நீங்கள் சபையாரா?
Sat Apr 25, 2015 8:14 am
சில மாதமாக சபைக்கு வந்து கொண்டிருந்த குடும்பம் திடிரென வருவதில்லை என்பதை கவனித்தேன் . அவர்கள் ஏன் வரவில்லை என்பதை அறியும் ஆர்வம் என்னை தொற்றிக் கொண்டது.
அறிவிப்புகள் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே நண்பன் ஒருவனிடம் கிசுகிசுத்தேன். "அவங்க வீட்டு மாடு போன மாசம் செத்துப் போச்சாம், அதனால சபைக்கு வர்றத நிறுத்திப்புட்டாகளாம்" என்றான்.
ஆட்டுக்கும், மாட்டுக்கும் ஆண்டவர தேடுனா இழப்பு வரும் போது விசுவாசம் ஆடத்தானே செய்யும்.
இன்னொரு முறை பேருந்து பயணத்தில் என் அருகில் அமர்ந்தவரிடம் பேச்சுக் கொடுத்த போது அவர் கிறிஸ்தவரென்றும் ஆனால் பல காலமாக சபைக்கு செல்வதை நிறுத்தயிருந்தார் என்பதையும் அறிந்தேன். காரணம் கேட்டால், "போதகர் எனக்கு சரியான மரியாதை தரவில்லை" என்றார்.
அந்த போதகர் என்னை கண்டித்துவிட்டார், அந்த சபையில் காணிக்கைக்கு தான் ரொம்ப முக்கியத்துவம், அங்கு வசதி சரியில்லை, மியூசிக் சகிக்காது என இந்த அட்டவணை நீண்டு கொண்டே போகிறது.
நாம் யாருக்காக, யாரை தரிசிக்க ஆலயம் போகிறோம் என்பதை சிந்திக்க வேண்டும், கிறிஸ்துவின் அன்பை அறிந்து அவரையே ஜீவனாக ஏற்றுக் கொள்ளும் எந்த மனுஷனும் சாக்கு போக்குகளை சொல்லிவிட்டு பின் வாங்க மாட்டான்.
ஆதி திருசபையில் மூவாயிரம் பேர் சேர்க்கப்பட்டது எப்படி? முதலாவது இரட்சகரிடம் சேர்ந்து பின் சபையில் சேர்க்கப்பட்டார்கள் .
" இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அனுதினமும் சபையில் சேர்த்துக் கொண்டு வந்தார்" (அப் 2 : 47)
"அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய் சேர்க்கப்பட்டார்கள்" என்று திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டிருக்கிறது (அப் 11:24,21)
இரட்சிக்கப்பட்டு கர்த்தரிடமாய் சேருகிறவர்களே சபையார்.

நன்றி: கதம்பம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum