உங்கள் செல்போன் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க ஐந்து எளிய வழிகள்..
Mon May 11, 2015 7:59 am
1. உங்கள் போன் அதிக வெப்பம் அடைவதை தவிருங்கள்
பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிகளின் பிரதான எதிரியே வெப்பம் தான். இதன் காரணமாக எளிதில் வெப்பமடையகூடிய பகுதிகளில் செல்போன்களை வைப்பதை தவிர்க்கவும். எடுத்துக்காட்டாக சூரிய வெளியில் வைப்பது, கார்களின் டேஷ் போர்டில் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல், சார்ஜ் ஏற்றும் போது அதிகமான கிராபிக் அம்சங்கள் கொண்ட கேம்ஸ்களை விளையாடுவதை தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் இதன் காரணமாக போன்கள் சூடாகி அது பேட்டரியின் ஆயுளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
2. சார்ஜ் ஏறும் போது போனை உபயோகிக்காதீர்கள்
பொதுவாக, சார்ஜ் ஏற்றும் போது போன்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சார்ஜ் ஏற்றும் போதே செல்பான்களை பயன்படுத்துவதால் போலி மின்னேற்றத்தை பேட்டரி பெறுகிறது. இது வெளிப்படையாகவே உங்கள் பேட்டரிக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த போனுக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது.
3. போலியான சார்ஜர்களை பயன்படுத்தாதீர்கள்,
50 ஆயிரம் விலை கொடுத்து போனை வாங்கிய பின் சில நாட்களில் அதன் சார்ஜர் தொலைந்து போனால், 50 ரூபாய்க்கு சாலையோரங்களில் மலிவு விலையில் கிடைக்க கூடிய சார்ஜர்களை பயன்படுத்துவதை நாம் பார்த்திருக்கிறோம். இவ்வாறு பயன்படுத்துவது முற்றிலும் தவறான விஷயம் என்கின்றனர் நிபுணர்கள். உடனடியாக சார்ஜ் ஏறுவதற்காக வடிவமைக்கப்பட்ட சார்ஜர்களையும் தவிர்த்து விடுதல் நல்லது. அதேபோல், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சார்ஜர்களை பயன்படுத்தாமல் பிற நிறுவனங்களின் சார்ஜர்களையும் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள்.
4. எப்போதும் முழுமையாக சார்ஜ் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.
தற்போதய நாட்களில் புதியதாக வாங்கிய செல்போன்களை முழுமையாக சார்ஜ் செய்யவேண்டும் அல்லது எட்டு மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லாத ஒன்று. நீங்கள் போன்களை வாங்கும் போதே வழக்கமாக பேட்டரியில் சார்ஜ் இருக்கும். அதேபோல், செல்போன்களை எப்போதும் 100 சதவீதம் சார்ஜ் ஏற்றிய பின் தான் சார்ஜரில் இருந்து அகற்ற வேண்டும் என்பது அவசிய இல்லாத ஒன்றுதான். முடிந்த வரை சார்ஜ் இல்லாமல் போன்கள் சுவிட்ச் ஆப் ஆவதை தவிர்த்து விடுதல் நல்லது.10 சதவீதத்துக்கு கீழே சார்ஜ் குறைய விடாமல் பார்த்துக்கொண்டால், அது உங்கள் செல்போன் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க உதவும்.
5. இரவு முழுக்க போன்களுக்கு சார்ஜ் ஏற்றுவதை தவிருங்கள்
பெரும்பாலும் இரவு நேரங்களில் செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றுவதை நம்மில் பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவ்வாறு இரவு முழுக்க சார்ஜ் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 100 சதவீதம் சார்ஜ் ஏறிய பின் தானாகவே உங்கள் ஸ்மார்ட்போன்கள் பேட்டரியில் சார்ஜ் ஏற்றுவதை நிறுத்தி விடுகின்றன. இதன் காரணமாக செல்போன்களுக்கு பாதிப்பு ஏற்படுவது குறைவுதான் என்றாலும் பேட்டரியின் ஆயுட்காலம் பாதிப்படைகிறது.
நன்றி: தினத்தந்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum