#மோடிமீது_அத்வானி_எறிந்த #மூன்றாவது_சாணிஉருண்டை
Thu Jul 02, 2015 1:48 am
Vijay Kumar added 2 new photos.
#மோடிமீது_அத்வானி_எறிந்த
#மூன்றாவது_சாணிஉருண்டை
சாணி உருண்டை-1
மிசா,அதாவது"அவசரநிலை பிரகடனம்
மீண்டும் வராது என உறுதிசொல்ல முடியாது. அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிவது ஆபத்தானது " என அத்வானி மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் உள்குத்து குத்தினார்.
எதிர்பார்த்து போல படப்பு பற்றி எரியத் தொடங்கிவிட்டது.
அட!நமக்கு இன்னும் இவ்வளவு மதிப்பு
இருக்கா? என்று ஆச்சரியப்பட்ட அத்வானி எறிவதற்கு தயாராக அடுத்த சாணி உருண்டையை உருட்டத் தொடங்கினார்.
சாணி உருண்டை-2
தலைமை என்பது நம்பிக்கை்குரியதாக வும் பலமானதாகவும் இருக்க வேண்டும்.
இந்தியாவில் வாஜ்பாயிக்கு பிறகு அப்படிப்பட்ட தலைமை அமைய வில்லையென அல்லையில் ஒரு குத்து விட்டார்.
வரிசையாக வெளிவரும் ஊழலுக்கு பதில் சொல்வதா?
கார்ப்பரேட், RSSஉத்தரவுகளை நடைமுறை படுத்துவதா?
ஊர்சுற்றுவதா? கோட் தைப்பதா?
இல்லை ,இந்த அத்வானி முகத்தில் எரியும் சாணியை துடைப்பதா
என்ற குழப்பத்தில் மோடி வழக்கம் போல் காரியமௌனத்தை கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டார்.
அதற்குள் 3-வது சாணிஉருண்டை
ஊழல் குற்றச்சாட்டு வந்தால் ராஜினாமா செய்து நேர்மையை நிரூபிக்க வேண்டும்
மக்கள் மத்தியில் நேர்மையும், நம்பிக்கையுமே அரசியல் வாதிகளின்
சொத்து. அந்த உத்திரவாதத்தை கடைபிடிக்க வேண்டும்
நான் அப்படித்தான் செய்தேன்.
(1996-ல் ஹவாலா ஊழல் குற்றச்சாட்டு வந்த போது கட்சி ராஜினாமா செய்யவேண்டாமென்ற போதுகூட நான் ராஜினாமா செய்திருந்தார். பின்பு
2-ஆண்டுகள் கழித்து குற்றச்சாட்டு நிரூபிக்கபடவில்லை. பின்னர் 98-ல்
தேர்தலில் நின்று ஜெயித்தார்.)
இதே போல் குற்றம் சாட்டப்பட்ட பிஜேபி MPக்களும் பதவி விலகவேண்டும் என்கிறீர்களா? என்று நிருபர் கேட்ட போது ,
"மற்றவர்களுக்காக இதை சொல்லவில்லை. நான் ராஜினாமா செய்வேன்"
என ,"இது பத்தினி வீடு "என போர்டை அத்வானி வீட்டில் தொங்கவிட்டுக் கொண்டார்.
பிஜேபியின் மூத்த தலைகள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன.
அடுத்த தேர்தலில் சீட்டுகூட கிடைக்காது. இப்போது மரியாதையும் கிடையாது.
வெளியேறி எதிர்ப்பதா? உள்ளிருந்து கெடுப்பதா? என ஆலோசனை செய்து உள்ளிருந்து கெடுப்பதென முடிவு செய்திருக்கக்கூடும்.
"பிஜேபியில் 70வயதுக்கு மேலுள்ள தலைவர்கள் மூளைச்சாவு அடைத்ததாக பிஜேபி தலைமை முடிவு செய்துவிட்டது போல" என
முரளி மனோகர் ஜோஷி சொன்னதும்
உள்ளிருந்து கல்லெறியும் பாணிதான்.
இவர்களது திட்டப்படி போனால்
கங்கையை எந்தக் காலத்திலும் சுத்தப்படுத்த முடியாது என சவுண்ட் விடுகிறார் சிங்கால்.
இது கோஷ்டி பூசலின் அறிகுறி.
அத்வானியின் சாணி உருண்டை
அடுத்தடுத்து வருவதற்கு வாய்ப்பு அதிகமுண்டு.
#புஷ்கின்
30.6.15
இப்படி இருந்த அமாவாசைய வளர்த்து விட்டதுக்கு எனக்கே ஆப்பு வைக்குது
நானும் வலிக்காத மாதிரி எவ்வளவு நேரம்தான் நடிக்கிறது
Permissions in this forum:
You cannot reply to topics in this forum