குழந்தைகளைக் கவரும் கோல்டு பப்படி!
Sat Jun 20, 2015 8:15 am
கோல்டு பப்படி
தேவையானவை: மாம்பழக் கூழ் - ஒரு கப், கடலை மாவு, கோதுமை மாவு - தலா அரை கப், பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், நெய் - அரை கப், பால் - ஒரு டம்ளர், கேசரி பவுடர் - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
செய்முறை: அகலமான வாணலியில் நெய்யை விட்டு கடலை மாவு, கோதுமை மாவு சேர்த்து வாசனை வரும்படி வறுத்து எடுக்கவும்.
கடலை மாவு, கோதுமை மாவு, பால், பொடித்த வெல்லம், மாம்பழக் கூழ், ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் எல்லாவற்றையும் வாணலியில் சேர்த்து கட்டி தட்டாமல் சுருளக் கிளறவும். கெட்டியான பதம் வந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறவிட்டு வில்லைகள் போட்டால்... கோல்டு பப்படி தயார்.
தேவையானவை: காளான் - 200 கிராம், பனீர் - 200 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், எள் - 2 டீஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், வெங்காயத்தாள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வாணலியில் எண்ணெய் விட்டு எள்ளை சேர்த்து, பொரிந்ததும் கரம் மசாலாத்தூள், ஊற வைத்த காளான் - பனீர் சேர்த்து வதக்கவும். இதில் சோயா சாஸ் விட்டு 2 நிமிடம் வதக்கி எடுத்து, பொடியாக நறுக்கிய வெங்காயத் தாளால் அலங்கரிக்கவும்.
சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ் இது.
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...
கோல்டு பப்படி: கொஞ்சம் ரவை சேர்த்து செய்தால், மேலும் ருசியாக இருக்கும்.
மஷ்ரூம் - பனீர் மசாலா: நறுக்கிய கலர் குடமிளகாய் சிறிதளவு சேர்த்து தயாரிக்கலாம். கலர்ஃபுல்லாக இருப்பதுடன், கூடுதல் சுவையும் கிடைக்கும்.
நன்றி: விகடன்
தேவையானவை: மாம்பழக் கூழ் - ஒரு கப், கடலை மாவு, கோதுமை மாவு - தலா அரை கப், பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், நெய் - அரை கப், பால் - ஒரு டம்ளர், கேசரி பவுடர் - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
செய்முறை: அகலமான வாணலியில் நெய்யை விட்டு கடலை மாவு, கோதுமை மாவு சேர்த்து வாசனை வரும்படி வறுத்து எடுக்கவும்.
கடலை மாவு, கோதுமை மாவு, பால், பொடித்த வெல்லம், மாம்பழக் கூழ், ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் எல்லாவற்றையும் வாணலியில் சேர்த்து கட்டி தட்டாமல் சுருளக் கிளறவும். கெட்டியான பதம் வந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறவிட்டு வில்லைகள் போட்டால்... கோல்டு பப்படி தயார்.
விருப்பப்பட்டால், நெய்யில் வறுத்த முந்திரியை துண்டுகளின் மேல் பதித்து அலங்கரிக்கலாம்.
- ராஜிவி, மேட்டுப்பாளையம்
மஷ்ரூம் பனீர் மசாலாதேவையானவை: காளான் - 200 கிராம், பனீர் - 200 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், எள் - 2 டீஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், வெங்காயத்தாள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அகலமான பேஸினில் இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். காளான், பனீர் இரண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துப் பிசறி, கால் மணி நேரம் ஊறவிடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு எள்ளை சேர்த்து, பொரிந்ததும் கரம் மசாலாத்தூள், ஊற வைத்த காளான் - பனீர் சேர்த்து வதக்கவும். இதில் சோயா சாஸ் விட்டு 2 நிமிடம் வதக்கி எடுத்து, பொடியாக நறுக்கிய வெங்காயத் தாளால் அலங்கரிக்கவும்.
சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ் இது.
- பத்மஜா, பெங்களூரு
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...
கோல்டு பப்படி: கொஞ்சம் ரவை சேர்த்து செய்தால், மேலும் ருசியாக இருக்கும்.
மஷ்ரூம் - பனீர் மசாலா: நறுக்கிய கலர் குடமிளகாய் சிறிதளவு சேர்த்து தயாரிக்கலாம். கலர்ஃபுல்லாக இருப்பதுடன், கூடுதல் சுவையும் கிடைக்கும்.
நன்றி: விகடன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum