விவசாய வருமானத்தில் வரியை எப்படி சேமிப்பது?
Thu Jun 25, 2015 2:16 pm
நமது அரசியல் வாதிகள் வருமான வரித்துறையை ஏமாற்றுவதற்கு உபோயோகிக்கும் ஒரு முக்கிய ஆயுதம் விவசாய வருமானம் என்று சொல்லலாம்.
கடந்த முறை, சரத் பவார் அவர்களது மகள் 10 ஏக்கர் நிலத்தில் 114 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றதாக தேர்தல் கமிசன் அறிக்கையில் கூறி இருந்தார்,
அவ்வளவு வருமானம் கிடைக்க அப்படி என்னது தான் பயிர் செய்தார் என்று தெரியவில்லை? சொன்னால் நன்றாக இருக்கும்.
இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்திய அரசின் கொள்கைப்படி விவசாயத்தின் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்திற்கு வரி கிடையாது. அதனால் தான் அரசியல் வாதிகள் போட்டி போட்டுக் கொண்டு விவசாயிகளாக மாறி விடுகின்றனர்.
உண்மையிலே முழுவதுமாக வரி இல்லை என்று சொல்ல முடியாது. Back Door என்ற முறை கணக்கு படி சிறிது வரி கட்ட வேண்டும். அது உங்களது மற்ற வருமானங்களை சார்ந்தும் இருக்கிறது. இருந்தாலும் அதிக அளவு பயன் உள்ளது.
வருடத்திற்கு 5000 ரூபாய் வரை விவசாயத்தில் வருமானம் வந்தால் அதனை வருமான வரி படிவத்தில் குறிப்பிட தேவையில்லை. அதற்கு மேல் வந்தால் குறிப்பிட வேண்டும்.
இதில் விவசாய வருமானம் என்றால், விவசாய நிலங்களில் இருந்து கிடைக்கும் வாடகை, குத்தகை, விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானம் போன்றவை தகுதி பெறுகின்றன. ஆனால் விவசாய நிலம் அரசு குறிப்பிட்ட பகுதியில், அதாவது நகரங்களில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் இருக்க வேண்டும்.
இந்த விவசாய வருமானத்திற்கு வரி விலக்கு பெறுவது எப்படி என்று பார்ப்போம்..இது ஒரு சிக்கலான கணக்கு என்றும் சொல்லலாம்.
இந்த கணக்கிற்கு விடை காண கீழே உள்ள வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
Step 1: முதலில் விவசாயம் சாராத வருமானத்தை கணக்கிட வேண்டும்.
Step 2: விவசாயம் சார்ந்த வருமானத்தை கணக்கிடுக.
Step 3: 1 மற்றும் 2ல் கிடைத்த வருமானங்களை கூட்டுக.
Step 4: 3ல் கிடைக்கும் தொகைக்கு வருமான வரி கணக்கிடுக..
Step 5: விவசாய வருமானத்தை குறைந்தபட்ச வருமான வரி விலக்கு தொகையுடன் கூட்டுக.
Step 6: 5ல் கிடைத்த தொகைக்கு வருமான வரி கணக்கிடுக
Step 7: 4ல் கிடைத்த தொகையை 6ல் கிடைத்த தொகையில் இருந்து கழித்து விடுக. இது தான் நீங்கள் கட்ட வேண்டிய வருமான வரியாகும்.
இனி இந்த கணக்கீடுகளை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்.
கணேசன் என்பவர் வருடத்திற்கு 5,00,000 வருமானம் தனது சம்பளம் மூலமும் 3,00,000 வருமானம் விவசாயத்தில் பெறுகிறார். அவருக்கு எப்படி வரி கணக்கிடுவது என்று பார்ப்போம்.
Step 1:
விவசாயம் சாராத வருமானம் = 500000 ரூபாய்
Step 2:
விவசாயம் சார்ந்த வருமானம் = 3,00,000 ரூபாய்
Step 3:
மொத்த வருமானம் = 500000 + 250000 = 8,00,000 ரூபாய்
Step 4:
8,00,000 ரூபாய்க்கு வருமான வரி கணக்கிடுவோம்.
முதல் 2.5 லட்சத்துக்கு வரி கிடையாது => 0
2.5 முதல் 5 லட்சத்துக்கு 10% வரி => 25,000
5 முதல் 10 லட்சத்துக்கு 20% வரி => 3,00,000 * 0.20 = 60,000
மொத்த வரி = 85,000 ரூபாய்
பார்க்க:
வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி?
Step 5:
விவசாய வருமானத்தை குறைந்தபட்ச வருமான வரி விலக்கு தொகையுடன் கூட்ட வேண்டும்.
3,00,000 + 2.50,000 = 5,50,000 ரூபாய்
Step 6:
இப்பொழுது 5,50,000 ரூபாய் வரி கணக்கிட வேண்டும்.
முதல் 2.5 லட்சத்துக்கு வரி கிடையாது => 0
2.5 முதல் 5 லட்சத்துக்கு 10% வரி => 25,000
5 முதல் 10 லட்சத்துக்கு 20% வரி => 50,000 * 0.20 = 10,000
மொத்த வரி = 35,000 ரூபாய்
பார்க்க: வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி?
Step 7:
4ல் கிடைத்த தொகையை 6ல் கழித்தால்,
85,000 ரூபாய் - 35,000 ரூபாய் = 50,000 ரூபாய்
இந்த 50,000 ரூபாய் தான் நாம் வரி கட்ட வேண்டும். விவசாய வருமானத்தை சார்ந்து இருப்பதால் 35,000 ரூபாய் வரி சேமிப்பாக கிடைக்கிறது.
உங்களுக்கும் விவசாயம் மூலமாக இருந்தால் இவ்வாறு பெருமளவில் வருமான வரியை சேமிக்கலாம்.
இந்த முறை ஊரில் இருக்கும் விவசாய பெருமக்களுக்கு தெரியும் வாய்ப்பு குறைவு என்பதால் பகிரவும் செய்யுங்கள்! பயனாக இருக்கும்.
நன்றி: http://www.revmuthal.com/
- 80 'சி'-யின் கீழ் வரி சேமிப்பு முதலீடு. பின்வரும் 9 வரி சேமிப்பு முதலீட்டில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்வு செய்து வருமான வரியை குறைத்துக்கொள்ளலாமே...
- பல்லில் கரைகளைப் போக்குவது எப்படி? பல்லின் ஈறுகளை வலுப்படுத்துவது எப்படி ?
- ரகசிய குறியீட்டு எப்படி உருவாக்க படுகிறது நாம் எப்படி உறவாக்குவது ( Barcode Scanner ) !!!!
- எப்படி தப்பித்துக்கொள்வோம்.......
- இது எப்படி இருக்கு??!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum