பரிசுத்தமாகுதல் சாத்தியமா?
Mon Jun 15, 2015 3:53 pm
பரிசுத்தமாகுதல் சாத்தியமா?
எல்லா அசுத்தங்களாலும் நிரப்பப்பட்டுவிட்ட இவ்வுலகில் இன்று அனேக கிறிஸ்தவர்களை கிறிஸ்துவண்டை நெருங்க விடாமல் செய்வது உள்ளிருக்கும் அதே அசுத்தம் தான். பரிசுத்தம் என்ற வார்த்தையே கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பலருக்கு இன்னும் அலர்ஜி. பரிசுத்தமாகியே தீரவேண்டும் என்பது அதிர்ச்சி. இன்னும் பலருக்கு பரிசுத்தமாகுதல் அல்லது பரிசுத்தனாக வாழ்தல் என்பதெல்லாம் இந்த உலகில் நடக்கிற காரியமா என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது அல்லது எப்படியாவது நானும் பரலோகம் சென்றுவிடுவேன் என்ற நப்பாசை எழுந்து நிற்கிறது.
வேதம் நன்றாகத் தெரிந்தவர்கள் கூட பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள், புதிய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் என்று வகைப்படுத்திவிட்டு, வேதகாலத்துடன் பரிசுத்தம் முடிந்தது என்று ஓதுங்கிக் கொள்கிறார்கள்.
பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரை தரிசிப்பதில்லை என்ற வசனம் தெரிந்தாலும், அதை அசட்டை பண்ணும் வாழ்வுதான் பிடித்திருக்கிறது. உலகத்தின் மீது வைத்திருக்கும் பிடி அப்படி. பரிசுத்தனாக மாறுதலின் முக்கியத்துவம் தெரியாததினால் இந்த வசனத்திற்குச் செவிசாய்ப்பதில்லை. வேதம் சத்தியம். அவரது வார்த்தை சத்தியமாக இருக்கும் பட்சத்தில், “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரை தரிசிப்பதில்லை” ! என்பதே சத்தியம்.
ஏன் வேண்டும் பரிசுத்தம்?
உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள். லேவியராகமம் 19:2 என்று தேவனே ஆணையிட்டார். நாம் நேசிக்கும் நம் தேவன் பரிசுத்தர். அதனால் அவர் நம்மிடம் விரும்புவதும் பரிசுத்தம்தான். காலில் சேற்றுடன் நம் குழந்தைகளை மார்பிள் தரையில்கூட வர அனுமதிக்காத நாம் அசுத்த சிந்தையோடு பரம கானானுக்குள் நுழைந்துவிடவேண்டும் என்று நினைப்பது நியாயமா? நீங்கள் எனக்குப் பரிசுத்த மனுஷராயிருக்கக்கடவீர்கள் யாத்திராகமம் 22:31 என்றுதான் தேவன் இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த கட்டளை. .உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரீகத்தைப்பெற்று, என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்பது தானியெலுக்கு சொன்ன வார்த்தை. தானியேல் 7:18
ஏன் அசுத்தம் ஏன் பரிசுத்தம்?
நம்முள் வந்த பாவமே பரிசுத்தகுலைச்சலுக்குக் காரணம்.
ஒரு பன்றி கூட வெளிப்புறத்தில் அசுத்தமாக அலைகிறதேன்றால், அதற்குக் காரணம் பன்றி அல்ல, சாக்கடையை உருவாக்கிய மனிதர்களே. அந்த அளவு இவ்வுலகை எல்லாவித அநீத்ததாலும் அசுத்தத்தாலும் நிறைத்தது மனுஷராகிய நாம்தான். மனிதன் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் அசுத்ததை உண்டு பண்ணியதற்குக் காரணம் அசுத்ததை தன் இருதயத்தில் அதிகமாக விரும்பியதுதான்.
ஆனால், நாம் விரும்பிய அசுத்ததை உண்டாக்கிக் கொள்ள அனுமதித்து தேவனுடைய நீதி என்றால், அவருடன் பரிசுத்தவான்களை மட்டுமே நித்தியமாக வாழச்செய்வதும் அவரது நீதிதான். அசுத்தம் நமது விருப்பம் என்றால் பரிசுத்தம் அவரது ஒரே விருப்பம். எனவே அவருடன் சேர்வதற்கு பரிசுத்தவானாய் மாறுவதைத் தவிர வேறு வழியே கிடையாது.
பரிசுத்தமாக வாழ்தல் சாத்தியமா?
எந்த ஒரு விஷயத்தில் இறங்கும் முன்பு அது சாத்தியமா என்று சிந்திக்கும் போது இதை யாராவது இதைச்செய்திருக்கிறார்களா, அதில் வெற்றிபெற்றிருக்கிறார்களா என்று அறியமுற்படுவது மனித இயல்பு. அதனால்தான், டென்சிங் நார்கேயும், எட்மண்ட் ஹில்லாரியும் சாதித்தபின்பு எவரெஸ்டில் ஏறியவர்கள் நூற்றுக்கணக்கானோர். நமக்கு ஒரு உந்துசக்தி அல்லது உதாரணம் இருப்பதை எல்லோருமே விரும்புவதுதான்.
இன்று பரிசுத்த வாழ்வு என்பது ஒருமனிதனுக்குச் சாத்தியப்படுமா என்றால், அதற்கு கிறிஸ்துவே நமக்கு உதாரணமாக வருகிறார். பழைய ஏற்பாட்டிலேயே கிறிஸ்து பரித்தராகத்தான் தீர்க்கதரிசனமாக உரைக்கப்படுகிறார். ஏசாயா 49:7. மட்டுமல்லாமல், நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்குத்தான் அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டார். எபேசியர் 1:4.
இனி திரும்ப வரும்போதும், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாக (1 பேதுரு 1:19 ) அடிக்கப்பட்ட மனுஷகுமாரன் இனி அவர் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார் என்று வாசிக்கிறோம். (மத்தேயு 25:31). அவருடன் கூடவரும் தூதரும் பரிசுத்தராயிக்கின்றனர். கிறிஸ்து தன் வாழ்விலும் பரிசுத்தராயிருந்தார்; இனித் தம் வருகையிலும் பரிசுத்தராயிருப்பார். என்றும் மாறா பரிசுத்தரைச் சேர பரிசுத்தம் நமக்கு முன் வைக்கப்பட்ட பலவற்றில் ஒரு தெரிவாக(choice)அல்ல, மாறாக கட்டாயமாக இருக்கிறது.
பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டு வந்த கிறிஸ்து (யோவான் 10:36) மனிதனாகவும் பரிசுத்தராய் வாழ்ந்தார் என்றால் எல்லா மனிதனாலும் அது நடத்திக்காட்டப்பட வேண்டும் என்பதை ஓங்கிச்சொல்லவே. கொரிந்து பட்டணத்திற்கு பவுல் எழுதும்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கு (1 கொரிந்தியர் 1:2 )என்றுதான் விளித்து எழுதுகிறார்.
சாதாரண மனிதனால் முடிகிற காரியமா?
இப்பொழுது நீங்கள் சொல்லலாம், கிறிஸ்து பரிசுத்தராய் வாழ்ந்தார் என்றால் அவர் கிறிஸ்து, அவர் எப்படி இருந்தாலும் தேவகுமாரன் என்று. இப்படிக் கூறக்கூடும் என்றுதான் அவர் அப்போஸ்தலனாகிய பவுலைத், தான் பூமிக்கு வந்த சென்ற உடனேயே தெரிந்துகொண்டார். சரீரத்தில் பாடுள்ள மனிதனாகிய பவுல் தன் பரிசுத்த வாழ்க்கையால் ஒரு உதாரண தேவபிள்ளையாக, ஒரு பரிசுத்தனாக வாழ்ந்து காட்டிச்சென்றார். அதனால்தான் வேதத்தில் புதிய ஏற்பாடு அவரது எழுத்துக்களால் நிரம்ப தேவன் அனுமதித்தார்.
ஆகையால், என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன் (1 கொரிந்தியர் 4:16 ) என்று தன்வாழ்வை உதாரணமாகப் பவுல் காட்டுவதில் இருந்து ஒரு மனிதன் தன் பரிசுத்தவாழ்வை எவ்வளவு உறுதியாக உதாரணம் காட்ட முடியும் என்று பாருங்கள். இன்னும் ஆணித்தரமாக, நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள் (1 கொரிந்தியர் 11:1) என்றார் பவுல்.
எதற்கும் உதாரணம் தேடும் நமக்கு கிறிஸ்துவும், பவுலும் முன் நிற்கிறார்கள். இன்னும் ஏராளமான உதாரண புருஷர்களும் வேதத்தில் உண்டு. வேதகாலத்திற்குப்பின்பும் உண்டு. இப்பொழுது சிந்திக்கலாம் நண்பர்களே: ஒவ்வொரு மனிதனும் பரிசுத்தனாக மாறியே தீரவேண்டும், தேவனைத்தரிசிப்பதற்கு. நம் ஆவி (2 கொரிந்தியர் 7:1) ஆத்துமா சரீரத்தில் (1 கொரிந்தியர் 7:34) அசுத்தம் களைவோம். பரிசுத்த வாழ்வை வாஞ்சிப்போம். பரிசுத்தராய் மாறுவோம்.
யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
எபிரெயர் 12:14
நன்றி: சகோ.பென்னி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum