தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இன்டர்நெட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இன்டர்நெட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் Empty இன்டர்நெட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

Mon May 11, 2015 8:16 am
இன்டர்நெட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
==============================================

இன்டர்நெட் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும் சில சுவாரஸ்யமானதகவல்கள் பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
* 2010ம் ஆண்டு கூகுள் நிறுவனம்இன்டர்நெட்டின் மொத்த அளவு 6 மில்லியன் டெராபைட்களாக (terabyte) இருக்கும் என எதிர்பார்த்தது.
* இன்டர்நெட் பயன்படுத்தும் 2.4பில்லியன் பயனாளிகளில் 50 சதவீதத்தினர் பேஸ்புக் தளத்தினை மட்டும் தான் பயன்படுத்துகின்றனர்.
* உலகின் முதல் மின்னஞ்சல் 1971ஆம் ஆண்டு ரே டாமிலின்ஸன் (ray tomlinson) என்பவரால் அனுப்பப்பட்டது.
* தினமும் 250 பில்லியன் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதில் 81 சதவீத மின்னஞ்சல் ஸ்பேம் (Spam) ஆகும்.
* உலகின் முதல் ட்வீட்டினை அதன்நிறுவனர் ஜாக் டார்சீ (Jack Dorsey)2006 ஆம் ஆண்டு மார்ச் 21ம் திகதி பதிந்தார். தற்போது தினமும் 1,700 டுவீட்கள் ஒவ்வொரு நொடியிலும் பதியப்படுகின்றன.
* தற்சமயம் 637 மில்லியன் வெப்சைட்களும் (Website), 250 மில்லியன் ப்ளாகுகளும் (Blog)பயன்பாட்டில் இருக்கின்றன.
* ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 4200 புதிய டோமைன் (Domain)பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதன் எண்ணிக்கை 37 மில்லியனாக இருக்கின்றது
* பேஸ்புக் தளம் 1.2 பில்லியனாக தற்சமயம் இருக்கின்றது. இது 17% மக்கள் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர்
* 19% சதவிகிதத்தினர் தங்கள் துணைகளை ஆன்லைன் மூலமாக தேர்ந்தெடுத்து திருமணம் செய்துக்கொள்கின்றனர்.
* பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் (mark zuckerberg)பேஸ்புக் ஐடி நம்பர் 4.
* முதல் யூடியூப் (youtube)வீடியோ ஏப்ரல் 23, 2005ம் ஆண்டு பதிவேற்றப்பட்டது. அந்த வீடியோ “Me at the zoo” ஆகும். தற்போது அந்த வீடியோவை 23 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
* இணையத்தில் அதிகமாக தேடப்பட்ட வார்த்தை “What is”
* GIF format ஸ்டீவ் வில்கே (Steve wilke)என்ற கணனி சேவை பொறியாளரால் 1987ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
* “Gangnam Style” என்ற பாடல் யூடியூப்பில் அதிக பேர் பார்த்த வீடியோவாக இருக்கிறது. இதுவரை 2 பில்லியன் பேர் இதை பார்த்துள்ளனர்.
* கடந்த 2004ம் ஆண்டு கூகுள் தேடுபொறி மக்களின் பயன்பாட்டிற்கு கொடுக்கப்படும்போது, அதன் வடிவமைப்பு இப்படி தான் இருந்தது.
* மக்களால் பெரிது விரும்பப்படும் பேஸ்ஃபுக் தளத்தின் 2004ம் ஆண்டு பயன்பாடு இவ்வாறு தான் இருந்தது.
* WWW (World Wide Web) இந்த கணனியை வைத்து தான் Tim Berners-Lee என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார்.
நன்றி,
time24
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இன்டர்நெட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் Empty Re: இன்டர்நெட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

Mon May 11, 2015 8:17 am
கணினியில் IP என்றால்?
----------------------------------------------------------------------

அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றின் உலகளாவிய ஆய்வின் முடிவில்,இன்றைய நாளில் இணையத்திற்கு வருபவர்களின் வாசிப்புப் பழக்கம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்திற்கு வருபவர்களில் அதிகமானோர் தேவையற்ற பக்கங்களைப் படிப்பதிலும், பொழுது போக்குகளில் அதிகம் கவனம் செலுத்துவதிலுமே உள்ளனர் என்றும்,ஆனாலும் இவை சிறிது சிறிதாகவே குறைந்து வருவதும், நல்லவற்றை அவசியமான, தேவையானவற்றை படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு எடுத்துக் காட்டாக,சமூகத் தளங்களின் மேல் உள்ள ஆர்வத்தையும், அங்கு நடந்து வரும் சிலரின் தவறான செயல்களையும் சொல்லலாம்.
ஒரு IP (Internet Protocol ) இலக்கத்தை மறைப்பதால், ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட வீடியோ ஒன்றை நாம்பார்க்கவும் முடியும். இது நாம் எந்த proxy ஐ பயன்படுத்துகிறோமோ அதற்கேற்ப இணையம் வேகம் இருக்கும் என்பதால்,நாம் ஒரு proxy ஐ தெரிவு செய்யு முன்னர் அதன் வேகத்தைக் கண்டு கொண்டு அந்த புரொக்சியை தெரிவு செய்வது சிறந்தது ஆகும்.
இப்போது IP ,Internet Protocol, யை மறைப்பதை கண்டறிய முன்னர்,IP என்பது என்ன என்பதை தெரிந்து கொள்வது நல்லது ஆகும்.IP Address என்பது உங்கள் தொலை பேசி இலக்கம் போல்,வீட்டு முகவரி என சொல்லலாம். அந்த முகவரியை அப்படியே எழுதினால் அதை கணினி புரிந்து கொள்ள வேண்டும்.புரிந்து கொள்ளா விட்டால்........பள்ளி வகுப்பறையில் ஒரு குழந்தையை பெயர் சொல்லி அழைக்கும் போது,அந்தக் குழந்தைக்கு தன் பெயர் தெரியா விட்டால்...........அதனால் தான் கணினி புரிந்து கொள்ளக் கூடிய வகையில் ஒரு இலக்கத்தை வைத்து விட்டால், கணினி உடனே புரிந்து கொள்ளும். ஒரு கணினிக்கு ஒரு இலக்கம் மட்டுமே இருக்கும். வகுப்பறையில் ஒரே பெயரில் நான்கு பேர் இருந்தால் என்ன செய்வது? சின்ன மணி,பெரிய மணி,குட்டி மணி இப்படி சொல்லித் தான் அழைக்க வேண்டும்.கோடிக் கணக்கான கணினிகள் இருக்கின்றனவே எப்படி முடியும்? இப்போது நம் முன்னே வருகிறது,IP இலக்க முறை.
ஒரு பக்கத்தின் IP ஐ கண்டறிய start. - all programs- accessories – command prompt ல் சென்று ping google.com என கொடுத்து enter செய்தால் google.com ன் IP ஐ காட்டும்.நீங்கள் உங்கள் கணினியில் start.- all programs- accessories – command prompt ல் சென்று ipconfig/all என எழுதினால் உங்கள் ip முழு விபரமும் காட்டும். தற்செயலாக தற்போதய ip4 address போதுமானதாக இல்லையேல், உங்கள் கணினி புதிய ip6 ல் வேலை செய்யக் கூடியதாக, தற்போது வரும் கணினிகள் அனைத்திலும் அமைத்துள்ளார்கள். உங்கள் கணினியின் ip6 address ஐயும், அங்கே காண முடியும்.IP என்பது 0 – 255 ற்கு உட்பட்ட நாலு எண் கூட்டைக் கொண்டது.(66.72.98.236 or 216.239.115.148)static IP என்பது எப்போதும் மாறாமல் இருக்கும். Dynamic IP என்பது நீங்கள் ஒவ்வொருமுறையும் இன்டெர்னெட் போகும் போதும் மாறக் கூடியது. ஆனாலும் உங்கள் இணைப்பு broadband ஆக இருந்தால்,அதாவது router மூலம் இணைக்கப்பட்டால், இந்த dynamic IP எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும்.
static Ip யை நாம் மாற்றவும் முடியும். அதே போல் நாம் IP யை மற்றவர்கள் கண்டு பிடிக்காமலும் செய்ய முடியும்.அப்படி செய்தால் நீங்கள் ஒரு மின் அஞ்சல்அனுப்பினால் மற்றவர் எங்கிருந்து அனுப்பியது என்று கண்டு பிடிக்க முடியாது.அதே போல் ஒரு இணையப் பக்கத்திற்கு சென்றால்,உங்களை அடையாளம் காணவோ அல்லது எங்கிருந்து வருகிறீர்கள் என்றோ கண்டு பிடிக்க முடியாது.
International Corporation of Assigned Names and Numbers(ICANN), Internet Assigned Numbers Authority - IANA இந்த IP யை வேறு சில நிறுவனங்களுடன் சேர்ந்து நிர்ணயிக்கிறது.இந்த ip யை A,B,C,D,E என வகைப்படுத்தி செயல்படுத்துகிறார்கள்.
A- 1-126 /8
B- 128-191 /16
C- 192 -223 /24
D- 224 - 239E -224 - 255

என்ற தொடக்க எண்களைக் கொண்டு இயங்குகிறது.IP 6 இப்படி இருக்கலாம் 2001:0db8:85a3:0000:0000:8a2e:0370:7344 அல்லது 2001:db8:85a3::8a2e:370:7344
இப்போது IP இலக்க முறை பற்றி சொல்வதானால்,இவற்றில் இரண்டு முறைகள் உண்டு.தற்போது நடைமுறையில் இருப்பது ip4 -இது 32 bit முறையும்,இனி வர இருப்பதுIP6 126 bit முறையும் என சொல்லலாம். தினமும் கணினி பாவனை அதிகரிப்பதால்,சில வருடங்களில் ip4 ல் உள்ள IP address போதுமானதாக இருக்காது என்பதால், IP6 கொண்டு வரப்பட்டது.IP 4 ல் 4,294,967,296 addresses ம் IPv6 340,000,000,000,000,000,000,000,000,000,000,000,000 - IP addresses ம் பயன்படுத்த முடியும்.
ஒரு IP இலக்கத்தில்network, Hostஎன இரு பிரிவுகள் இருக்கும். 200.168.212.226 என்ற IP இலக்கத்தில் 200.168.212 நெட்வேர்க் இலக்கமாகவும்,223 ஹோஸ்ட் இலக்கமுமாகும்.உங்கள் ISP(Interner service provider) BSNL போன்றவை உங்களுக்கு தருபவை external ip address ஆகும்.அதாவது,உங்களுடைய உண்மையான ip யை router மாற்றி வேறொரு ip யைத் தான் இணையத்திற்காக பாவிக்கும்.ஒரு Router ன் IP 192.168. எனத் தொடங்கும்.
இப்போது ஒரே கணினியில் பல கணினிகளை இணைப்பது பற்றி கேள்விகள் எழலாம்.இதில் subnet mask, Router,TSP/IP அதிக பங்களிப்பை செய்கிறது.இந்தப் படத்தின்படி நீங்கள் பேஸ்புக்கில் தொடர்பு கொள்கிறீர்கள் ,உங்கள் நண்பர் சிந்தனை களத்திற்கு சென்றிருந்தால்,ஒரே IP இலக்கம் இருந்திருந்திருந்தால் என்ன நடக்கும்?மேலே உள்ள அறையில் நீங்கள் பேசுவதை கீழே உள்ள அம்மா கேட்பது போல்...? இருவருக்கும் கல்தா தான்.முன்னர் சொன்னது போல் IP ல் நெட்வேர்க் + ஹோஸ்ட் இலக்கம் இருக்கும். Ip ல் இறுதியாக வரும் இலக்கம் கணினிகளை தனியாக்கி காட்டுவதுடன் Router அவற்றைப் பிரித்து செய்திகளை அனுப்புவதுடன், சில சமயம் firewall ஆகவும் செயல்படும் என்பதால், நீங்களும் உங்கள் நண்பரும் பிழைத்துக் கொண்டீர்கள்.
இந்த Router, உங்கள் IP (local IP) யை இணைய IP (internet IP) ஆக மாற்றி(Network Address Translation ) பாவித்துக் கொள்ளும்.அதனால் நீங்கள் செல்லும் இணையப் பக்கத்தில் உங்கள் உண்மையான IP க்குப் பதில், Router ஆல் மாற்றப்பட்ட ip ஐ தான் பார்க்க முடியும். இப்போது நீங்கள் ஏதாவது தில்லு முல்லு செய்தால்,இணைய IP வைத்து, ISP இடம் இருந்து உங்கள் விபரங்களைபெற்றுவிட முடியும்.ISP இடம் உங்கள் முழு விபரங்கள்,நீங்கள்செல்லும் இணையப் பக்கங்கள்,நேரம் உட்பட அனைத்தும் லாக் செய்யப்பட்டு இருக்கும். இப்படித்தான் பொலீசார் விபரங்களைப் பெறுகின்றனர்.மேலும் IP பற்றி சொன்னால் கணித முறைகளைப் பயன்படுத்தி பதிவை அதிகமாக்கி விடும்.
நன்றி,
ஜீனியஸ்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இன்டர்நெட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் Empty Re: இன்டர்நெட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

Mon May 11, 2015 8:17 am
தேடியந்திரங்களின் சுருக்கமான வரலாறு
____________________________________________________________

தேடியந்திரங்கள் இல்லாமல் இணையத்தை பயன்படுத்த முடியாது என்று சொல்லும் அளவுக்கு தேடியந்திரங்கள் இணைய வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமாகி இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தேடல் என்பது முன் எப்போதையும் விட மனித வாழ்க்கையில் இரண்டற கலந்தவிஷயமாகி இருக்கிறது.ஒரு காலத்தில் அறிஞர்களும் கண்டுபிடிப்பாளர்களும் அறிவுத்தேடலில் ஈடுபட்டனர். தத்துவஞானிகள் வாழ்க்கையின் பொருளை தேடினர். இலக்கியவாதிகள்இதை இலக்கியம் மூலம் தேடினர். ஒவ்வொருவருக்கும் ஒரு தேடல் இருந்து வந்திருக்கிறது என்றாலும் எல்லோரும் எப்போதும் தேடிக்கொண்டிருப்பதை தேடியந்திரங்கள் இயல்பாக்கி இருக்கின்றன.
தகவல்களை தேடுவதில் துவங்கி எதற்கும் இணையத்தில் தேடியந்திரங்களை பயன்படுத்துகிறோம். வார்த்தைகளின் உச்சரிப்பில் சந்தேகம் என்றால் கூட அகராதியை புரட்டுவதில்ல. தேடியந்திரத்தில் அந்த வார்த்தையை அடித்துப்பார்த்து உச்சரிப்பையும் எழுத்துக்களையும் நொடிப்பொழுதில் உறுதி செய்து கொள்கிறோம். மனதில் உள்ள எந்த கேள்வி என்றாலும் அதற்கான பதிலைதேடியந்திர கட்டத்தை நாடிச்செல்கிறோம்.தேடியந்திரங்கள், தேடுவதை எளிமையாகவும் இன்றியமையாதாகவும் ஆக்கியிருக்கின்றன. இதன் விளைவாக நாம் சோம்பல் மிக்கவர்களாக மாறிக்கொண்டிருப்பதாக ஒரு கவலை இருக்கிறது. எளிய விஷயங்களை கூட நினைவில் நிறுத்திக்கொள்ளும் தேவையை மெல்ல இழந்து வருவதாகவும் வருத்தமிருக்கிறது. கூட்டல், கழித்தல் என்றால் கூட, அதுதான் கூகுள் இருக்கிறதே என சொல்வது வெகு இயல்பாக இருக்கிறது.
35 ஆண்டுகால வரலாறு
நாம் எல்லாம் தேடியந்திர அடிமைகளாகி கொண்டிருக்கிறோமோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு இவற்றின் ஆதிக்கம் இருந்தாலும் தேடியந்திரங்களின் வரலாறு என்று பார்த்தால் 35 ஆண்டுகள் தான்!ஆம், தேடியந்திரங்களின் அதிகாரபூர்வ வரலாறு 1990-ல் இருந்து தான் துவங்குகிறது. அப்போது தான் இணைய உலகின் முதல் தேடியந்திரமான ஆர்ச்சி அறிமுகமானது. ஆர்ச்சிக்கு பிறகுஆயிரக்கணக்கில் தேடியந்திரங்கள் அறிமுகமாகி தேடியந்திரங்கள் எண்ணிக்கையிலும் வகையிலும் பரந்து விரிந்திருக்கின்றன.
தேடியந்திர வரலாறு மறக்கப்பட்ட மைல்கல்களையும், திருப்புமுனைக்கு வித்திட்ட புதிய நுட்பங்கள் என சுவாரஸ்யமாகவே இருந்தாலும், இந்த வரலாற்றை ஒற்றை வரியில் புரிந்து கொள்வது என்றால் கூகுளுக்கு முன் கூகுளுக்கு பின் என பிரித்துக்கொள்ளலாம்.தேடல் என்றால் கூகுள் என்று கருதப்படும் அளவுக்கு அது முன்னணி தேடியந்திரமாக இருந்தாலும் அதற்கு முன்னர் முன்னோடி தேடியந்திரங்கள் பல இருக்கின்றன.
ஒரு காலத்தில் தேடியந்திரங்களாக இருந்தன என்று சொல்லும் அளவுக்கு இவற்றில் பல மறக்கப்பட்டுவிட்டன என்றாலும், இவற்றின் முக்கியத்துவத்தை மறப்பதற்கில்லை. இந்த ஆரம்ப கால தேடியந்திரங்கள்தான் தேடலுக்கான அடித்தளத்தை அமைத்து கொடுத்திருக்கின்றன.ஒவ்வொரு முன்னோடி தேடியந்திரமும் இணைய தேடலின் ஒரு முக்கிய அம்சத்தை அறிமுகம் செய்து தேடியந்திர கருத்தாக்கத்தை மேம்படுத்தி இருக்கின்றன.
ஆரம்ப காலத்தில்...
தேடியந்திரம் எனும் போது பொதுவாக இணையத்தில் உலாவி இணையதளங்களை திரட்டி பட்டியலிட்டு தகவல்களை தேடித்தரும் துழாவன்கள் (கிராலர்ஸ்) தேடியந்திரமாகவே புரிந்து கொள்ளப்படுகின்றன. ஆனால் இணைய தேடல் துவங்கிய போது துழாவன்கள் கிடையாது. இவ்வளவு ஏன் இணையதளத்தின் முழு பக்கங்களையும் தேடிக்கொள்ளும் வசதியும் இருந்திருக்கவில்லை.ஆரம்ப காலத்தில் தேடியந்திரம் என்பது இணைய முகவரிகளை மட்டுமே சேகரித்து தருபவையாக இருந்தது தெரியுமா? ஆனால் இணைய கற்காலத்தில் அதுவே பெரிய விஷயமாக இருந்தது.இந்த அற்புதத்தை செய்து காட்டியஆர்ச்சி தான் உலகின் முதல் தேடியந்திரம். ஆர்ச்சி தேடியந்திரம் ஆலன் எம்டேஜ் (AlanEmtage) எனும் கல்லூரி மாணவரால் உருவாக்கப்பட்டது. ஆலன் அப்போதுகனடாவின் மாண்டிரியேலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த ஆர்ச்சிக்கான நிரலை எழுதினார்.
ஆர்ச்சி உதயமான போது இணையத்தில்கோப்புகளை தேடுவதற்கான வழி இருக்கவில்லை. குறிப்பிட்ட கோப்புகள் இருக்கும் முழு முகவரி தெரிந்தால் மட்டுமே அவற்றை அணுக முடியும் எனும் நிலை இருந்தது. அது மட்டும் அல்ல, அந்த காலகட்டத்தில் இணையம் இருந்ததே அதன் பிரதான அங்கமான வைய விரிவு வலை உருவாகி இருக்கவில்லை. இணைப்புகள் மூலம்விரியும் வலைப்பின்னலாக வலையை உருவாக்கிய இணைய முன்னோடி டிம் பெர்னர்ஸ் லீ 1989-ல் தான் வலைக்கான கருத்தாக்கத்தின் வரைவை எழுதியிருந்தார். 1990-ம்ஆண்டு இறுதியில் தான் உலகிற்கு வலை அறிமுகமானது.இந்த நிலையில்தான் ஆலன், இணையத்தில் இருந்த எப்டிபி முகவரிகளின் பட்டியலை உருவாக்கி அதை குறிச்சொல்லுக்கு ஏற்ப தேடக்கூடியதாக செய்தார். ஆனால் இதில் முகவரிகளை மட்டுமே தேட முடியும். உள்ளட்டக்கத்தை அறியவோ தேடவோ வழியிருக்கவில்லை.
ஆர்ச்சி அதன் தேடல் வசதிக்காக பிரபலமாக அமெரிக்காவின் மின்னசோட்டா பலகலைக்கழக மாணவரான மார்க் மெக்காஹில் (Mark McCahill ) 1991 ல் கோஃபர் எனும் தேடியந்திரத்தை உருவாக்கினார். கோஃபர் பெரும்பாலும் வரிவடிவ கோப்புகளை தேடித்தரும் வகையில் உருவாக்கப்பட்டது. வைய விரிவு வலை பயன்பாட்டிற்கு வந்ததும் இந்த பக்கங்கள் வலைதளங்களாக மாறின. இதே கால கட்ட்த்தில் வெரோனிகா மற்றும் ஜக்ஹெட் ஆகிய இரண்டு தேடல் அமைப்புகளும் உருவாக்கப்பட்டன.
பெரிய பாய்ச்சல்...
தேடியந்திரங்களில் அடுத்த பெரிய பாய்ச்சல் 1993-ல் நிகழ்ந்தது. இதனிடையே 1992ல் டிம் பெர்னர்ஸ் லீ வர்ச்சுவல் லைப்ர்ரி சேவையை உருவாக்கினார்.இது தான் இணையத்தின் முதல் டைரக்டரி சேவை. உண்மையில் இது லீஉருவாக்கிய மைய சர்வரில் மற்ற சர்வர்களின் பட்டியலாகவே இருந்தது.1993-ல் எம்.ஐ.டி மாணவரான மேத்யூகிரே (Matthew Gray) எந்த ஒரு தேடியந்திரத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் இயந்திராவை ( ரோபோ அல்லது பாட்) உருவாக்கி முதல் முறையாக உருவாக்கி இணையத்தில் உலாவவிட்டார். இங்குரோபோ என குறிப்பிடப்படுவது பெளதீக நோக்கிலான ரோபோக்களை அல்ல. இவை உண்மையில் கம்ப்யூட்டர் புரோகிராம்கள். தொடர்ந்து செய்யக்கூடிய விஷயங்களை மனிதர்களால் நினைத்து கூட பார்க்க முடியாத மின்னல் வேகத்தில் செய்யக்கூடிய புரோகிராம்கள்! இவையே சுருக்கமாக பாட்கள் என குறிப்பிடப்படுகின்றன. இணையத்தில் உள்ள தகவல்களை துழாவி தேடி திரட்டும் வேலையை அசாத்தியமான வேகத்தில் செய்து முடிக்கும் இந்த புரோகிராம்களே தேடியந்திர சிலந்திகள் என்றும் அறியப்படுகின்றன.
தேடியந்திர சிலந்திகளில் முதன் முதலில் இணையக்கடலில் நீந்தத்துவங்கியது மேத்யூ கிரே உருவாக்கிய வாண்டரர் (World Wide Web Wanderer ) தான். இந்த சேவை தொடர்பாக மேலும் சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கின்றன என்றாலும் தேடியந்திரங்களின் முக்கிய அங்கமாக இருக்கும் இணையவெளி முழுவதும் உலாவி, துழாகி தகவல் சேகரிப்பில் ஈடுபட்ட முதல் சேவைஎன்ற அளவில் இதை மனதில் கொள்வோம். கிரே உண்மையில் இணையத்தின் வளர்ச்சியை கணக்கிடுவதற்காகவே இந்த சிலந்தியை உருவாக்கினார். ஒரு இணைய பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு தாவி, செயல்பாட்டில் இருந்த சர்வர்களை கணக்கிடுவதன் மூலம் இணையத்தை அவர் அளந்து பார்க்க முற்பட்டார். பின்னரே இணைய முகவரிகளையும் குறித்து கொள்ளக்கூடியதாக இதை மேம்படுத்தினார். இந்த தகவல்கள்சேகரிக்கப்பட்ட அட்டவணை வேண்டெக்ஸ் என குறிப்பிடப்பட்டது.
சிலந்திகள்...ஆனால் அறிமுகமான காலத்துல் இணையதளங்களுக்குள் இது தினமும் நூறுமுறைக்கு மேல் எட்டிப்பார்த்தது தொல்லையாக பார்க்கப்பட்டது. ஆனால், இணையத்தை தொகுக்க இப்படி சிலந்திகளை உலாவவிடுவதை தவிர வேறு வழியில்லை என புரோகிராமர்கள் நினைத்தனர்.இணையம் பிரபலமாகத்துவங்கி தினமும் புதுப்புது இணையதளங்கள் சேர்ந்து கொண்டிருந்த நிலையில், புதிய பக்கங்களில் பகுத்தாய்வது சிக்கலாக இருந்தது. இதற்காகவே சிலந்திகளை நாடினர். இவை உண்மையில் என்ன செய்தன என்றால் ஒவ்வொரு இணைய பக்கத்திலும் உள்ளஇணைப்புகளுக்கு சென்று பார்த்து தகவல்களை சேகரித்தன. பின்னர் இணைப்பு பக்கத்தில் இருந்த இணைப்புகளுக்கு சென்றன.
இணையத்தில் உள்ள ஒவ்வொரு இணைய பக்கமும் இன்னொரு பக்கத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்பட்ட்தால், சிலந்திகள் மூலம் ஒவ்வொரு பக்கத்தில் உள்ள இணைப்புகளை பின்பற்றி செல்வதன் மூலம் இணையத்தில் புதிதாக சேரும் இணையபக்கங்களை கண்டுபிடித்து விட முடியும் என்பதே இதன் பின்னே இருந்த நோக்கம். இன்று வரை தேடியந்திரங்கள் இப்படி தான் செயல்படுகின்றன. நமக்கு தகவல்களை திரட்டித்திருவதற்காகசிலந்திகள் ஓயாமல் இணையத்தில் துழாவிக்கொண்டே இருக்கின்றன.
மேத்யூ கிரேவை தொடர்ந்து மார்டின் கோஸ்டர் (Martijn Koster)எனும் புரோகிராமர் அலிவெப் மூலம் இணையத்தை பட்டியலிடும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் சிலந்திகளை கொண்ட பக்கங்களை பட்டியலிடாமல் புதிதாக உருவாக்கப்படும் பக்கங்களை சமர்பிக்க கேட்டி அவற்றை தொகுக்கும் பணியை மேற்கொண்டார்.ஆனால் இந்த சேவை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.அலிவெப் (ALIWEB) அறிமுகமாவத்ற்கு சில மாதங்கள் முன் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆறு பட்டதாரி மாணவர்கள் இணைந்து எக்சைட் (Excite ) எனும் பெயரில் ஒரு தேடியந்திரத்தை உருவாக்கினர். ஆர்கிடெக்ஸ்ட் எனும் திட்ட்த்தின் அடிப்படையில் இது உருவானது. எக்சைட் இரண்டு வியங்களில் முக்கியமாக அமைந்தது. அது ஒரு தேடல் கொள்கையுடன் செயல்பட்டது.இணைய பக்கங்களை திரட்டுவதோடு நின்றுவிடாமல் அவற்றில் உள்ள வார்த்தைகள் இடையிலான உறவை புள்ளியியல் முறையில் ஆய்வு செய்வதன் மூலம் தேடலை மேம்படுத்த முடியும் எனும் நம்பிக்கையில் இது செயல்பட்டது.தேடலை பகுப்பாய்வதில் முதல் முயற்சியாக இதனை கொள்ளலாம். பின்னாளில் தேடலை பொருள் பொதிந்த்தாக ஆக்க கூகுள் பின்பற்றி இணைப்புகளின் தரத்தின் அடிப்படையிலான பேஜ்ராங்க் முறைக்கு இதை முன்னோடியாக குறிப்பிடலாம். இரண்டுவியங்களில் முக்கியமாக அமைந்தது. அது ஒரு தேடல் கொள்கையுடன் செயல்பட்டது.இணைய பக்கங்களை திரட்டுவதோடு நின்றுவிடாமல் அவற்றில் உள்ள வார்த்தைகள் இடையிலான உறவை புள்ளியியல் முறையில் ஆய்வு செய்வதன் மூலம் தேடலை மேம்படுத்த முடியும் எனும் நம்பிக்கையில் இது செயல்பட்டது.தேடலை பகுப்பாய்வதில் முதல் முயற்சியாக இதனை கொள்ளலாம். பின்னாளில் தேடலை பொருள் பொதிந்த்தாக ஆக்க கூகுள் பின்பற்றி இணைப்புகளின் தரத்தின் அடிப்படையிலான பேஜ்ராங்க் முறைக்கு இதை முன்னோடியாக குறிப்பிடலாம். இரண்டாவது முக்கிய விஷயம், இந்த திட்டத்திற்கு தாராளமாக நிதி கிடைத்தது. இதன் பொருள் தேடலில் முதலீடு செய்தால் அது லாபம் தரும் எனும் நம்பிக்கையை இது உணர்த்தியது.ஆக, தேடியந்திர துறை மாபெரும் தொழிலாக உருவாவதற்கான முதல் விதையாக இதை கருதலாம். எக்சைட் பரவலாக வரவேற்பை பெற்ற முதல் தேடியந்திரமும் கூட!. சில ஆண்டுகளில் எக்சைட் @ஹோம் இணைய சேவை நிறுவனத்தால் வாங்கப்பட்டதும் பின்னர் அந்நிறுவனம் திவாலாகி எக்சடி இன்போசிக்கால் வாங்கப்பட்டது.
இவை எல்லாமே 1993 ல் அரங்கேறின.என்றாலும் தேடியந்திர வரலாற்றில் பொன்னான ஆண்டாக 1994 அமைந்தது. அந்த ஆண்டில் தான் இணையத்தின் முதல் மேம்பட்ட தேடியந்திரமான அல்டாவிஸ்டாவும் இணையத்தின் நுழைவு வாயிலாக உருவான யாஹுவும்உதயமானது. அதோடு அடுத்த தமைமுறை சிலந்திகளை பயன்படுத்திய வெப்கிராலரும் அறிமுகமானது. லைகோஸ் தேடியந்திரமும் பயன்பாட்டிற்கு வந்தது. இன்போசீக்கும் அறிமுகமானது.அல்டாவிஸ்டா பற்றி ஒரு வரியில் அறிமுகம் செய்து கொள்ளலாம். அது அந்த காலத்து கூகுள். இதைவிட கூகுளை இந்த காலத்து அல்டாவிஸ்டா என்பது பொருத்தமாக இருக்கும் என்கிறார் தேடியந்திர வல்லுனரான அல்டாவிஸ்டா கேள்வி பாணியில் தேடல் கோரிக்கையை சமர்பிக்க அதுவழிசெய்தது. அடுத்த கட்டமாக மேம்பட்ட தேடலை மேற்கொள்ளவும் வசதி அளித்தது. இன்று தேடியந்திரங்களின் முக்கிய லட்சனமாக கருதப்படும் தேடல் கட்டத்தையும் கொண்டு வந்தது.பூலியன் தேடல் என்று சொல்லப்படும் தேடல் பதத்துடன் அல்லது, மற்றும் ஆகிய பதங்களை சேர்ந்தது தேடலை மெருக்கேற்ற முடிந்தது. மேலும் தேடுவதற்கான குறிப்புகளையும் வழங்கியது. ஆரம்ப கால இணையவாசிகளுக்கு அல்டாவிஸ்டா அளித்த ஆனந்தத்தை இப்போது நினைத்தப்பார்ப்பது கடினமாக இருக்கலாம். டிஜிட்டல் எக்யூப்பெண்ட் கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்ட முதல் வெகுஜன தேடியந்திரமாக கோலோச்சி பின்னர் பல கைகள் மாறி கடைசியில் யாஹூவால் வாங்கப்பட்டு 2013-ல் மூடப்பட்டது.
நவீனத் தேடலின் துவக்கம்அல்டாவிஸ்டா தேடியந்திரமாக வரவேற்பை பெற்ற நிலையில், டேவிட் பைலோ மற்றும் ஜெரி யங் (David Filo and Jerry Yang ) ஆகிய இரண்டு இளைஞர்களின் படைப்பாக யாஹு உருவானது. இணையத்தில் புதிதாக உருவாக்கப்படும் இணையதளங்களில் பயனுள்ளவற்றை பட்டியலிட்டு தரும் வழிகாட்டியாக அறிமுகமான யாஹு, வெகு விரைவில் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் தரும் வலைவாசலாகி இணையத்தின் நுழைவு வாயிலானது.யாஹு அறிமுகமான அதே ஏப்ரல் மாதத்தில் வெப்கிராலர் தேடியந்திரம் அறிமுகமானது. அதுவரை இணைய முகவரிகள் மற்றும் அவற்றுக்கான அறிமுக வாசகங்களை மட்டுமே தேடியந்திர சிலந்திகள் திரட்டி வந்த நிலையில், இணைய பக்கத்தில் உள்ள முழு தகவல்களையும் திரட்டக்கூடிய சிலந்திகளை இது முதல் முறையாக பயன்படுத்தியது. நவீன தேடலுக்குவித்திட்ட முக்கிய அம்சம் இது.1994 ஜூலை மாதம் லைகோஸ் தேடியந்திரம் அறிமுகமானது. 54,000 ஆவணங்களுடன் இது பொது மக்களுக்கு அறிமுகமானது. அடுத்தசில ஆண்டுகளுக்கு அல்டாவிஸ்டா, யாஹு மற்றும் லைகோஸ் ஆகிய பெயர்கள் மாற்றி மாற்றி பயன்படுத்தும் அளவுக்கு அவை இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக இருந்தன. அல்டாவிஸ்டாவில் கிடைக்கவில்லையா? லைகோசில் தேடிப்பார்க்கவும் என சொல்வதும் பழக்கமாக இருந்தது. இதனிடையே இன்போசீக்கும் முக்கிய தேடியந்திரமாக பிரபலமானது. தேடியந்திர பரப்பு விரிவடைந்து கொண்டே இருந்த்து.இணையம் மெல்ல மெல்ல பிரபலமாகி புதிய பயனாளிகளை கவர்ந்திழுக்க அதற்கேற்ப புதிய இணையதளங்களும் தினமும் உருவாக்கப்பட்டு இணையம் மேலும் செழுமையாக தேடியந்திரங்களுக்கான தேவையும்அதிமாக உணரப்பட்டது.
1995-ல் யாஹு போன்ற வழிகாட்டி சேவையான லுக்ஸ்மார்ட் அறிமுகமானது. எனினும் 1996 ல் இன்க்டோமி நிறுவனம் ஹாட்பாட் தேடியதிந்திரத்தை இணைய உலகம் மீது கட்டவிழ்த்துவிட்டது. இதுவும் சிலந்திகளை பயன்படுத்திய தேடியந்திரம் தான் என்றாலும் ஏற்கனவே பட்டியலிட்ட பக்கங்களை ஒரே நாளில் மீண்டும் விஜயம் செய்து மறுபட்டியலிட்டு புதுப்பிக்கும் ராட்சத ஆற்றல் கொண்டிருந்தது இதன் சிறப்பாக அமைந்தது. அதோடு தற்போது தேடியந்திரங்கள் பயனாளிகள் விருப்பங்களை அறிய பயன்படுத்தும் முக்கிய ஆயுதமான குக்கி மென்பொருளை முதன் முதலில் பெரிய அளவில் பிரயோகம் செய்ததும் ஹாட்பாட் தான். 2003-ல் இது யாஹு வசமானது.1998ல் மைக்ரோசாப்ட் எம்.எஸ்.என் வலைவாசலில் தேடல் சேவையை அறிமுகம் செய்தது. தேடல் உலகையே தலைகீழாக புரட்டிப்போட்டு தன்வசமாக்கி கொண்டுள்ள கூகுள் தேடியந்திரம் அறிமுகமானது. ஸ்டான்ப்போர்டு பல்கலை மாணவர்களான செர்ஜி பிரைன் மற்றும் லாரி பேஜ் சமர்பித்த ஆய்வுக்கட்டுரை அடிப்படையில் கூகுள் தேடியந்திரம் செயல்பட்டது. ஒரு இணைய பக்கம் கொண்டுள்ள இணைப்புகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் தரத்தின் அடிப்படையில் தேடல் முடிவுகளை பட்டியலிடலாம் எனும் கருத்தாக்கம் கூகுலை இயக்கியது.
கூகுள் ஆதிக்கம்பேஜ்ராங்க் என சொல்லப்படும் இந்த முறைக்கு ஆரம்பத்தில் முதலீட்டாளர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் போனாலும், எதிர்பார்த்த தேடல் முடிவுகளை அளிக்க கூடிய ஆற்றல் இணையவாசிகளை கவர்ந்து கூகுளை நட்சத்திர தேடியந்திரமாக ஆக்கியது. வெகு விரைவிலேயே தேடல் என்றால் கூகுள் என்று ஆனது. கூகுளின் வளர்ச்சி யாஹு போன்ற வலைவாசல்கள் செல்வாக்கை குறைத்தது. தேடுவது என்பதை கூகுளிடுவது என குறிப்பிடும் அளவுக்கு கூகுள் தேடலுக்கான வினைசொல்லாக மாறி முன்னணி தேடியந்திரமாக ஆதிக்கம் செலுத்த துவங்க தேடல் ஒரு மாபெரும் துறையாகவும் உருப்பெற்றது.கூகுளுக்கு பிறகு எண்ணற்ற தேடியந்திரங்கள் உதயமாயின. இன்னமும் உருவாகி கொண்டிருக்கினறன. இவற்றில் கூகுளுக்கு சவால்விடக்கூடிய கருத்தாக்கத்தை கொண்டவை கூகுள் கில்லர் என வர்ணிக்கப்படுவதும் வழக்கமாக இருக்கிறது. இப்படி வர்ணிக்கப்பட்ட பல புதிய தேடியந்திரங்கள் காணாமல் போய்விட்டன. தாக்கு பிடித்து நிற்பவை மாற்று தேடியந்திரங்கள் என கம்பீர்மாக சொல்லப்படுகின்றன.இவை தவிர என் வழி தனி வழி என செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிறப்பு மற்றும் குறிப்பிட்ட நோக்கிலான கணக்கற்ற குறுந்தேடியந்திரங்களும் உருவாகி இருக்கின்றன.
தேடியந்திரம் சார்ந்த தேடியந்திரங்களும் ஒட்டு தேடியந்திரங்கும் அநேகம் இருக்கின்றன. இணையம் விரிவடைந்து கொண்டே இருக்கும் நிலையில் அதற்கேற்ப பலவகை தேடியந்திரங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
நன்றி,
தமிழன்
Sponsored content

இன்டர்நெட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் Empty Re: இன்டர்நெட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum