சமீபகாலங்களில், திரைத்துறையை விட
Sun Jun 21, 2015 9:03 pm
சமீபகாலங்களில், திரைத்துறையை விட, நீதித்துறையில் தான் காமெடியன்கள் அதிகமாக ஆகிவிட்டனர்.... அந்தக் காமெடிகளில் ஒன்று தான், ஹெல்மெட் அணியாவிடில் லைசென்ஸ் பறிமுதல் சட்டம்....
தங்களுக்குத் தெரியாத சட்டமில்லை ஜட்ஜய்யா.... சில கேள்விகள் மட்டும்....
1. தற்கொலை முயற்சி குற்றமல்ல என்கிறது புதிய சட்டம்.... ஹெல்மெட் போடாம நான் தற்கொலை பண்ணப் போறேன்னு சொன்னா விட்டுடுவீங்களா....
2. லைசென்ஸ் பறிமுதல் பண்ற அளவுக்கு ஹெல்மெட் போடாம இருக்கிறது அவ்ளோ பெரிய குற்றமா? ஹெல்மெட் போடலைனா, விபத்துல தலைல அடிபட்டா, வண்டி ஓட்டறவங்க உயிர் மட்டும் தான் போகும்.... ஆனா, சரக்கடிச்சுட்டு வண்டி ஓட்டுனா? எல்லா டாஸ்மாக்குலையும், பார்லயும் பார்க்கிங் வெச்சுருக்காங்க... அதை எல்லாம் கேன்சல் பண்ண மாட்டீங்க.... சல்மான் கான் லைசென்ஸ் பறிமுதல் பண்ணிட்டீங்களாய்யா?
3. ரோடு சேப்டினு சொல்றீங்க... ரோடு எல்லாம் சேப்டியாவா இருக்குது எசமான்? திடீர் திடீர்னு தோண்டறாங்க.... மழை பெஞ்சா எது ரோடு எது பள்ளம்னே தெரியல.... அட, மழை பெய்யலன்னா , ரோட்டுல வண்டியே ஓட்ட முடியறதில்ல.... அவ்ளோ தூசி.... இதை எல்லாம் சரி பண்ணிட்டு அப்புறமா ஹெல்மெட்டுக்கு வந்திருக்கலாமய்யா..
4. இளவட்டப் பசங்க சும்மா 200, 350 சிசி பைக் வெச்சுட்டு ரோட்டுல பறக்குறானுங்க... பணக்கார வீட்டுப் பசங்க, கார்ல மெர்சல் காட்றானுங்க.... இவனுங்களால, மத்தவங்களுக்கும் ஆபத்து அதிகம்... இவிங்க லைசென்ஸ் எல்லாம் கேன்சல் பண்ண மாட்டீங்களாய்யா?
5. எந்த சிக்னல்லயாவது, அரசாங்கக் கொடி கட்டுன காரோ, அரசியல் கட்சிக் கொடி கட்டுன காரோ நின்னு பார்த்துருக்கீங்களாய்யா? ஏதோ ரோடு அவங்க தாத்தா சொத்து மாதிரி போறானுங்களே.... அவங்க லைசென்ஸ் எப்போ கேன்சல் பண்ணுவீங்கய்யா?
6. ஏதாவது ஒரு சிக்னல்ல கேமரா இருக்கா? அல்லது கேமரா இருக்குன்னு யாருக்காச்சும் பயம் இருக்கா... அதை எல்லாம் எப்போ பிக்ஸ் பண்ணுவீங்கய்யா?
7. அட, எல்லாத்தையும் விடுங்க.... லைசென்ஸ் தானே... போனா போச்சுன்னு விட்டுட்டு, வேற ஒரு ஊர்ல புதுசா லைசென்ஸ் அப்ளை பண்ணா, அதைக் கண்டுபிடிக்கிற அளவுக்கு தொழில்நுட்பம் வெச்சுருக்கீங்களா?
இப்படி தேவையான ஒரு ஆணியும் புடுங்காம, சும்மா ஹெல்மெட் போடலன்னா லைசென்ஸ் பறிமுதல்னு சொல்றது, ஹெல்மெட் கம்பெனிகாரன் கிட்ட காசு வாங்கின மாதிரியோ, அல்லது கட்டிங் வாங்குற ட்ராபிக் போலீஸ் கிட்ட கமிஷன் பேசியிருக்கிற மாதிரியோத் தான் தெரியுது.... எவ்ளோ குடுத்தாங்க?
நன்றி: கேள்வி கேட்போர் சங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum