ஆன் லைன் ஆப்புகள்!
Sun May 17, 2015 4:28 pm
இணையதள உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நம்முடைய தேவைகளில் பல இணையதளம் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக எந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்பதை கூட கூகுள் மேப் மூலம் கண்டறிய தொடங்கி பல காலங்களாகி விட்டன. எல்லாவித தேடல்களுக்கும் இணையதளத்தில் பதில் கிடைக்கின்றன.
மின்சார கட்டணம், செல்போன், குடிநீர் பில் செலுத்த கவுண்டர்களில் கால்கடுக்க காத்திருந்த காலம் மாறி விட்டது. இணையதளம் இருந்தால் இல்லத்திலிருந்தே ரயில் டிக்கெட் முதல் அனைத்து பில்களையும் நொடிப்பொழுதில் செலுத்தி விடலாம். இந்த இணையதள உலகில் நம்முடைய ஒவ்வொரு செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படுவதை பலர் உணருவதில்லை.
இந்த இணையதளத்தால் வேலைகள் சுலபமாகி நேரம் சேமிக்கப்படுகிறது என்பதையும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் சில வலைத்தளத்தில் இருக்கும் பிரச்னைகள் இணையத்தளவாசிகளை படாய்படுத்துகிறது. இந்த இணையதளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் சிலருடைய குமுறல்கள் இது.
"இணையதளம் மூலம் பான்கார்டுக்கு விண்ணப்பித்தேன். அவர்கள் கேட்ட விவரங்களையும், ஆவணங்களையும் அதில் பதிவு செய்தேன். பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அதற்குரிய நகல்களையும் அனுப்பி வைத்தேன். இதற்குரிய கட்டணமும் ஆன் லைனில் செலுத்தி பல நாட்கள் கழித்த நிலையில் உங்களுடைய விண்ணப்பங்கள் சில காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டு விட்டதாக இமெயிலுக்கு மெஜேஜ் வருகிறது. அதில் நீங்கள் அனுப்பி உள்ள ஆவணங்களுக்கும், விண்ணப்படிவத்தில் உள்ள விவரங்களுக்கும் வேறுபாடு இருக்கின்றன. பிறந்த தேதி, முகவரி பொருந்தவில்லை என்று காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. ஆனால், நான் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களையும் சரியாக அனுப்பி இருக்கிறேன். அப்படி இருந்தும் எதற்காக என்னுடைய விண்ணப்பப்படிவம் நிராகரிக்கப்பட்டது என்பது தெரியவில்லை, இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் கஸ்டமர்கேரில் புகார் தெரிவித்தேன். அவர்களும் உங்களது கோரிக்கை பரிசீலிப்பதாக சொன்னார்கள். சில மாதங்களாகியும் எனக்குப்பதில் இல்லை. இதனால் நான் செலுத்திய விண்ணப்ப கட்டணம் விரயமாகி இருக்கிறது" என்றார்.
அடுத்து பேசிய மற்றொருவர், என்னுடைய விண்ணப்பப்படிவத்தில் அனைத்து விவரங்களும் சரியாக இருக்கின்றன. ஆனால் முகவரியில் வீட்டின் எண்ணை சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் தவறுதலாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். அந்த முகவரிக்கு எனக்கு பான் கார்டும் அனுப்பபட்டு இருக்கிறது. முகவரி சரியில்லை என்று காரணம் சொல்லி போஸ்ட்மேன் அந்த பான்கார்டை எனக்கு டெலிவரி செய்யாமல் திரும்ப அனுப்பி விட்டார். விண்ணப்பித்து ஒரு மாதம் காத்திருந்தும் கைக்கு எட்டும் தூரம் வரை வந்த பான்கார்டு நிறுவனத்தினர் செய்த தவறால் திரும்ப அனுப்பப்பட்டு இருக்கிறது" என்றார்.
இதுகுறித்து பான்கார்டை வாங்கி கொடுக்கும் யுடிஜ நிறுவனத்தினர் கூறுகையில், "எங்கேயோ தவறு நடந்து இருக்கிறது. அந்த தவறு எங்கள் தரப்பில் இருந்தால் அதை நிச்சயம் சரிசெய்வோம். அதே நேரத்தில் விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது" என்றனர்.
பான்கார்டு மட்டுமல்ல ஒவ்வொரு ஆன் லைன் வர்க்கத்திலும் பல்வேறு தில்லாலங்கடி வேலைகள் நடக்கின்றன. ரயில், பஸ் டிக்கெட்களை முன்பதிவு செய்யும் போது பணம் செலுத்திய பிறகு டிக்கெட் கிடைக்காமல் பலருடைய பணம் விரயமாகி இருக்கிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் தெரிவித்தும் பல மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். சில நேரங்களில் மட்டுமே பணம் நம்முடைய வங்கி கணக்குக்கு வந்து சேருகிறது. இதுபோன்று ஆன் லைனில் நடக்கும் ஒவ்வொரு வர்த்தகமும் வில்லங்கமாகவே இருப்பதாக பலர் குற்றம் சாட்டுகிறார்கள். ஆன் லைன் வர்த்தகத்தின் மூலம் பணத்தை இழந்தவர்களும், மன வேதனை அடைந்தவர்களும் பலர் இருக்கிறார்கள்.
ஆன் லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு முன்பு கவனம் தேவை.
-எஸ்மகேஷ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum