முஸ்லீம்களுடன் விவாதித்ததின் விளைவுகள் - சாதனைகளா வேதனைகளா
Sat Apr 18, 2015 3:32 pm
Arputharaj Samuel - அவர்களின் முகநூல் பதிவிலிருந்து ...
என்னுரை:
அன்பு கிறிஸ்தவ நண்பர்களே கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் கிறிஸ்தவம் பற்றி கேவலமாகவும் உண்மைக்குப் புறம்பாகவும் எவ்வித ஆதாரமுமின்றி TNTJ என்ற இஸ்லாமிய அமைப்பு பொய் செய்திகளை நாகூசாது பரப்பி வந்தனர்.
அவ்ர்களுக்கு தக்க பதில் கொடுத்து அவர்களது பொய் பரப்புரைகளுக்கு முடிவு கட்டும் வண்ணம் சாக்ஷி அமைப்பினர் அவர்களுடன் ஏழு தலைப்புகளில் விவாதம் செய்ய ஒப்பந்தம் போட்டு இரண்டு தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. அவ்விவாதம் நடந்த கால கட்டத்தில் விவாதத்திற்கு சம்பந்தமில்லாத வயிற்றெரிச்சல் கிறிஸ்தவர்கள் சிலர் இணைய தளத்திலும் மற்றும் பல தளங்களிலும் விவாதம் நடந்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பின் தற்பொழுது எழுதுபவைகளைப் பார்க்கும்போது, அவர்களுடைய நோக்கம் தேவ நாம மகிமை என்பதை விட தங்களுடைய சுய பேர் பிரஸ்தாபம் என்பதே என்று விளங்குகிறது.
அவர்களுடைய கிறிஸ்தவ விசுவாசம் குறித்தே கேள்விகள் எழும்பினாலும், நடந்து முடிந்த இரு விவாதங்களினால் தமிழ் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் மத்தியில் உண்டான சாதக பாதகங்களை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். அவ்விரு விவாதங்களின் போதும் நடைபெற்றவைகள் என்ன என்பதை நான் ஓரளவுக்கு நேரடியாகவே நன்கறிந்தவன் என்ற முறையில் இக்கட்டுரையை எழுதத் துணிந்தேன்.
பைபிள் இறைவேதமா விவாதத்தில் நடந்தது என்ன?
விவாத ஒப்பந்தத்தின்படி நடைபெற்ற முதல் விவாதத்தில் பைபிள் இறைவேதமே என்பதற்கு ஆதாரமாக முதல் நூற்றாண்டு முதல் இக்காலமளவும் கிறிஸ்தவர்களின் வேதமாகிய பைபிள் எவ்வித மாற்றமுமின்றி பாதுகாக்கப்படுகிறது என்பதை தனது துவக்க உரையிலேயே சகோ ஜெரி தாமஸ் அவர்கள் ஆணித்தரமாக எடுத்து வைத்தார்.
பைபிள் இறைவேதமே என்பதற்கு அகச்சான்று (Internal evidence), புறச்சான்று (external evidence) மற்றும் குர்-ஆன் தரும் சான்று (Testimony of Quran), என அடுக்கடுக்காக ஆதாரங்களை முன் வைத்து பல பதில் கேள்விகளையும் சகோ ஜெரி முன்வைத்தார். அதில் முக்கியமானது பைபிள் மாற்றப்பட்டுவிட்டது என்று சொல்லும் இக்கால முஸ்லீம்கள் அதற்கு ஆதாரத்தையும் தரவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால் பிஜே அணியினர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவர்கள் வழக்கம்போல தங்கள் முஸ்லீம் கண்மணிகளை உசுப்பேத்துவதற்காக பேசுவதுபோல கிளுகிளுப்பாக பேசி விவாத நேரத்தை விரயமாக்கிக் கொண்டிருந்தனர். உண்மையில் வேத வசனங்களை அதன் வெளிச்சத்தில் புரிந்துகொள்ள முடியாத அவர்களுடைய இயலாமை விவாதத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது. அவர்களுடைய உன்னதப்பாட்டு, எசேக்கியேல் 23 ஆம் அதிகாரம் பற்றிய கேள்விகளுக்கு சரியான பதில்கள் முன்வைக்கப்பட்டது.
பைபிள் பற்றிய விவாதத்தில் நம் குழுவினரின் சரியான முன் ஆயத்தம் அவர்களின் ஆயத்தமின்மையை தோலுரித்துக் காண்பித்தது. ஆகவே அவர்கள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், நம் கேள்விகளுக்கு பதில் சொல்வோம் பதில் சொல்வோம் என்று சொன்னவர்கள் பதிலை மட்டும் சொல்லாமல் நழுவி மழுப்பிக் கொண்டிருந்த போதே, இதுவரையில் அவர்கள் வேதாகமத்தைப் பற்றி பொய்யாகச் சொன்னவைகள் எல்லாம் பித்தலாட்டம் என்பதை பல இஸ்லாமியர்களே அறிந்து கொண்டனர்.
விவாதத்தின் உச்சகட்டமாக கடைசியில், விஷப்பரிட்சை ஒன்றை வைத்து அவர்களே அதில் தோற்றுப் போன பரிதாபமும் நடந்தது. அதையும் வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய விஷப்பரீட்சை அவர்களுக்கே எதிராக திரும்பியது. நம் பதில் கேள்வியினால் தடுமாறிய பிஜே அவர்கள் ஆதாரப்பூர்வமான ஒரு ஹதீசையே செல்லாது என்று மேடையில் அறிவிக்க வேண்டியதாயிற்று.
அதற்காக அவரை இன்றளவும் மற்ற முஸ்லீம் அமைப்பினர் ஓட விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வேதத்தை காப்பாற்றும் இலட்சணம் இதுதான் என்பதும் அங்கே வெளிப்பட்டது. ஒரே ஒரு விவாதத்திலேயே இவ்வளவு தகிடுதத்தங்களைச் செய்து ஹதீஸ்களை பொய்யாக்குகிறார்களே என்று கிறிஸ்தவர்களே ஆச்சரியப்பட்டனர்.
அது மட்டுமல்ல நண்பர்களே, அவ்விவாதத்தில் சகோ. வெங்கடேஷ் அவர்கள் பிஜே அவர்களின் தளத்தில் இருந்து எடுத்து போட்ட ஹதீஸை, அப்படி ஒரு ஹதீசே இல்லை என்று அவர்கள் அரற்றி அவமானப்பட்ட அவலமும் நடந்தது.
Re: முஸ்லீம்களுடன் விவாதித்ததின் விளைவுகள் - சாதனைகளா வேதனைகளா
Sat Apr 18, 2015 3:34 pm
இப்படியாக பைபிள் இறைவேதமா விவாதத்தில், தமிழ்நாட்டில் முதன் முறையாக பல கிறிஸ்தவர்கள் உண்மையை அறியும் வண்ணம் தேவனுக்கு மகிமையாக நம் சகோதரர்கள் இஸ்லாமியர்களின் கேள்விகளுக்கு தக்க பதிலடியும் பதில் கேள்வியும் கேட்டு அவர்களை ஆட்டங்காணச் செய்தனர்.
ஒப்பந்தப்படி பைபிள் இறைவேதமா விவாதம் நடந்த மறுவாரத்தில் நடக்கவிருந்த குர்-ஆன் இறைவேதமா விவாதத்தை எப்படியாவது நடத்த விடக் கூடாது என்பதற்காக விவாதம் முடிந்த உடனேயே பிஜே அணியினர் ஆரம்பித்துவிட்டனர். வெளியே அவர்கள் வெற்றி வெற்றி என்று வழக்கம்போல சொல்லிக் கொண்டாலும், உள்ளூர பயந்து போயிருந்தனர் என்பதே உண்மை.
தங்கள் அரசியல் பின்புலத்தை வைத்து, குர்-ஆன் இறைவேதமா விவாதத்திற்கு எல்லாம் ஆயத்தமாயிருந்த நிலையில், கள்ளத்தனமாக அவர்கள் அதை நடக்கவிடாமல் நாடகமாடினர்.
நாமோ முதல் விவாதத்திற்கு ஆயத்தமாக இருந்தது போல, இதற்கும் ஆயத்தமாக, நேரடி ஒளிபரப்பு கொடுக்க ஏர்டெல் கம்பி வழி அதிவேக இணையதள இணைப்பை பெற்று முந்தைய நாளே அதை சரிபார்த்தும் இருந்தோம். சரியாக விவாதத்திற்கு முந்தைய நாள் மாலையில் இருந்து அவர்கள் போக்கு காட்ட ஆரம்பித்தனர்.
ஒருவேளை பொதுவிவாதத்திற்கு (public debate) காவல்துறை அனுமதி மறுத்தாலும், தனி விவாதம் (private debate) செய்ய ஆயத்தமாகவே இருந்தோம்.
ஆனால் விவாதம் நடக்க இருந்த நாளன்று அவர்கள் விவாதம் செய்வதற்கு பதிலாக தங்கள் நாடக விவாதத்தை நடத்துவதிலேயே முனைப்பாக இருந்தனர். அன்று அவர்கள் செய்த காமெடியானது எந்த திரைப்படங்களிலும் கூட காணமுடியாது.
குர்-ஆன் இறைவேதமா விவாதத்தில் நடந்தது என்ன?

Sat Apr 18, 2015 3:36 pm
நாம் உடனடியாக ஒரு நேரடி இணையதள ஒளிபரப்பில் நம் பதிலையும், விவாதம் நடக்க முடியாமல் போனதற்கும் பிஜே அணியினரின் சூழ்ச்சிதான் காரணம் என சொன்னோம். அதன் பின்னரும் கூட அவர்கள் அப்படியே தப்பிக்கப் பார்த்தனர். நம் தொடர் கிடுக்கிப்பிடி கேள்விகளினால் அவர்களுடைய இஸ்லாமிய சகோதரர்களே கேள்வி கேட்க ஆரம்பித்ததினால் உண்டான அழுத்தத்தில் மறுபடியும் அவர்கள் விவாதிக்க வந்தனர். அவர்களுக்கு தப்பிக்க வழியில்லாமல், நாம் அவர்களுடைய தலைமை அலுவலகத்திற்கே சென்று அவர்களுடைய இடத்தில் வைத்து, தைரியமாக குர்-ஆன் இறைவேதமில்லை என்பதை ஆணித்தரமாக நிரூபித்தோம்.
இந்த இரண்டாவது விவாதத்திலும் முஸ்லீம் அமைப்பினர் நம் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தப்பிப்பதிலேயே நேரவிரயம் செய்தனர்.
நம் தொடர்ச்சியான பதில் கேள்விகள் அவர்கள் சிந்தனையை சிதறடித்துவிட்டதை, அவர்களுடைய so called கிரேக்க அறிஞர் கலீல் என்பவர் கிரேக்க alphabet எழுத்துக்களைக் கூட சொல்லத் திணறி, agape என்ற வார்த்தைக்குப் பதிலாக ஆல்பா பீட்டா காமா என்று உளறிக் கொண்டிருந்தபோது காண முடிந்தது.
முதல் விவாதத்தில் ஆதாரப்பூர்வ ஹதீஸை பொய்யாக்கியவர்கள், அதாவது அவர்களுடைய வேதத்தின் பாதுகாப்பு என்பது எந்தளவுக்கு மனிதக் கரங்களில் இருக்கிறது என்பதைக் காண்பித்தவர்கள், இரண்டாவது விவாத அமர்வின் முடிவில், தங்கள் வேதத்தைக் காப்பாற்ற வழியின்றி, உச்சகட்டமாக எழுத்துக் குர்-ஆன் உண்மையான் வேதம் அல்ல என்று சொல்லி பல இஸ்லாமியர்களை அதிர்ச்சி அடைய வைத்தனர்.
உண்மையான குர்-ஆன் தங்கள் நெஞ்சங்களில் இருப்பதாக சொல்லி, நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லி முடியுங்கள் என்று பிஜே அவர்கள் பரிதாபமாக முடித்த போது முஸ்லீம் அணியினரின் முகத்தில் கிறிஸ்தவர்களுடன் விவாதிப்பதற்கு முன்பு இருந்த உற்சாகத்தைக் காணோம். மாறாக ஏதோ இழப்பு நடந்த வீட்டினர் இருந்தது போல அமைதியாக இருந்தனர்.
நாம் கடைசி அமர்வில் குர்-ஆன் ஏன் இறைவதம் இல்லை என்பதை ஆதாரங்களுடம் பதிவு செய்து, குர்-ஆன் இறைவேதமில்லை என்பதை அனைவரும் உணரும் வண்ணம் சொல்லி இரட்சிப்பு என்றால் என்ன, எப்படி பெற்றுக் கொள்வது என்பதையும் சொல்லி நிறைவு செய்தோம்.

Sat Apr 18, 2015 3:38 pm
விவாதத்தின் பின்விளைவுகள்
இவ்விரு விவாதங்களின் மூலமாக, அதுகாறும் முஸ்லீம்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் இருந்த பல உண்மைக் கிறிஸ்தவர்கள், தங்கள் பல வருட ஜெபம் இந்த விவாதத்தில் கேட்கப்பட்டதாக சாட்சி பகர்ந்தனர்.
அனேக நல்ல போதகர்கள் முழு விவாதத்தையும் ஆர்வமாக டிவிடியில் பார்த்து தங்கள் மகிழ்ச்சியையும் ஆசிகளையும் வெளிப்படுத்தினர்.
தமிழ்நாட்டில் தேவனுக்கு மகிமையாக நல்ல ஒரு கிறிஸ்தவ விழிப்புணர்வு உண்டானது. அதுவரை தங்கள் பொய் பித்தலாட்டங்களை கிறிஸ்தவர்களிடம் காண்பித்த முஸ்லீம்கள் அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர்.
ஏனெனில் அனேகர் முஸ்லீம்களின் பொய் கேள்விகளுக்கு பதிலடி கொடுக்க விவாதம் செய்ய தைரியமடைந்தனர்.
நாகர்கோவில், தூத்துக்குடி, மற்றும் பல இடங்களில் இருந்து கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களை விவாதத்திற்கு அழைத்து அவர்களை அழ வைத்தனர். எதற்கெடுத்தாலும் விவாதத்திற்கு வா என்று சவால் விடும் முஸ்லீம்கள் அதற்குப் பின் கிறிஸ்தவர்களுடன் விவாதம் என்றாலே பதுங்க ஆரம்பித்தனர்.
இன்றளவும் ஒப்பந்தப்படி பிஜே அணியினர் மற்ற தலைப்புகளில் விவாதம் செய்ய முன்வராமல் இருப்பதிலேயே நாம் இவைகளை எல்லாம் அறிந்து கொள்ளலாம்.
இப்படியாக விவாதத்தின் சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். நான் நேரடியாக கண்டும் கேட்டவைகளை இங்கே எழுதுவேனானால் இடம் கொள்ளாது.
Re: முஸ்லீம்களுடன் விவாதித்ததின் விளைவுகள் - சாதனைகளா வேதனைகளா
Sat Apr 18, 2015 3:40 pm
இப்படிப் பட்ட கிறிஸ்தவ விழிப்புணர்வில் பலர் விவாதத்திற்குப் பின் சகோ. வெங்கடேஷ் அவர்களைத் தொடர்பு கொண்டு வாழ்த்துதல்களையும் ஆதரவையும் தெரிவித்து வந்தனர். ஏனெனில் இரு விவாத அமர்விலும் தமிழகத்தில் இருந்து முக்கியமான விவாதங்களை முன் எடுத்துச் சென்றவர் சகோ. வெங்கடேஷ் அவர்களே.
இதற்காக ஆண்டவர் அவர்களை அனேக ஆண்டுகளாக ஆயத்தப் படுத்தி இருந்தார். நானறிந்த வரையில், சகோ. வெங்கடேஷ் அவர்கள் அளவிற்கு ஹதீஸ்களை அறிந்த இஸ்லாமியர்களை தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணி விடலாம் (சந்தேகம் இருக்கும் கிறிஸ்தவரோ இஸ்லாமியரோ அது குறித்து விவாதம் செய்யலாம் J ).
விவாதங்களுக்குப் பின், அனேக இளைஞர்கள் மற்றும் போதகர்களை கிறிஸ்தவத்திற்கு தைரியமாக சாட்சி பகர சகோ.வெங்கடேஷ் அவர்கள் உற்சாகப்படுத்தி வருகிறார். இதில் எவ்வித சுய லாப நோக்கமோ பண நோக்கமோ கிடையாது என்பதை அவருடன் நெருங்கிப் பழகிய அனைவரும் அறிவர்.
ஒருவர் பேர் பெற்றாலே அனேகருக்கு வயிறெரிவது உலகத்தில் காணக் கூடியதுதானே. மனித வரலாற்றில் பொறாமை என்பதை நாம் ஏதேன் தோட்டத்தில் இருந்தே காண முடியும். அதிலும் குறிப்பாக விவாதத்திற்குப் பின், பிஜே அணியினரின் அஸ்திபாரங்களே அசைய ஆரம்பித்தது,
முக்கியமான ஒருவர் அவரை விட்டு பிரிய நேர்ந்தது. கிறிஸ்தவர்கள் பக்கம் அப்படி எதுவுமே நடக்கவில்லை. ஆனால் ஒரு சில கள்ளப் போதகர்களுக்கு சகோ.வெங்கடேஷ் அவர்களின் வளர்ச்சியில் பொறாமை உண்டாகி மூன்று வருடங்கள் எதுவும் பேசாமல் இருந்தவர்கள், இதுவரை அமைதியாக இருந்தவர்கள் இப்பொழுது பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது அவர்களுடைய தரம் மீதே சந்தேகம் வருகிறதல்லவா!

Sat Apr 18, 2015 3:41 pm
இப்படி கூட இருந்து கொண்டே செய்பவர்களுக்கு தமிழில் வேறு பெயர் உண்டு. அதை எல்லாம் சொல்லி அவர்களை அசிங்கப்படுத்த விரும்ப வில்லை. ஆனால் அவர்கள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எதாவது ஆதாரத்தை வைத்தார்கள் எனில் நலமாயிருக்கும்.
ஒருவர் சகோ.வெங்கடேஷ் முஸ்லீம்களிடம் பணம் வாங்கினார் என்பதாக என்னவோ கூட இருந்து வாங்கிக் கொடுத்தவர் போல உளருகிறார். இன்னொருவர் முஸ்லீம்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினோம் என்று நேரடியாக பார்த்தது போல பிதற்றுகிறார்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இவர்கள் விவாதம் நடக்கும்போது, அந்த இடத்திலேயே இல்லை. விவாத குழுவினருடன் எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள், இப்பொழுது வாய்க்கு வந்தபடி பேசுவதையும் எழுதுவதையும் பார்க்கும்போது, இவர்களின் உள்நோக்கம் புரிய வருகிறது.
இவர்களுடைய நோக்கம் தேவன் மகிமைப்படவேண்டும் என்பதல்ல, கிறிஸ்துவின் அரசு விரிவடைய வேண்டும் என்பதல்ல, மாறாக இவர்களின் சுபாவம் கல்லறையில் இருந்தாலும் அங்கே பிணமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் சுபாவத்திற்கு ஒத்திருப்பதால், இவர்களின் பொறாமையும் பெருமையும் மட்டுமே வெளியே தெரிகிறது.
அதுமட்டுமல்ல சகோதரர்களே, இவர்களின் தவறான இறையியல் கொள்கையும் அம்பலமாகிறது. இதுவரையிலும் இவர்கள் தரித்திருந்த முகமூடிகள் கிழிவதால், வேஷம் கலைந்து செய்வதறியாது இன்னமும் கூட உளருகிறார்கள். அதுவும் நன்மைக்கே.
சொற்களின் மிகுதியினால் பாவமில்லாது போகாது என்பது மட்டுமல்ல, இவர்களைப் பற்றி இவர்களே சாட்சி பகர்கிறார்கள். இவர்களுடைய தவறான இறையியல் கொள்கைகளுக்கு தக்க பதில் சொல்வது இறையியல் மாணவனான என் கடமை என்பதால் அதைக் கண்டிப்பாக தொடர்ந்து வரும் நாட்களில் செய்வேன்.
ஏனெனில் இறைவனுக்கடுத்த காரியங்களில் எவ்வித சமரசத்திற்கும் நமக்கு இடம் இல்லையே.

Sat Apr 18, 2015 3:44 pm
முடிவுரை
அன்பு கிறிஸ்தவ நண்பர்களே!
ஒருவர் சேறை வாரி வீசும்போது நாம் பதிலுக்குப் பதில் சேறை வாரி வீசுவதால் அவர்களுக்கும் நமக்கும் எந்த வித்தியாசமுமில்லாதே போகும் என்பதை நன்கறிந்திருக்கிறேன். மேலும் நம் ஆண்டவரின் போதனை இப்படிப் பட்டவர்களையும் சிநேகித்து, அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்பதாகும்.
இரு விவாதங்களின் போதும் நான் விவாத குழுவினருடன் இருந்தவன் என்ற முறையிலும், உண்மைக்கு மாறான செய்திகளுக்கு இடம் கொடுப்பது என்பது மனச்சாட்சிக்கே எதிரானது என்ற முறையிலும் இவைகளை எல்லாம் இங்கே பதிவு செய்கிறேன். எனது பார்வையில் நடந்து முடிந்த இரு விவாதங்களும் தேவனுக்கு மகிமையாக சத்தியத்தை பறைசாற்றின. அனேகர் இஸ்லாமியர் இயேசுவை இரட்சகராக அறிந்து கொள்ள வேண்டும் என்ற பாரத்தை உண்டாகியது.
அனேகர் முஸ்லீம்கள் மத்தியில் இறைபணி ஆற்ற ஒப்புக் கொடுக்க வைத்தது. இன்றளவும் விவாத டிவிடிக்கள் அனேகர் கேட்டு வாங்கி, சத்திய தெளிவு பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாடு மட்டுமல்ல, தமிழர் வாழும் எல்லா இடங்களிலும் கிறிஸ்துவின் நறுமணம் பரவிக் கொண்டிருப்பதை கண்டும் கேட்டும் கேள்விப்பட்டும் தேவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
அமைதிநேர நண்பன். அற்புதராஜ் சாமுவேல்
பின்குறிப்பு:
முழுவிவாத விவரங்களை இடச்சுருக்கம் காரணமாக தவிர்த்து மிக முக்கியமானவைகளை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். விவாத டிவிடிகளைப் பார்க்காதவர்கள் அதைக் பாருங்கள்.
தேவைப்படுகிறவர்கள் தொடர்புகொள்ளுங்கள் :
(arputhaa@yahoo.co.in).
http://tamilchristians.com/index.php…
Permissions in this forum:
You cannot reply to topics in this forum