ஏன், ஏன், ஏன் ?????
Tue May 05, 2015 6:18 pm
நான் ஏன்
இந்துவாக இருக்க
மறுக்கிறேன்?
* * * * * * * * * * *
பிறப்பின் அடிப்படையில் சாதியை கற்பிக்கும் மதம்.
சாதியின் பெயரால்
தீண்டாமை,
நெருங்காமை ,
காணாமை
என்கிற கொடுமைகளை
உழைக்கும் மக்கள் மீது
திணித்து,
அதை இன்றளவும்
நியாயப்படுத்தி வருகிற மதம்.
இந்த
உலகம்
கடவுளுக்கு கட்டுப்பட்டது.
கடவுள்
மந்திரத்திற்குக்
கட்டுப்பட்டவர்.
மந்திரம்
பிராமணருக்குக்
கட்டுப்பட்டது.
என்று கூறி,
ஏக உலகத்திற்கும்
பிராமணரே தலைவர்
என்கிற
தலைக்கணம்
கொண்ட மதம்.
உழைப்பைப் பங்கிட்டுச்
செய்வது,
உள்ளதைப் பங்கிட்டு
உண்பது
என்கிற பொதுமைச்
சிந்தனைக்கு எதிராக
உழைத்துக் கொடுக்க
ஒருசாதி ,
உட்கார்ந்து திண்ண
ஒருசாதி
என்றும்
சாதிக்கொரு
நீதிமுறையும்
எழுதி,
அதையே வேதம்
என்றும்,
அதுவே கடவுளின்
முடிவென்றும்
கூறி,
காலங்காலமாய்
உழைக்கும் மக்களை
ஏய்த்துப் பிழைக்கிற
கூட்டத்திற்கு
ஏதுவாய் இருக்கிற மதம்.
எல்லாவற்றிற்கும் மேலாக,
வஞ்சம், சூது ,
பித்தலாட்டம்,
திருட்டு, கீழறுப்பு,
காட்டிக்கொடுப்பு ,
ஏய்த்தல் , துரோகம்
அனைத்தையும்
நியாயப்படுத்தும்
அயோக்கியத்தனம்
நிறைந்த மதம்
இந்து மதம்.
பல்வேறு ஆய்வுகள் ,
அனுபவங்களின் ஊடாக
இவை அனைத்தும் தெரிந்து கொண்டபின் ,
நான்மட்டுமல்ல,
நீங்கள் மட்டுமல்ல,
மானமும் அறிவும் உள்ள
யார்தான் தன்னை
இந்து என்று
சொல்லிக் கொள்ள முடியும்?
என்று
தயவுசெய்து
சிந்தித்துப் பாருங்கள்.
நான் சொல்லுகிற
அனைத்தையும்
நீங்கள் அப்படியே நம்பவேண்டாம்.
இந்து மதத்தின்
வேத புராணங்களை ,
மனுதர்ம சாஸ்திரத்தை ,
கடவுளர் கதைகளை
முழுமையாய்
படித்துப் பார்த்து
உண்மையை உணருங்கள்.
"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது
அறிவு" - குறள்.
இரா முரளி தாம்பரம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum