”ஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும், அவசியமான ஒரு தீர்வும்”
Mon Jun 15, 2015 3:46 pm
”ஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும், அவசியமான ஒரு தீர்வும்”
என்ற இந்தத் தலைப்பில் இருக்கும் கட்டுரை 1995ம் ஆண்டு வெளிவந்த வேதாகமப்பொது மொழிபெயர்ப்பைக்குறித்த ஒரு ஆழமான அலசலாகும். அனைவரும் வாசிக்க வேண்டியது. ஜயமோகன் என்ற ஒரு அபத்தக்களஞ்சியம் தமிழ் இலக்கிய (?) உலகில் அவ்வப்போது வெளியிடும் உளறல்களோடு வேதாகமத்தைக் குறித்த தன் புலமையையும் வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு அவசியமில்லாத ஒன்றை அவர் செய்திருந்தாலும், பொது மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தும் சிலர் அறியும்வண்ணம் பாஸ்டர் பாலா எழுதியுள்ள இக்கட்டுரை, ஒரு மொழிபெயர்ப்பின் மூலம் வேதத்தைச் சிதைக்க எவ்வாறெல்லாம் முயன்றுள்ளனர் என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வழிவகுத்திருக்கிறார்.
தனிப்பட்ட முறையில் இம்மொழிபெயர்ப்புக்கு என் ஆதரவு இல்லையென்றாலும், இன்னும் ஒரு நல்ல மொழிபெயர்ப்புக்கு நிச்சயம் இடம் இருக்கிறது என்று மட்டும் நான் உறுதியாகச் சொல்வேன்.
ஆங்கிலத்தில் பல தவறான மொழிபெயர்ப்புகள் வந்திருந்தாலும், ஏற்றுக் கொள்ளும் வண்ணம் பல்வேறு முயற்சிகள் வந்த வண்ணமே உள்ளன. ஆனால் முதலாவது இந்தியமொழியில் வந்த தமிழில் சில நூறு ஆண்டுகளுக்கு முன் வந்த மொழிபெயர்ப்பே உள்ளது. அதன் பின் இந்திய வேதாகமச்சங்கம் எந்த உருப்படியான மொழிபெயர்ப்பு வேலையில் இறங்கியதாகத் தெரியவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது. மொழிவளர்ச்சி பலபரிமாணங்களைக் கண்டபின்னும் இன்னும் அருமையான ஒரு மொழிபெயர்ப்பு முயற்சி எடுக்கப்படவில்லை.
https://biblelamp1995.files.wordpress.com/2014/07/biblelamp-2014-3.pdf
என் மனதில் இருந்த வருத்தத்தைபோல் சிலருக்கு இருக்கலாம். இருந்தால் கருத்தினைப்பதியுங்கள்.
சகோ.பென்னி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum