உலக பரிசுத்த வேதாகம தினம் - World Holy Bible Day - 21 - 06 - 2015
Sat Jun 20, 2015 10:26 pm
அனுசரிப்போம் வேதாகம நாளாக. 21 ஜுன்.
ஒரு 21 அதிகாரமாவது வாசிப்போம்.
முடிந்தால் 21 வசனங்களை மனனம் செய்வோம்.
Paul Prabhakar
*** உலக பரிசுத்த வேதாகம தினம்***
World Holy Bible Day - 21 - 06 - 2015
சில சகோதர, சகோதரிகளுடன் ஆலோசனை நடத்தியதற்குப் பிறகு நாளை இந்தியா மட்டுமல்லாது உலக முழுவதும் அனுசரிக்கப்படும் உலக யோகா தினத்தைப் புறக்கணிக்கும்படியாக, *** உலக பரிசுத்த வேதாகம தினம்*** ஆக கொண்டாட முடிவு செய்துள்ளோம்..
நாளை (21 - 06 - 2015) குறைந்தது நான்கு சுவிசேசங்களையாவது வாசிக்கும்படியாகவும், பைபிளின் மேன்மைகளைக் குறித்து சகவிசுவாசிகளுக்கு அறிவுணர்த்தும்படியாகவும் தீர்மானித்துள்ளோம்.
முகநூல் அன்பர்களும் எங்களுடன் இணைந்து *** உலக பரிசுத்த வேதாகம தினம்*** கொண்டாட அழைக்கிறோம்.
----------------------
சங்கீதம் 1:2 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம் 19:7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
சங்கீதம் 37:31 அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.
சங்கீதம் 119:165 உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.
ஓசியா 4:6 என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய் ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.
யோவான் 5:39 வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
----------------------
அன்புடன் பால் பிரபாகர் - பெங்களூர்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum