திட்டமிட மறந்தால்
Tue Jun 23, 2015 8:25 am
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்''.
சேவல் மேல் கோபம். ஒரு பணக்கார எஜமாட்டி விடியற்காலையில் சேவல் கூவியவுடனே எழுந்து கொள்வார்களாம். தன் வேலைக்காரிகளை எல்லாம் உடனே அக்காலைப் பொழுதிலேயே எழுப்பிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கச் சொல்வது அவர்கள் வழக்கம்.
அதிகாலையில் இவ்வாறு தூக்கத்தைக் கலைப்பது வேலைக்காரிகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் கோபம் எல்லாம் சேவலின் மேல் திரும்பியது. யாருக்கும் தெரியாமல்சேவலைக் கொன்று தின்றுவிட்டார்கள்.
சேவல் மரித்தபின் அந்த எஜமாட்டிக்கு விடிந்ததும், விடியாததும் தெரியவில்லை. இதனால் நடு ராத்திரியிலே எழுந்து வேலைக்காரிகளை எழுப்பி வேலையைப் பார்க்கச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். விடியற்காலையில் தூங்க விரும்பின வேலைக்காரிகளுக்கு இதனால் இரவுத் தூக்கமும் இல்லாமற் போயிற்று.
அநேகரின் நிலையும் இப்படித்தான். இன்று மாறிக் கொண்டிருக்கிறது. அதிகாலையில் தேவசமூகத்தில் அமர்ந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள சோம்பல்படும் இவர்களை இன்று உலகப் பிரச்சனைகள் வேதனைகள் நடுஇரவில் எழுப்பி உட்கார வைத்திருக்கின்றன.
நாம் மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றி பெற சில குறிக்கோள் நியமிக்கிறோம். திட்டமிடுகிறோம். திட்டமிட மறந்தால் தோல்வியை திட்டமிடுகிறோம் என்பதே பொருள். குறிக்கோளற்ற வாழ்க்கையால் நன்மை ஏதும் ஏற்படாது. நீங்கள் இந்த பூமியில் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள இயேசு கிறிஸ்து ஒரு குறிக்கோளை முன் வைக்கிறார். அது என்ன?
"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்''. மத் 6:33

Permissions in this forum:
You cannot reply to topics in this forum