பெரியவரா? சிறியவரா?
Mon Jun 22, 2015 7:09 am
ஒருமுறை டி.எல். மூடி பிரசங்கிக்க ஒரு ஓய்வுநாள் சிறுவர் பள்ளிக்கு விஜயம் செய்தார். அங்கு பிள்ளைகள் பாடிய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தார். பின்பு அவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். நம்முடைய ஆண்டவர் பெரியவரா? சிறியவரா? என்று கேட்டார்.
உடனே எல்லா பிள்ளைகளும் "பெரியவர், பெரியவர் "என்று கத்தினர்.மூடி பக்தனுக்கு மிகுந்த சந்தோஷம்.
ஆனால் ஒரு சிறு பிள்ளையோ,எந்த பதிலும் பேசாமல் சிந்தித்துக் கொண்டேயிருந்தது. அந்த குழந்தையைப் பார்த்து அவர், ஏனம்மா, நீ வாய் திறக்கவில்லை? என்ன யோசித்துக் கொண்டிருந்தாய்? நம்முடைய ஆண்டவர் பெரியவரா? சிறியவரா? என்று மறுபடியும் கேட்டார்.
அந்த குழந்தை அமைதியாய் எழும்பி நின்று "மிக பெரியவரும் அவர்தான், மிகச் சிறியவரும் அவர் தான் "என்றது கணீர் என்ற குரலில். எல்லாருமே ஆச்சரியத்தோடு அந்த குழந்தையை நோக்கிப் பார்த்தார்கள். "எப்படி அவர் பெரியவராகவும், அதே நேரத்தில் சிறியராகவும் விளங்க முடியும்? "என்று அவர் மறுபடியும் கேட்டார்.
அதற்கு அந்த சிறுமி சொன்னாள் ; ஐயா அவர் வானாதி வானங்களை சிருஷ்டித்த வானம் கொள்ளாதவர். அவர் பெரியவர். அதிலே சந்தேகமே இல்லை. அதே நேரத்தில் என்னுடைய சிறு இருதயத்தில் வந்து வாசம் பண்ணுகிறாரே.இந்த சின்ன உள்ளத்திறிகுள்ளும் வந்து பண்ணுகிறாரேன்றால் அவர் சிறியவர்தானே!
அதைக் கேட்ட மூடி பக்தனுக்கு அளவில்லாத பரவசம் :இதுவரை நான் எத்தனையோ இடங்களில் பிரசங்கித்திருந்தும் இந்த குழந்தைக்கு தெரிந்த பெரிய சத்தியம், பெரிய இரகசியம் எனக்கு தெரியாமல் போய் விட்டதே என்றார் அவர்.
ஆம்! நம் கர்த்தர் பெரியவராகவும் இருக்கிறார். அதே நேரத்தில் சிறியராகவும் இருக்கிறார்.
நாம் கிறிஸ்துவை காணும்போது வானாதி வானங்கள் கொள்ளாத தேவாதி தேவனாக காண்கிறது மாத்திரமல்ல , உங்களுக்குள்ளே வாசம்பண்ணி உங்கள் இருதயத்தை தம்முடைய மகிமையினால் நிரப்புகிறவராயும் இருக்கிறார் என்பதை ஒருபோதும் மறந்து போகாதீர்கள்.... ஆமென் அல்லேலூயா.
நன்றி: தேவனுடைய சத்தம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum