காபி குடிப்பவர்களுக்கு சில டிப்ஸ்!
Wed Jun 17, 2015 4:51 pm
வெந்நீர் விட்டுத் தயாரித்த டிகாஷனை எந்தக் காரணம்கொண்டும் சூடுபடுத்தவே கூடாது..
டிகாஷனோடு சேர்த்து காபியை அடிக்கடி சூடுபடுத்தி அருந்துவது மிகவும் தவறு.
இன்ஸ்டண்ட் காபியைவிட டிகாஷன் சேர்க்கப்பட்ட காபியை அருந்துவதே பாதுகாப்பானது.
அன்றாடம் 2 கப் காபிக்கு மேல் வேண்டாம்.
மேலை நாடுகளில் அதிக அளவில் 'கோல்டு காபி’ (Cold Coffee) தான் அருந்துகிறார்கள். சூடான காபியைவிட, குளிர்ந்த காபி குடிப்பதே நல்லது.
காபி ஸ்ட்ராங்காக, சுவையாக இருக்கவேண்டும் என்பதற்காக, சிக்கரி சேர்க்கப்படுகிறது. காபியில் 20 சதவீதம் தான் சிக்கரி சேர்க்க வேண்டும். அதிகம் சேர்ப்பது நல்லதல்ல.
காபிக்கு மாற்றாக ஃப்ரெஷ் ஜூஸ் வகைகள், க்ரீன் டீ அருந்தலாம். அதிக அளவு புத்துணர்ச்சி கிடைக்கும்.
காபிக்கு அடிமையானவர்கள், காபியை உடனடியாக நிறுத்திவிடக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாகக் காபியின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், திடீரென நிறுத்தும்போது, குறிப்பிட்ட அந்த காபி அருந்தும் நேரத்தில் நியூரோ டிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டிவிடும் செயல் நின்றுபோவதால், கடுமையான தலைவலி ஏற்படலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum