இயேசு தான் நமக்காக மரித்தவர்..
Thu Jun 18, 2015 3:16 pm
1865-ம் ஆண்டு ஏப்ரல் 14 புனித வெள்ளி இரவு அன்று அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், கறுப்பின மக்களின் அடிமைத்தனத்தை உடைத்த காரணத்திற்காக, வாஷிங்டனில் ஒரு தியேட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது சடலம் வாஷிங்டனில் இருந்து இல்லினாய்சுக்கு அடக்கம் செய்யும் பொருட்டு எடுத்துச் செல்லப்பட்டது. அநேக பெருநகரங்கள், சிற்றூர்கள் இவைகளை எல்லாம் கடந்து அவரைச் சுமந்துகொண்டு வண்டி சென்றது. வாகனம் சென்ற எல்லா இடங்களிலும் சாலையின் இருபுறத்திலும் மக்கள் நின்று அவரது சடலத்திற்கு மரியாதையை செலுத்தினர்.
அல்பானி (ALBANY) என்ற கறுப்பின மக்கள் மிகுதியாக வாழ்ந்த நகரத்தை அவரது சடலம் கடந்து செல்கையில், எல்லா மக்களும் தங்களது விடுதலை நாயகனின் சடலத்தைப் பார்க்க சாலையில் கூடினர். ஒரு சிறுவன் தன்னுடைய தாயின் ஆடையின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு, ஆபிரகாம் லிங்கனின் சடலத்தைப் பார்க்க நின்று கொண்டிருந்தான். சடலத்தை சுமந்து சென்ற வண்டி அவர்களைக் கடக்கும்பொழுது, அந்த தாயானவள் அந்த சிறுவனை தோளில் தூக்கி நிறுத்தி, “மகனே நன்றாகப் பார். அவர் தான் உனக்காக மரித்தவர்” (My son, Take a deep look, He died for you) என்று உரத்த சத்தமாக கூறினாள்.
அருமை இரட்சகர் இயேசு கிறிஸ்துவும் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்த நம்மை விடுதலையாக்கும் படியாக ஜீவன் தந்துள்ளார். “நாம் அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பெற்றுள்ளோம்” (1பேதுரு 1:18-19). “வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய (இயேசு கிறிஸ்துவுடைய) சொந்த இரத்தத்தினாலும்.. நித்திய மீட்பை உண்டுபண்ணினார்” (எபி.9:12).
(குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாகியிருக்கிறது (கொலோ.1:14) தேவனுடைய இரத்தத்தாலே நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும் போது, அவருடைய ஜீவன் நமக்குள் உண்டாகி, நாம் நித்திய ஜீவனை உடையவர்களாக காணப்படுகிறோம். அடிமைத்தனத்தில் வாழ்ந்த மனுக்குலத்திற்கு தேவன் அளிக்கும் உன்னத ஆசீர்வாதம் இதுவே. தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோ.3:16). இயேசு தான் நமக்காக மரித்தவர். இயேசு தான் நமக்காக உயிரோடு எழுந்ததவர். இயேசு தான் நமக்காக பிதாவின் வலது பக்கத்தில் பரிந்து பேசுபவர். இயேசு தான் நம்மோடு கூடவே இருப்பவர். ஆமேன். அல்லேலுயா.
நன்றி: விசுவாசத்தில் வாழ்க்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum