சிகப்பு மூக்கடலை
Wed May 06, 2015 9:36 pm
கடலைப்பருப்பு, கடலைமாவு, பொட்டுக்கடலை மூன்றுமே ஒரே தானியத்தில் (சிகப்பு மூக்கடலை )இருந்து தயாரிக்கப் படுபவை. ஒவ்வொன்றையும் வெவ்வேறு உணவுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது சுவாரஸ்யமே ....
சிகப்பு மூக்கடலை
சிகப்பு மூக்கடலை , சிகப்பு சுண்டல் , பிரவுன் சுண்டல் , பச்சை கடலை , நாட்டுக் கொண்டக்கடலை என பல பெயர்களில் அழைக்கப்படும் மூக்கடலை நம் நாட்டின் முக்கிய உணவுப் பொருள் . மொசாம்பி மற்றும் குலாபி இரண்டும் முக்கிய ரகங்கள் .
நம் ஊரில் வேகவைத்து சுண்டலாக , கேரளாவில் கடலைக் கறியாக , வடஇந்தியாவில் சென்னா மசாலாவாக .. என சாப்பிடுகிறோம்.
கடலைப்பருப்பு
சிகப்பு மூக்கடலையை தோல் நீக்கி இரண்டாக உடைத்து கடலைப் பருப்பு தயாரிக்கப் படுகிறது . தென்னிந்திய சமையலில் கடலைப் பருப்பு முக்கிய பொருள்.
பொட்டுக்கடலை
கடலைப் பருப்பை வறுத்து பொட்டுக்கடலை தயாரிக்கப் படுகிறது. இது வறுகடலை , பொரிகடலை என்றும் அழைக்கப் படுகிறது . சட்னி மற்றும் பலகார வகைகள் செய்ய பயன்படுத்தப் படுகிறது.
கடலைமாவு
கடலைப்பருப்பை அரைத்து கடலைமாவு தயாரிக்கப் படுகிறது. நம்ம ஊர் பலகாரம் மற்றும் இனிப்பு வகைகள் செய்ய கடலைமாவு முக்கிய பொருள். ஆனால் கடலை மாவினால் செய்யப்பட உணவு பொருட்களைவிட ... பொறிக் கடைகளில் உப்புக்கடலை என்று விற்ப்பார்கள் . மூக்கடலையை உப்பு நீரில் ஊறவைத்து வறுப்பது... உடலுக்கு ஆரோக்கியமானது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum