மாணவர்களுக்கு பெற்றோர்கள் செய்வதும், செய்யக் கூடாததும்
Tue May 19, 2015 8:23 pm
- தமக்கும் தெரியாமல், எவரையும் விசாரிக் காமல், ரகசியமாக மகனை அவனால் முடியாத படிப்பில் சேர்ப்பது.
- பள்ளியில் மந்தமாக இருந்ததால், மேற்படிப்பு வாராது என்று கருதி நல்ல கோர்ஸில் கிடைத்த இடத்தை விட்டுவிடுவது.
- வசதியில்லாத பெற்றோர், முடியாது என்றறிந்தும் அதிகச் செலவாகும் படிப்பை மேற்கொள்வது.
- பெற்றோர் பிள்ளைகள் விஷயத்தில் படிப்பில் பாரபட்சமாக இருப்பது.
- சிறப்பான பள்ளி பெற்றுக் கொடுத்த மார்க்கை நம்பிச் சிறப்பான படிப்பில் சேர்த்து அவதிப்படுவது.
- பையன் ஆசைப்படுகிறான் என்று அவனால் முடியாததை அவனுக்குப் பெற்றுக் கொடுப்பது.
- பெரிய படிப்பை நாடும் பையனுக்கு முன்கூட்டியே அதற்குத் தகுந்த பழக்கங்களை ஏற்படுத்தத் தவறுவது.
- கட்டாயத்தின் பேரில் மகனிடம் காரியத்தைச் சாதிக்கலாம் எனத் தப்புக் கணக்குப் போடுவது.
- மகன் சொல்லும் அத்தனைப் பொய்களையும் நம்பி அவன் வாழ்வைச் சிதறடிப்பது.
- கெட்ட பழக்கம் இருப்பது தெரிந்தும் நிறையப் பணம் கொடுப்பதை நிறுத்த முடியாதது.
மேற்கூறிய காரணங்களையும், அவைபோன்ற மற்ற தொந்தரவை உற்பத்தி செய்யும் காரணங்களையும் முனைந்தால் தடுக்க முடியும். பள்ளியில் மந்தமான பிள்ளைகள் கல்லூரியில் சிறப்பாக இருப்பதுண்டு. இவர்களுக்குக் காலம் கடந்து மலர்பவர்கள் (latebloomers) எனப் பெயர். பெற்றோர் சிறப்பான எதிர்காலத்தை இக்குழந்தைகட்குக் கொடுக்க முடியாமல் போவதைத் தடுக்க வேண்டுமானால் படிப்பு சம்பந்தமான அனுபவம் உள்ளவர்களையோ அல்லது அவனுடைய பழைய ஆசிரியர்களையோ கலந்தாலோசிக்க வேண்டும்.
பையன் மேற்படிப்புக்குப் போவதற்கு ஓரிரு ஆண்டுகள் முன்பே யோசிக்கத் தொடங்கி கீழ்க்காண் பனவற்றைக் கடைப்பிடித்தால் 90, 95 பங்கு பிரச்னை விலகுவதைக் காணலாம்.
அறிவில்லாத பேராசையைப் பூர்த்தி செய்வதைப் பெருமுயற்சி என்று தவறாகக் கருதாமல் வரையறை எது, பையனுடைய புத்திசாலித்தனம், நம் வசதி, அவன் உடல்நிலை, அவனுக்குரிய இன்றையப் பழக்கம், எதை அவனால் சமாளிக்க முடியும், எது முடியாது என்று ஆராய்ந்து, நாம் அறியும் எல்லையைத் தாண்டக்கூடாது.
"இந்தத் தெருப் பிள்ளைகள் எல்லாரும் செய்வதை நம் பையனும் செய்யப் பிரியப்படுகிறான். அவனால் முடியாது.
இருந்தாலும் நான் ஒப்புக்கொண்டேன்'' என்று சொல்வது போன்றவற்றை ஆயிரம் காலத்துப் பயிரான படிப்பு விஷயத்தில் சொல்லக்கூடாது.
- நமக்கு அனுபவமில்லை என்றால் நாம் விரும்பும் கோர்ஸில் அனுபவமுள்ளவர்களை அணுகி யோசனை கேட்கத் தயங்கக் கூடாது.
- நம் பிள்ளையைப் பொருத்தும், அவனுக்கு நாம் கருதும் கோர்ஸைப் பொருத்தும் ஏதேனும் (special) விசேஷமான முக்கியத்துவம் உள்ளவை இருக்கின்றனவா, அதை நாம் புறக்கணிக்கின் றோமா என்று தக்கவரை நாடி யோசனை கேட்க வேண்டும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum