ஜோசப் டாமியன் (Jozef Damien)
Thu May 07, 2015 7:14 pm
விசுவாசத்தில் வாழ்க்கை
நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்..(7-May-15)
என் தேவனே, நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும். நெகேமியா 5:19.
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜோசப் டாமியன் (Jozef Damien) 1873-ம் ஆண்டில் ஹவாய் தீவிலுள்ள தொழுநோயாளிகளுக்கு நற்செயதியை அறிவிக்க மிஷனரியாக சென்றார். தொழுநோயாளிகளுக்கு எப்படியாவது இயேசுவின் அன்பை அறிவிக்க வேண்டுமென அதிக பிரயாசப்பட்டு ஊழியம் செய்தார். ஆனால் தொழுநோயால் பாதிக்கப்பட்ட அந்த மக்களோ அவரை விட்டு விலகினர். சோர்ந்து போகாத டாமியன் ஒரு சிற்றாலயத்தை கட்டி அங்கு ஆராதனையை நடத்தினார். தன் முழுஅன்பையும் தொழுநோயாளிகள் மீது ஊற்றினார். ஆயினும் அந்த மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 12 வருடங்களாக இவ்வாறு போராடி ஊழியம் செய்தார். ஆயினும் ஆத்தும அறுவடை இல்லை.
இனி இந்த ஊரில் ஊழியம் செய்து எவ்வித பயனுமில்லை என்று முடிவெடுத்து அவ்விடத்தைவிட்டு வெளியேற முடிவெடுத்தார். கப்பல் ஏறுவதற்காக துறைமுகம் சென்று மனவேதனையோடு கப்பலுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தன உள்ளங்கைகளை உற்றுப்பார்த்தார். அங்கு சில வெளளைப் புள்ளிகள் காணப்பட்டன. அவை உணர்ச்சியற்று இருந்தன. தொழுநோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தார். தான் இந்த மக்களை விட்டு செல்வதை இயேசு கிறிஸ்து விரும்பவில்லை என்று உணர்ந்தார் டாமியன். தொழுநோயாளிகள் வசிக்கும் இடத்திற்கு வந்தார். மீண்டும் தனது ஊழியத்தை தொடங்கினார்.
டாமியனும் ஒரு தொழுநோயாளி என்ற செய்தி ஹவாய் தீவெங்கும் பரவியது. அவரைப்பார்க்க அநேக தொழுநோயாளிகள் வந்தார்கள். டாமியனின் நிலையம் தங்களைப் போலாயிற்றே என்று வருந்தினர்வி. அதுவரை டாமியனின் குரலுக்கு செவிகொடுக்காத அந்த மக்கள் அவருக்கு செவிகொடுக்க தொடங்கினர். அந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை ஆராதனையில் அந்த சிற்றாலயம் தொழுநோயாளிகளால் நிரம்பி வழிந்தது. 49 வயதே அவர் உயிர் வாழ்ந்தாலும், அநேக தொழுநோயால் பாதிக்கப்பட மக்களை இயேசு கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தினார். அவருடைய ஊழியம் வெற்றிகரமாக அமைந்தது.
நீங்கள் அநேக நெருக்கத்தின் மத்தியில் ஊழியம் செய்கின்றீர்களா? ஒரு விடுதலைக்காக போராடி ஜெபிகின்றீர்களா? என் தேவனே, நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும் என்று நெகேமியா ஜெபித்ததைப் போல ஜெபியுங்கள். டாமியனைப் போல கர்த்தர் உங்கள் வாழ்வின் மூலமாக பெரிய காரியங்களை செய்திடுவார்.
-------------------------------
Permissions in this forum:
You cannot reply to topics in this forum