தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்.
Mon Jun 15, 2015 3:26 pm
ஒரு சிங்கம் காட்டில் வேட்டையாடும் போது கவனித்திப் பார்ப்பீர்களென்றால் (டிவீயில்தான்!), அது தன் இரை இருக்கும் கூட்டத்தில் உள்ள பெரிய விலங்கை அல்லது வலிய ஒன்றை முதலில் தெரிந்தெடுப்பதில்லை. யானையையோ, பெரிய காட்டெருமையையோ கொல்ல முதலில் முயற்சி செய்யாது. பெரும்பாலும், எளிய இலக்கான
மான் போன்ற வலிமையற்றவையே அவற்றின் இலக்காக இருக்கும். இல்லையென்றாலும், குட்டிகளைக் கூட்டத்திலிருந்து பிரிக்கும் முயற்சியில் ஈடுபடவும் செய்யும்.
பெரிய காட்டெருமையை போன்ற தன்னை எதிர்க்கத்திராணியுள்ள விலங்குகளையும் தவிர்த்துவிடவே சிங்கள் முயற்சி செய்யும். மேலும், சிஙகத்தால் நீண்டநேரமோ, மிக அதிக தொலைவோ, சிறுத்தையைப் மிகவும் வேகமாகவோ ஓடயிலாது.
சிங்கம், ஒரு மான் கூட்டத்தில் தன் வேட்டையை முடிவு செய்தபின், மிகவும் உன்னிப்பாக சிறிது நேரம் கவனித்துப், பதுங்கி, அதிக சத்தமிடாமல் நெருங்கிப் பின் கூட்டத்தில் எளிதாக வேட்டையாடக் கூடிய மான் எது என்று முதலில் முடிவுசெய்யும். அது பெரும்பாலும், சுதாரிப்பற்ற, எளிய, குட்டியான மான் ஒன்றையே தேர்ந்தெடுக்கும். அல்லது அதன் இரை கூட்டத்தில் இருந்து பிரிந்த அல்லது தனக்கு அருகாமையில் இருக்கும் மானாகவோதான் இருக்கும். பின்பு ஒரே பாய்ச்சலாகச் சென்று தன் வேட்டையை நடத்தி முடிக்கும்.
இந்தச் சிங்கத்தைத்தான் பிசாசுக்கு ஒப்பிடுகிறார் பேதுரு. தனித்துவிடப்பட்ட, அல்லது தனித்துத் திரிகிற, பலவீனமான, வேதவசனம் இல்லாத, அசட்டையான, சாரமற்ற, தெளிந்த புத்தி இல்லாத, விழிப்பில்லாத மனிதர்களே பிசாசின் இலக்கு. இரை!
இன்று புரட்டு உபதேசங்களில் விழுவதானாலும் சரி, உலகக் கவர்ச்சியில் மயங்குவதானாலும் சரி - சிங்கம் எது என்று அறியாமல் இருந்தாலும், தான் குறிவைக்கப்பட்டிருப்பதை உணராவிட்டாலும், வேட்டையாடி விழுங்கப்படுவது உறுதி.
I பேதுரு 5:8 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
சகோ.பென்னி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum