வெளிச்சத்தின் பிள்ளைகள்
Mon Jun 15, 2015 3:54 pm
பொதுவாக இருளை மனம் விரும்புவதில்லை. இருளில் வாழும் விலங்குகள் பறவைகளாகிய கோட்டான்கள், வவ்வால்களைக்கூட நாம் விரும்புவதில்லை. இதில் ஆச்சரியமாகப் பாவ இருளை மனிதன் விரும்புவது மட்டும் விதிவிலக்கானது.
தேவன் நல்லதென்று கண்ட வெளிச்சத்தை விட்டு மனிதன் விலகியது தான் முதல் குற்றமும் கூட. என்றாலும், வேதத்தைச் சுமக்கும் கிறிஸ்துவை உடையவனுக்கு இருளில் எந்த வேலையும் இல்லை. ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை முழுவேதாகமும் கற்றுத் தருவதும் அதைத்தான்.
1. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டு (ஆதியாகமம் 1:4) உண்டாக்கிய வெளிச்சம் இருளுக்குப் பகை. கிறிஸ்துவை உடையவனுக்கு கிறிஸ்துவும், அவரது வார்த்தையான வேதமும் தான் வெளிச்சம். இதை விசுவாசிப்போம்.
2. நம்மில் இருக்கும் இருளை (பாவத்தை) தேவனாகிய விளக்கு பிரகாசித்து இருளை வெளிச்சமாக்குகிறது. (II சாமுவேல் 22:29 ). நம் ஆத்துமா படுகுழியில்(பாதாளத்தில்) விழாமல் இருக்க வெளிச்சம் அவசியம். (யோபு 33:28). விளக்கை ஒளிரச் செய்வோம்.
3. நம்மில் வெளிச்சம் இருந்தால் மட்டுமே சாட்சியுள்ள வாழ்வை வாழ்பவர்களாக இருப்போம். ”அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்” (யோவான் 5:35) என்று கிறிஸ்து யோவான் ஸ்னானகனின் வாழ்வைக்குறித்த சாட்சியாகச் சொல்கிறார். சாட்சியாயிருப்போம்.
4. இனி இருளை வெறுப்போம். வெளிச்சத்தைப்பெற்றுக் கொண்ட நாம் இனி இருளை இச்சியாதிருப்போம். கிறிஸ்து சொல்கிறார் ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று. (லூக்கா 11:35). எச்சரிக்கையாயிருப்போம்.
5. நம்முள் வந்த வெளிச்சம் நம்முடையதல்ல. அது கர்த்தருடையது. அதனால் தான் உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம் என்று சங்கீதக்காரன் சொல்கிறான். (சங்கீதம் 36:9). நமக்குச்சொந்தமல்லாத ஒன்று நமக்குப் பொறுப்பாய்த் தரப்பட்டிருக்கிறது. பாதுகாப்போம்.
6. அவருடைய வசனம் மட்டுமே நம் கால்களுக்குத் தீபமும், பாதைக்கு வெளிச்சமுமாயிருக்க முடியும். (சங்கீதம் 119:105.) வேதமே வெளிச்சம். (நீதிமொழிகள் 6:23) வெளிச்சம் வேண்டுமானால் வேதத்தை நேசிப்போம்.
7. கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும் (ஆமோஸ் 5:18). அன்று நமக்கு வெளிச்சம் கர்த்தரே. உலகமே இருளில் தள்ளப்பட்டாலும், கர்த்தரே நமக்கு நித்திய வெளிச்சமாய் இருக்க முடியும். (ஏசாயா 60:19, 20). கர்த்தருடைய நாளுக்காய் வெளிச்சத்துடன் ஆயத்தமாவோம்.
8, நித்தியத்தில் வெளிச்சம் மட்டுமே உண்டு. அங்கு இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் வெளிச்சத்திலே நடப்பார்கள் (வெளி 21:24) அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள். (வெளி 22:5). நித்திய வெளிச்சத்தை வாஞ்சிப்போம்.
9. வெளிச்சத்தில் வந்தால் கண்கள் கூசுகிறதா? இன்னும் பாவத்தைவிட மனதில்லையோ? இங்கு இருளிலேயே வாழ்பவர்களின் கண்களுக்கு பகலின் வெளிச்த்தைச் சந்திக்க இயலாது. துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்( யோபு 18:5, நீதி 13:9) அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்(யோபு 18:5) என்று துன்மார்க்கனின் முடிவாக வேதம் அறிவிக்கிறது. அசட்டை செய்யாதிருப்போம்.
10. வெளிச்சத்திற்கும் பகலுக்கும் பிள்ளைகளாவோம்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே. (எபேசியர் 5: முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். வெளிச்சமாகிய தேவனின் பிள்ளைகளாவோம்.
ஆகையால், நித்தியமாய் வெளிச்சத்தில் நடக்க இன்றே கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள் நண்பர்களே.(ஏசாயா 2:5)
நன்றி: சகோ.பென்னி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum