எதிர்காலத்தில் ஸ்மார்ட் ஹோம்கள் அடுத்த 10 ஆண்டுகளில் ஹோம் ஆட்டோமேக்ஷன் வளர்ச்சி
Thu Jul 02, 2015 2:00 am
பாதுகாப்பு, மின் சிக்கனம், வசதி, உடல் நலம் இவற்றுடன் பிணைக்கப்பட்டிருப்பதுதான் ஸ்மார்ட் ஹோம். ஒரு கட்டுநர் தன்னுடைய புராஜெக்டுகளில் உள்ள வசதிகளாக ஜிம், ஸ்டீம் பாத், நீச்சல் குளம், கார்டனிங், ஜாக்கிங் ட்ராக் போன்றவற்றை குறிப்பிடுகிறார் எனில் இனி ஸ்மார்ட் ஹோம் வசதிகள் இணைக்கப்பட்டவை என்பதையும் குறிப்பிட வேண்ம்டும் என்கிற நிலை விரைவில் வந்துவிடும்.
சென்னையில் தற்போது உள்ள ஹோம் ஆட்டோமேக்ஷன் நிறுவனங்கள் எதுவுமே 10 ஆண்டுகளுக்கு முன்பு கிடையாது என்பதிலிருந்து ஸ்மார்ட் ஹோம்களின் நவீன காலத்து ஆதிக்கத்தை உணரலாம்.
சொகுசு, பாதுகாப்பு, சிக்கனம் என்ற மூன்று அம்சங்களும்
சென்னையில் தற்போது உள்ள ஹோம் ஆட்டோமேக்ஷன் நிறுவனங்கள் எதுவுமே 10 ஆண்டுகளுக்கு முன்பு கிடையாது என்பதிலிருந்து ஸ்மார்ட் ஹோம்களின் நவீன காலத்து ஆதிக்கத்தை உணரலாம்.
சொகுசு, பாதுகாப்பு, சிக்கனம் என்ற மூன்று அம்சங்களும்
ஸ்மார்ட் ஹோம் தொழிற்நுட்பத்தால் மக்களுக்கு கிடைப்பதால் இந்த துறை வெகு வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. ஆண்டுக்கு 29.5% விழுக்காடு என்ற கூட்டு வளர்ச்சி விகிதத்தில் இந்தத் துறை செழித்து வளரும் என்று கணித்திருக்கிறார்கள்.
தற்போது? ஒரு தொடுதிரை அலைபேசி கையில் இருந்தால் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியை எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கலாம். வீட்டில் வேலைக்காரர்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வேலைக்காரர்களால் ஏற்படும் மனிதத் தவறுகளுக்கு இடம் இருக்காது. பயன்பாடு, பொழுது போக்கு என்ற கட்டங்களைத் தாண்டி, காவல், கண்காணிப்பு, பாதுகாப்பு தேவைகளுக்காகவும் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களைப் பயன்படுத்தலாம் என்கிற அளவுக்கு தலைகீழ் மாற்றங்கள் புகுந்துவிட்டன. இதுவரை வீட்டுச்சாவியை மட்டும் கைப்பையில் போட்டு எடுத்துக்கொண்டு போய்க் கொண்டிருந்தவர்கள் இனிமேல் ஒட்டு மொத்த வீட்டின் கட்டுப்பாட்டையும் விரல் நுனியில் வைத்துக்கொள்ளலாம்.
முன்னேறிய நாடுகளில்..
அமெரிக்கா, கனடா, போன்ற முன்னேறிய நாடுகளில் அரசுகளின் கெடுபிடி அதிக அளவில் இருக்கிறது. வெறுமென வீடுகளைக் கட்டிவிட்டால் போதாது என்கிறார்கள். ஸ்மார்ட் ஹோம் அடிப்படையிலான கருவிகளையும், சாதனங்களையும் பொருத்தினால் தான் கட்டடங்களுக்கு அனுமதியே வழங்கப்படும் என்று கொண்டு வந்துவிட்டார்கள்.கிழக்கு ஐரோப்பிய ாடுகளிலும் ஏறக்குறைய இதே நிலைதான். வீடுகளில் செலவழிக்கப்படும் ஆற்றலை அளவிடும் திறன்மிகு அளவி கள் பொருத்தப்பட வேண்டியது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இதே போன்ற நிலை வெகுவிரைவில் வந்துவிடும். அதற்கான சோதனை முயற்சிகளை அங்கு மேற்கொண்டு வருகிறார்கள். கீழை ஆசிய நாடுகளிலும் இதே போக்குதான் வளர்ந்து வருகிறது. உங்களுக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல்லுங்கள். அதை எப்படிச்செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்கிற பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று பல மின்னணு நிறுவனங்கள் களத்தில் இறங்குகின்றன.
அடுப்பில் பாலை வைத்துவிட்டு எரிவாயுவை அணைக்க மறந்துவிட்டேன் என்பதற்காக விழுந்தடித்துக் கொண்டு ஓட வேண்டியதில்லை. தொடுதிரைத் தொலைபேசியிலேயே ஆணைகளை இட்டு வேலைகளை முடித்துக்கொள்ளலாம்.
எதிர்காலம் எப்படி?
தொடர்புகளை ஏற்படுத்துதல், கண்காணித்தல், கட்டுப்படுத்துதல் என்ற மூன்று பெரும் பிரிவுகளுக்குள் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களின் தேவைகளையும், செயல்பாடுகளையும் அடக்கிவிடலாம். இவ்வாறு உருவாக்கப்படும் சாதனங்கள் செய்யவேண்டிய பணிகளை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
கருவிகளையும் சாதனங்களையும் எதற்காக வாங்குகிறோம் ? வசதியான, சொகுசான வாழ்க்கையை வாழ்வதற்காகத்தானே ? அடுத்ததாக, உடல்நல அடிப்படையிலும் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் உருவாகிறது.
எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் ?
பெரும்பாலான வீடுகளில் கதவுகளைத் திறந்து மூடும் வேலையை வெகு கவனமாகச் செய்யவேண்டி உள்ளது. திருடர்களிடமிருந்தும், விலங்குகளிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். குழந்தைகள் வெளியே ஓடி விடாதபடி கண்காணிக்க வேண்டும். இத்தகைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தொலைவில் இருந்தபடியே கட்டுப்படுத்தக் கூடிய சாதனங்கள் தேவை. இவற்றை ஸ்மார்ட் ஹோம் தொழிற்நுட்பம் அளிக்கிறது.
வெப்பத்தைக் கட்டுப்படுத்துதல், காற்றோட்ட வசதிகளைச் சீராக்குதல்,
செலவாகும் மின்சாரத்தைக் கண்காணித்தல், தேவையற்ற இயக்கங்களை நிறுத்துதல் என ஸ்மார்ட் ஹோம் நுட்பத்தின் மூலம் பல வேலைகளைச் செய்ய முடியும்.
விளக்குகளை ஏற்றி, அணைக்கலாம். சிந்தித்துச் செயல்படும் திறன் கொண்ட சாதனங்களை இயக்கலாம். பொழுதுபோக்கிற்கும் பயன்படுத்தலாம். வாகனங்களைத் திசை செலுத்த உபயோகிக்கலாம். வீட்டில் வளர்க்கும் செடி கொடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சும் வேலையைக் கூடச் செய்ய வைக்கலாம்.
எந்த அறையில் யார் இருக்கிறார்கள் ?
அவர்களுக்குத் தொலைக்காட்சியில் எந்த அலைவரிசை தேவை என்பதை நீங்கள் வெளியில் இருந்தே முடிவு செய்யலாம். உங்கள் குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி ஆபாசமானது என்று தோன்ஷூனால் நீங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே அதனை அணைத்துவிடவும் முடியும். சாதனங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டு இயக்கம் நின்று போனாலும், பழுதுபார்க்கும் பொறியாளர்களுக்குத் தகவல் கொடுக்கலாம்.
வீட்டில் யாருக்காவது உடல் நலம் குன்றியுள்ளதா? நீங்கள் அருகில் இருந்து பார்த்துக்கொள்ள முடியவில்லையா? கவலையே வேண்டாம். ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் உதவிக்கு வரும். ஒரு செவிலி அல்லது மருத்துவர் அருகிலேயே இருந்து கவனித்துக் கொள்வதற்கு ஒப்பான சேவையை ஸ்மார்ட் ஹோம் சாதனங்களின் மூலம் அளிக்கலாம். அவை முறைப்படி அளிக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கலாம்.
ரொம்பவும் முடியவில்லையா ?
வீட்டில் யாருக்காவது உடல் நலம் குன்றியுள்ளதா? நீங்கள் அருகில் இருந்து பார்த்துக்கொள்ள முடியவில்லையா? கவலையே வேண்டாம். ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் உதவிக்கு வரும். ஒரு செவிலி அல்லது மருத்துவர் அருகிலேயே இருந்து கவனித்துக் கொள்வதற்கு ஒப்பான சேவையை ஸ்மார்ட் ஹோம் சாதனங்களின் மூலம் அளிக்கலாம். அவை முறைப்படி அளிக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கலாம்.
ரொம்பவும் முடியவில்லையா ?
மருத்துவமனைக்குத் தகவல் கொடுக்க வைக்கலாம்.(வயதானவர்களை வீடுகளில் தனியாக விட்டுவிட்டு வேலை, அலுவலகம் என்று செல்ல வேண்டிய தேவை இருப்பவர்களுக்கு ஸ்மார்ட் ஹோம் வசதிகள் பேருதவியாக இருக்கும். பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு வீடுகளில் தனித்திருக்கும் பெற்றோர்களுக்கு இவை கண்டிப்பாகத் தேவைப்படும் வசதிகளாகும். பெற்றவர்களை தொலைவில் இருந்தே கவனித்துக் கொள்ள விரும்பும் பிள்ளைகளுக்கும் இவை அவசியம்.
காவல் ஏற்பாடுகள்
வீட்டை விட்டு வெளியே இருப்பீர்கள். வீட்டில் எவனாவது திருடன் புகுந்துவிட்டால்? நீங்கள் அங்கேயே இருந்தாலும் கூடச் செய்ய முடியாத சில வேலைகளை ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் செய்துவிடும். வெளி ஆள் உள்ளே புகுந்திருக்கிறானா ? எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்யும் கதவுகளை அடைக்கும். கண்ணீர்ப் புகையை வெளிவிடும். சுருக்கமாகச் சொன்னால் ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் ஒரு கெட்டிக்காரத் திரைக் கதாநாயகனைப் போல் உங்கள் வீட்டிற்கு வந்த திருடனை மடக்கிவிடும்.
நீங்கள் வீட்டிற்குள்ளேயோ அல்லது அருகாமையிலோதான் இருந்தாக வேண்டும் என்பது அவசியமில்லை. நீங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களை விட கவனமாக, பொறுப்பாக, திறமையாக செயல்படும். நீங்கள் வீட்டில் இருந்தால் எது, எதை இயக்க வேண்டும், வெளியில் போய்விட்டால் எதையெல்லாம் இயக்க வேண்டிய தேவை இல்லை என்பதை ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் நினைவில் வைத்துக் கொண்டு செயல்படும்.
வீட்டின் கதவு, நிலை, ஜன்னல்களின் அமைப்பை ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை வேலை வாங்கலாம். சாம்சங் நிறுவனம் இது போன்ற பல ஸ்மார்ட் ஹோம் சாதனங்களைத் தயாரித்து அளிக்க இருக்கிறது.
இந்த நேரத்திற்கு நீங்கள் மருந்து சாப்பிட வேண்டும்.. இந்த அறையில் காற்று கண்டபடி மாசுபட்டிருக்கிறது.. உங்களுக்கு ஆகாது.. தும்மல் வரும்... இடத்தை மாற்றுகிறீர்களா.. அல்லது நான் காற்றை மாற்றட்டுமா..? ஏசி அதிகமாக இருக்கிறதே.. உங்களுக்கு இது பழக்கம் இல்லையே.. குறைத்துவிடட்டுமா..?
தொலைத்தொடர்பு துறையைப் போல ஹோம் ஆட்டோமேஷக்ஷன் துறையும் எதிர்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டு விஸ்வரூபம் எடுக்கும்.
- அமரர். சு.ப.தனபாலன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum