சிவில் மற்றும் பிற துறை மாணவர்களும் கவனிக்க
Thu Jul 02, 2015 2:48 am
சிவில் மற்றும் பிற துறை மாணவர்களும் கவனிக்க:
நேர்காணலில் வெற்றி பெறுவது எப்படி?
( பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று)
-----------------------------------------------------------------------
நீங்கள் பி.ஈ அல்லது டிப்ளமோ பெற்ற சிவில் பொறியாளர் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர், சிவில் பொறியியலில் கரைகண்டவர் என்பதெல்லாம் சரி. இதெல்லாம் யாருக்கு நன்கு தெரியும்? உங்களுக்கு, உங்கள் நண்பர்களுக்கு, அதிக பட்சம் உங்கள் கல்லூரி வளாகத்திற்குள். நேர்காணலுக்குச் செல்லும் நிறுவனத்திற்கும் அங்கு உங்களை நேர்காணல் செய்ய இருப்பவர் களுக்கும் அதெல்லாம் தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை நீங்கள் ஒரு ‘Fresher’.
பொறியியல் துறையில் கற்றுக்குட்டியாக நீங்கள் நுழைந்தாலும், நேர்காணலை 100 சதவீத தன்னம்பிக்கையுடன் நேர் கொண்டால் உங்களை ஃப்ரெஷ்க்ஷர் என்று சொன்னவர்களை பிரமிக்க வைக்கலாம். இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நேர்காணல் டிப்ஸ்கள் பொறியாளர் பணிக்குச் செல்லும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, ‘சைட்’ சூப்பர்வைசர்களுக்கும் பொருந்தக் கூடியவை. மேலும், எல்லா துறை பொறியாளர்களுக்கும் ஏகத்திற்கு பொருத்தமானவை. சரி, டிப்ஸ்களைப் பார்ப்போமா?
முதலில் எங்கிருந்து ஆரம்பிக்கலாம்? நிறுவனத்திலிருந்து துவங்குவோம்.
நீங்கள் சேர இருக்கும் நிறுவனத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மூலம் கூடத் தகவல்களைத் திரட்டலாம். வதந்திகளை நம்ப வேண்டாம். முடிந்தால், அந்த நிறுவனத்திலேயே பணியில் இருப்பவர்களிடம் விசாரியுங்கள். நிறுவனத்தைப் பற்றிய நல்ல கருத்துக்களைக் கேள்விப்பட்டிருந்தால் அதில் உங்களுக்கு உள்ள ஆர்வத்தை வெளிப்படையாகத் தெரிவியுங்கள்.
நிறுவனத்தின் மீது உங்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதை இது தெரிவிக்கும். என்ன காரணத்திற்காக எங்கள் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டால் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்பதை ஒத்திகை பார்த்துவிட்டுச் செல்லுங்கள். இந்த இணையதள உலகில், நிறுவனத்தின் வரலாறு தெரியாமல் உள்ளே நுழைவது மிகவும் தவறு.
அடுத்தது நேரம். நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பார்கள்.அதற்காக, பத்து மணிக்கு நேர்காணல் என்றால் எட்டரை
மணிக்கே போய் நின்றுவிடக் கூடாது. அதிகபட்சம் 20 30 நிமிடங்களுக்கு முன்னதாக போகலாம். உங்களை அழைக்கும் வரை நேர்காணலுக்கான ஒத்திகையை மனதிற்குள்ளேயே நடத்தலாம். வீண் பதட்டத்தை தணிக்கலாம்.
நீங்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் சரியான நேரத்திற்குள் சென்றுவிட முடியும் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.வழியில் எத்தனை தடங்கல்கள் வரும் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. போக்குவரத்து நெரிசல், போராட்டம், விபத்து என்று எத்தனையோ வரலாம்.
உங்களது எதிர்பார்ப்பைத் தகர்க்கலாம்.ஆகவே முடிந்தவரை கூடுதல் அவகாசம் கிடைக்கும் விதத்தில் முன்னதாகவே கிளம்பி விடுவதுதான் நல்லது.
அதாவது, நீங்கள் ஒரு தொழில்நெறிஞரைப் போன்ற உடையுடன் செல்ல வேண்டும். பேஷக்ஷன் க்ஷேஷாவில் கலந்து கொள்ளப் போகிறவரைப் போல போவது கூடாது.
ஆண்களும் கண்ணியமிக்க சுத்தமான ஆடைகளைத் தேர்ந் தெடுத்து அணிந்து கொண்டு போக வேண்டும். ஆளை அடிக்கும் வண்ணங்களில் ஆடைகளை அணியாதீர்கள். அதே போன்று நேர் காணலுக்கு எதிரியான ஜீன்ஸை அணியாதீர்கள். அப்படி அணிவது உங்களை ஒரு விளையாட்டுப் பிள்ளை என்று கருத வைத்துவிடும். அதற்காக பிளைன் க்ஷர்ட்டுகளையும் அணியாதீர்கள். அது உங்களை
மந்தமானவராகக் காட்டும். சிறிய கட்டங்கள், நீளமான கோடுகள் போட்ட பளிச் சட்டைகளை அணிவது நல்லது.
நீங்கள் உங்கள் உடலில் பச்சை குத்திக் கொண்டிருந்தால் அதை
மறைக்கும் விதத்தில் உங்களது உடைகள் அமைய வேண்டும். காது, மூக்கு முதலிய பகுதிகளில் துளையிட்டு வளையங்களை மாட்டிக் கொள்வதை விசித்திரமான முறையில் செய்து உங்கள் மீது ஏற்பட இருக்கும் மதிப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டாம்.
ஹேர் ஸ்டைலும் நேர்காணலுக்கு செல்பவர்களுக்கு முக்கியமானது. தலைமுடியில் கண்ட கண்ட வர்ணங்களை பூசிக்கொள்வதும் தவறானது.
சரி, இப்போது மெயின் சீனுக்கு வருவோம். நேர்காணலுக்கு அழைக்கிறார்கள்.
முதலில் வணக்கம் தெரிவித்து கைகுலுக்குங்கள். அந்தக் கை குலுக்கலில் உறுதி தொனிக்கட்டும். ஏனோதானோவென்றோ அசிரத்தையாகவோ கை குலுக்க வேண்டாம். நீங்ள் ஆர்வமாக இருப்பதை உங்களது வணக்கம் தெரிவிக்கும் முறையே காட்டிக் கொடுத்துவிடும். இந்த வேலைக்கு வருவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்பதைத் தெரிவிக்கும் விதத்தில் உங்கள் வணக்கம் அமைய வேண்டும்.
உங்களிடம் சில குறைகள் இருக்கக் கூடும். குறையே இல்லாத மனிதர்கள் ஏது? உங்கள் குறைகளை நினைத்து நீங்களே தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டாம். நீங்கள் தெரிவிக்கப்போகும் குறைகளைக் காது கொடுத்துக் கேட்கும் மனநிலையில் நேர்காணல் செய்பவர்கள் இருக்க மாட்டார்கள். அதே போன்று உங்கள் மேல் அனுதாபம் வரும் வார்த்தை களையும் உதிர்க்க வேண்டாம்.
அதாவது, வீட்டிற்கு ஒரே பையன், நான்கு தங்கைகள், பொறுப்பில்லாத அப்பா, நான் சம்பாதித்துதான் கரையேற்ற வேண்டும் போன்ற அழுமூஞ்சிக் கதைகளை தயவு செய்து சொல்லிவிடாதீர்கள்.
சூயிங்கம், பாக்கு போன்றவற்றை மென்று கொண்டே பதில் சொல்லாதீர்கள். அது உங்கள் தன்னம்பிக்கைக் குறைவைக் காட்டும். இருக்கையில் அமர்ந்து கொண்டே கால்களை இடைவிடாமல் ஆட்டிக் கொண்டிருக்காதீர்கள். முனகுவது, தொண்டையைக் கனைத்துக் கொள்வது,நகம் கடிப்பது, நெட்டி முறிப்பது, சொடக்கு எடுப்பது போன்ற வேலைகள் வேண்டவே வேண்டாம்.
ஒரு வேளை நீங்கள் இதற்கு முன் வேறு எங்காவது வேலை பார்த்திருக்கலாம். அந்த நிறுவனத்தைப் பற்றிக் குறை சொல்ல முயற்சிக்க வேண்டாம். அதனால் உங்கள் மேல் அவர்களுக்கு பரிவு ஏற்படாது.
நீங்களும் உங்களுக்கு வேலை கொடுக்க இருப்பவர்களைக் கேள்வி கேட்கலாம். அதில் தப்பில்லை. உங்கள் பணியின் தன்மை, சம்பளம், நிரந்தரமாகும் காலம் முதலிய விவரங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படக் கூடிய விதத்தில் கேள்விகளை எழுப்புங்கள்.
கேள்வி கேட்பதாக இருந்தாலும் பதில் சொல்வதாக இருந்தாலும் நேருக்கு நேராக, எதிரில் இருப்பவர்களின் கண்களைப் பார்த்துப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். பொறுப்பில் அமர்த்தப்பட்டால் எப்படிப் பணியாற்றுவீர்கள் என்பதை விளக்கும் விதத்தில் உங்கள் கேள்விகள் அமையவேண்டும். நீண்ட விவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.
எதையும் மிகைப்படுத்தாதீர்கள். உங்கள் ஆர்வத்தை அவர்கள் பேராசை என்று எடுத்துக் கொள்ள இடம் கொடுத்துவிடாதீர்கள். பதற்றமில்லாமல், சரியான விடைகளைச் சொல்லுங்கள்.
உண்மையாகவே அந்த நிறுவனத்தில் பணிக்குச் சேர்வதில் உங்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதைக் காட்டுங்கள். என்னை அந்த நிறுவனம் அழைக்கிறது, இந்த நிறுவனம் கூப்பிடுகிறது என்பதை எல்லாம் சொல்லிக் காட்டிக் கொண்டிருக்க வேண்டாம்.
என்னவிதமான கேள்விகள் கேட்கப்படும், அவற்றிற்கு எப்படிப் பதில் சொல்ல வேண்டும் என்பதை ஒத்திகை பார்த்துக் கொண்டு செல்லுங்கள். எளிமையான வாக்கியங்களில் உங்கள் பதில்கள் அமைய வேண்டும்.
ஆம், இல்லை என்று ஒற்றை வார்த்தைகளில் பதில் சொல்ல வேண்டாம். உங்களது திறமை என்ன, அதை எப்படிப் பயன்படுத்துவீர்கள் என்பதைச் சில எடுத்துக்காட்டுகளோடு விளக்க முயற்சியுங்கள்.
எல்லாவற்றையும் விட நேர்காணலில் வெற்றி பெறுவதற்கான விரைவு வழி என்ன தெரியுமா? ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக எண்ணிக் கொண்டு கலந்து கொள்வதுதான்.
பெஸ்ட் ஆஃப் லக்.
Article By P.Subramanyam

Permissions in this forum:
You cannot reply to topics in this forum