுக்கு வலிமையில்லாத ரவுண்டு கம்பிகள் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டு அதன் பலவீனங்களும் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது வலுவூட்டப்பட்ட டிஎம்டி கம்பிகளே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கட்டிடங்களின் ஸ்திரதன்மை அதிகரிக்கவும், நீண்ட ஆயுள் மற்றும் இயற்கை அழிவுகளிலிருந்து கட்டிடங்களை பாதுகாக்க வேண்டுமெனில் ,சரியான கம்பிகளை கட்டிட தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும்.கான்கிரீட்டுடன் வலிமையான பிணைப்பிற்கு முறுக்குக் கம்பிகளே பெருங்காரணம்.
கம்பிகள் எத்தனை வகைப்படும். அதன் வலிமையின் அளவு என்ன?
1. ரவுண்ட் கம்பிகளின் வலிமை சுமார் 250 N/mm2
2. சாதாரண முறுக்கு கம்பிகளின் வலிமை சுமார் 400 N/mm2
3. டிஎம்டி கம்பிகளின் வலிமை சுமார் 500 N/mm2
முறுக்கு கம்பி, டிஎம்டி கம்பி என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
முறுக்கு கம்பிகள் CTD - Cold Twisted Deformed எனப்படும்.
முறுக்காத கம்பிகள்TMT - Thermo Mechanically Treated ®™©√|D.
எனப்படும்.
சிடிடி முறையில் கம்பிகள் முறுக்கப்படுவதால் அவை எளிதில் அதிகமாக துருப்பிடிக்கும். வளைக்கும் போது உடையும்.
டிஎம்டி முறையில் கம்பிகள் வெப்பக் குளிரூட்டு முறையில் சுமார்
1000 டிகிரி செல்சியசிலிருந்து 500 டிகிரி செல்சியஸ் வரை பதப்படுத்தப்படுவதால் துருப்பிடிக்காது. வலிமை அதிகம். எளிதில் குறைந்த கார்பன் அளவினால் வளைக்கும்போது உடையாது.
டிஎம்டி கம்பிகள் விலை அதிகமா?
இன்றைய சந்தை நிலவரப்படி சாதாரண முறுக்கு கம்பிகளை விட சற்றே விலை அதிகமுள்ள டிஎம்டி கம்பிகளை உபயோகிப்பதன் மூலம் 20 விழுக்காடு சேமிக்கவும் முடியும் கட்டிடமும் தரமானதாக இருக்கும். தரமில்லா விலை குறைவான கம்பிகளினால் நேரடியாக கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை குறைகிறது.
தேவைப்படும் கம்பிகளின் அளவினை எப்படி அறிவது?
நீங்கள் உபயோகிக்கும் கம்பிகளின் அளவுகள், அதற்கான செலவுகள் ஒவ்வொரு கட்டிடத்தின் டிசைன் அமைப்பு மற்றும் கட்டிட விதிமுறைகள் ஆகியவற்றை பொருத்திருக்கும். சரியான செலவுக் குறியீடுகளுக்கு உங்கள் கட்டிட பொறியாளர்கள், கட்டிடக்கலை வல்லுநர்கள், கட்டமைப்பு பொறியாளர்கள் ஆகியோரை கலந்து ஆலோசிப்பது மிகமிக அவசியம்.இதற்கான ஆலோசனைச் செலவு என்பது கம்பிகளின் செலவை விட மிகவும் குறைவு.நாம் பட்ஜெட் போடவும் இது உதவும்.
போலி டிஎம்டி கம்பிகள் சந்தையில் உள்ளனவா?
வாடிக்கையாளர்களிடம் கம்பிகள் பற்றிய விழிப்புணர்வு அதிகம் இல்லாததால் போலி டிஎம்டி கம்பிகள் சந்தையில் அதிகம் உள்ளன. பல நிறுவனங்களால் டிஎம்டி கம்பி என்ற பெயரில் கம்பிகளின் மேல் தண்ணீர் தெளித்து அறிவியல் முறைக்கு உட்படாத தரமற்ற கம்பிகளை தயாரித்து டிஎம்டி கம்பிகள் விற்கப்படுகிறது.
கம்பிகளுக்கு கிரேடு உள்ளதா?
இந்திய தர நிர்ணயக் கழகம் கம்பிகளின் தரத்தை IS1786/1985 TM Fe 415, Fe500 என்ற மூன்று கிரேடுகளாக பிரித்துள்ளது. பெரும்பாலானோர் குறைந்தது கட்டிடங்களுக்கு Fe 415 கம்பிகளையாவது பயன்படுத்துங்கள் என்று வழிகாட்டுகின்றனர். வளர்ந்த நாடுகளில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வலிமை Fe500 ஆகும். இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கம்பிகளின் நீளம், விட்டம் மற்றும் எடை எப்படியிருக்கும்?
ஒரு கம்பியை எடுத்துக் கொண்டால் முறுக்குக் கம்பிகள் 36 அடி நீளமும், டிஎம்டி கம்பிகள் 40 அடி நீளமும் கொண்டவை. இதில் 40 அடி நீளமுள்ள
டிஎம்டி கம்பிகளின் எடை அளவு இப்படி இருக்கும்.
அளவு எடை ஒரு கம்பிக்கு,
6mm 2.7 Kg.
8mm 4.8 Kg.
10mm 7.5 Kg.
12mm 10.8 Kg.
16mm 19.2 Kg.
20mm 30Kg.
25mm 46Kg.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum