நவதானிய கொழுக்கட்டை
Wed Jun 24, 2015 7:06 pm
நவதானிய கொழுக்கட்டை
என்னென்ன தேவை?
தானிய மாவு - 1 கப்
உருண்டை வெல்லம் - அரை கப்
தேங்காய் அரை மூடி
நெய் -1 டீஸ்பூன்
ஏலக்காய் சிறிதளவு
எப்படிச் செய்வது?
கோதுமை, கடலை, பச்சை பயறு, உளுந்து, கம்பு, கேழ்வரகு, சோளம், சிவப்பரிசி, கொள்ளு ஆகிய தானியங்களைச் சம அளவு எடுத்துக்கொள்ளவும். இவற்றைக் கழுவி, காயவைத்து வறுக்கவும். அவற்றுடன் ஏலக்காய் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்த மாவிலிருந்து 1 கப் எடுத்து, அதனுடன் தூளாக்கிய உருண்டை வெல்லத்தைச் சேர்த்து, நீர் விட்டு நன்றாகப் பிசையவும். தேங்காயைத் துருவி, சிறிது நெய் விட்டுப் பொன்னிறமாக வறுக்கவும். பிசைந்த மாவுடன் இதைக் கலந்து கொழுக்கட்டையாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சத்து நிறைந்த இந்தக் கொழுக்கட்டையைக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். பள்ளிக்கு ஸ்நாக்ஸ் போல இதை வைத்து அனுப்பலாம்.[/size]
Permissions in this forum:
You cannot reply to topics in this forum