[size=undefined]ஆட்டிஸம் குழந்தைகளும் அரசாங்க சலுகைகளும்! [/size] [size=undefined]ம ம்மீஸ் பட்டாளமே கூடியிருந்தது, சென்னை - தி.நகரிலுள்ள கர்நாடக சங்கத்தில்.[/size] ஏ.டி.ஹெச்.டி., ஆட்டிஸம் என்று சுட்டீஸ் உலகை உலுக்கும் குறைபாடுகளுக்கு டிப்ஸ் தரும் வகையில், பிரபல நரம்பு மருத்துவ உளவியல் நிபுணரான விருதகிரிநாதன் நடத்திய ‘ரீஹாப் - 2006’ என்னும் கருத்தரங்கம் அது. ‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது’ மாதிரி, நம்ம மம்மீஸ்களுக்கான பயனுள்ள தகவல்கள் பலவும் அங்கே கொட்டிக் கொண்டிருக்க, அத்தனை யையும் அப்படியே அள்ளிக் கொண்டு வந்தோம். ‘‘படிக்கவோ, புரிந்து கொள்ளவோ சிரமப்படுகிற குழந்தைகளை போட்டு அடிப்பதும், முட்டி போட வைப்ப தும் பிரச்னைக்கான தீர்வாகாது. ‘காலையில் சாப்பிடாம வந்தேன்’ என்று சொல்கிற ஒரு சிறுவனுக்கு சாப்பாடு தர வேண்டுமே தவிர, ‘ஏன் சாப்பிடாம வந்தே?’ என்று போட்டு அடிக்கலாமா? படிக்க சிரமப்படுகிற குழந்தையை அடிப்பதும் அதற்கு இணையானதுதான்.. இப்படிப்பட்ட அம்மாக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இந்தக் கருத்தரங்கின் நோக்கம்’’ என்று பளிச் முன்னுரை வாசித்தார் டாக்டர் விருதகிரிநாதன். சென்னையின் முன்னணி குழந்தை நல மருத்துவர்கள் பலரும் கலந்து கொண்ட அந்தக் கருத்தரங்கம், நிஜமாகவே அம்மாக்களுக்கான அட்டகாச வழிகாட்டிதான்! ஓகே.. கேள்வி - பதில் செஷனுக்குப் போலாமா? ‘‘ஏ.டி.எச்.டி., ஆட்டிஸம் என்பதெல்லாம் என்ன மாதிரியான குறைபாடுகள்?’’ ‘‘முதலில், ஏ.டி.எச்.டி. எனப்படுகிற அட்டென்ஷன் - டிஃபிஸிட் ஹைபர் ஆக்டிவிடி டிஸார்டர்.. (Attention- Deficit Hyperactivity Disorder )-ஐப் பார்க்கலாம். ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதைப் போல, குழந்தைகள் மிதமிஞ்சிய துறுதுறுப்போடு இருப்பதுதான் இந்தக் குறைபாடு! இதை ‘கவனச் சிதறல் - துறுதுறுப்பு’ என்று சொல்லலாம். ஆனால், ஆட்டிஸம் என்பது இதற்கு நேர்மாறானது. சாதாரண குழந்தைகளுக்கான, இயல்பான துறுதுறுப்பு கூட இல்லாமல், யாரோடும் சேராமல் தனித்து விளையாடும் குழந்தைகள் இந்த வகையில் அடங்கு வார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளை நாம் கைகளில் தூக்கும்போது எந்தவிதமான அசைவுகளும் இல்லாமல் மந்தமாக இருப்பார்கள். சாதாரணமாக, இரண்டு வயதுக்குள் பேசத் துவங்கியிருக்க வேண்டிய குழந்தை பேசாமலேயே இருப்பது, சம்பந்த மில்லாமல் கழுத்து, கை, கால்களை ஆட்டுவது, இயல்புக்கு மீறி ஹம்மிங் மாதிரியான தொனியில் சத்தம் போடுவது, யாருடனும் சேராமல் தனித்து விளையாடுவது, அந்த வயதுக்கே உரிய இயல்பான செயல்பாடுகள் எதுவுமே இல்லாமல், ஒரே காரியத்தை திரும்பத் திரும்பச் செய்வது.. இவையெல்லாம் ஆட்டிஸம் இருப்பதற்கான அறிகுறிகள்.’’ ‘‘துறுதுறு என்று இருக்கிற எல்லாக் குழந்தைகளுக்குமே ஏ.டி.எச்.டி. குறைபாடு இருக்குமா?’’ ‘‘இது தவறான கருத்து. ஒரு குழந்தைக்கு அதனுடைய வயதுக்கே உரிய இயல்பான குறும்புத் தனங்களை மீறி, குறிப்பிட்ட சில குணங்கள் தொடர்ச்சியாக தென்பட்டால்.. அதற்கு ஏ.டி.எச்.டி. குறைபாடு இருப்பதாகக் கருதலாம். அந்த குணங்கள்.. 1. அந்தக் குழந்தையால் விளையாடுவது, படிப்பது, எழுதுவது உள்ளிட்ட எந்தச் செயலிலுமே ஐந்து நிமிடம்கூட மனம் லயித்து, ஈடுபட முடியாது. 2. கேட்ட கேள்விகளையே திரும்பத் திரும்ப கேட்டு துளைத்தெடுக்கும் (உதாரணம்.. ‘மம்மீ.. நாம வெளியே போகப் போறோமா?’ என்ற கேள்விக்கு பதில் சொன்ன பிறகும்கூட திரும்பத் திரும்ப அதையே கேட்கும்). 3. நம் கட்டளைகளை சரியாக புரிந்து கொள்ளாது (உதாரணம்.. நான்கு வயதாகியும்கூட ‘தாத்தாவிடம் பேனாவை வாங்கி அப்பாவிடம் கொடு’ என்றால்.. அதை சரியாகப் புரிந்துகொண்டு செய்யத் தெரியாது). 4. தேவையே இல்லாமல் சத்தம் போட்டுக் கொண்டே இருக்கும் (உதாரணம்.. திடீரென சத்தமாகப் பேசுவது, கத்துவது, காரணமே இல்லாமல் கலகலவென சிரிப்பது). 5. கவனக் குறைவால் எக்கச்சக்கமான பொருள்களைத் தொலைக்கும் (உதாரணம்.. ஏதோ பேனா, பென்சிலை எப்போதாவது தொலைப்பது என்றில்லாமல் தினம்தினம் லன்ச் பாக்ஸ், லன்ச் பேக், ஷூ, ஸ்கூல் பேக் உட்பட எல்லாவற்றையுமே அவை தன்னுடையதுதான் என்கிற நினைவில்லாமல் தொலைக்கும்). 6. சொன்ன பேச்சைக் கேட்காமல் அடம்பிடிக்கும் (உதாரணம்.. ‘செய்யாதே’ என்று சொன்னால் செய்வது, ‘செய்’ என சொன்னால் செய்யாமல் இருப்பது என எப் போதுமே நம் கட்டளைகளை எதிர்த்து செயல்படும்). 7. ஆபத்தான காரியங்களை செய்யக் கூடாது என்று எச்சரித்தும், அதை செய்து பார்க்க ஆர்வம் காட்டும் (உதாரணம்.. மின்சாரப் பொருட்களைத் தொடுதல், நெருப்பில் கை வைத்தல்). 8. ஒழுங்கின்றி கண்மண் தெரியாமல் ஓடும். பதட்டப் பட்டுக் கொண்டே இருக்கும். 9. ஒரே இடத்தில் 2 நிமிடம் கூட உட்கார முடியாமல் நெளியும். 10. பொது இடத்தில் எப்படி நடந்து கொள்வது என்று தெரியாமல், பிறரை ரொம்பவே எரிச்சல்படுத்தும் அளவுக்கு நடந்து கொள்ளும். குழந்தைக்கு இதில் 8-க்கு மேற்பட்ட குணங்கள்.. குறைந்தது ஆறு மாதத்துக்காவது தொடர்ந்து இருந்தால் மட்டுமே ஏ.டி.எச்.டி. குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம். சில குழந்தைகள் ஏதாவது ஒருநாள் விளை யாட்டாக இப்படிச் செய்து மறுநாள் செய்யாவிட்டால் கூட, அவர்களுக்கு ஏ.டி.எச்.டி. கிடையாது என்று அர்த்தம் கொள்ளலாம்.’’ ‘‘குறைபாடு உள்ள குழந்தையிடம் அம்மா எப்படி நடந்து கொள்ள வேண்டும்?’’ ‘‘அம்மா மட்டுமல்ல.. அப்பாவும் சேர்ந்து அவர்களுடன் போதிய நேரம் ஒதுக்க வேண்டும். முதலில், குழந்தைகளின் இந்தக் குறைபாட்டை பெரிதுபடுத்தாமல், அவர்களை புரிந்துகொள்ள வேண்டும். மிரட்டுவதோ, அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதோ தவறு. அவர்கள் பேச முயலும் விஷயத்தை காது கொடுத்துக் கேட்க வேண்டும். பாஸிடிவான விஷயங்களையே அவர்களிடம் பேச வேண்டும். அவர்கள் கண் விழித்து இருக்கும் எல்லா நேரமும் யாராவது ஒருவர் துணையிருக்க வேண்டும். இந்தக் குழந்தைகளை திட்டுவதாலும் அடிப்பதாலும் ஒரு பயனும் கிடையாது. அப்படிச் செய்தால், ஒரு கட்டத்தில் இந்தக் குழந்தைகள் ஒருவித மந்தமான நிலைக்குப் போய்விடுவார்கள். இவர்களை அன்பாகவும் அதிக அக்கறையுடனும் கவனிப்பதே இந்தக் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முக்கிய வழி. இவர் களின் கேள்விகளுக்கு எரிச்சல்படாமல், மறுக்காமல், பாஸிடிவ்வாக பதில் பேசி எண்ணத்தை மாற்ற முயல வேண்டும். தவறு செய்தால், சொல்லித் திருத்த வேண்டும். தான் செய்தது தப்பு என்று புரியும் விதமாக சின்னதாக கண்டிப்பு காட்ட வேண்டும். அவர்கள் செய்ய வேண்டியதையும் செய்யக் கூடாததையும் கட்டாயப்படுத்தாமல் சொல்லித் தர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அவர்களது குறைபாடு பற்றி அவர்கள் முன் பேசக் கூடாது. இப்படியெல்லாம் கட்டுப்பாட்டுடனும் பொறுமையுடனும் இருந்த எத்தனையோ பெற்றோர்கள், குறைபாடு உடைய குழந்தைகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.’’ ‘‘இப்படிப்பட்ட குறைபாடு உள்ள குழந்தைகள் படிப்பு விஷயத்தில் எப்படி?’’ ‘‘இந்தக் குழந்தைகளுக்கு சமூக உறவுகளை கையாளத் தெரியாது. அதனால், அவர்களுக்கு முதலில் அளிக்கப்படும் மருத்துவமே பிஹேவியர் தெரபிதான். ஏ.டி.எச்.டி., ஆட்டிஸம் உள்ள குழந்தைகளில் 40% குழந்தைகளுக்கு கற்றலின் குறைபாடு இருக்கிறது. அத்தகைய குழந்தைகளுக்கு அதிகாரப்பூர்வமாக இரண்டாம் மொழி விலக்கு அளிக்கப்படுகிறது. இதுதவிர, தேர்வு எழுத அதிக நேரம் தருவது, பரீட்சை ஹாலுக்குள் கால்குலேட்டரை அனுமதிப்பது, அதிக குறைபாடு உள்ளவர்களுக்கு வேறு ஒருவரை வைத்து தேர்வு எழுத அனுமதி தருவது, விடைத்தாளில் எழுத்துப் பிழைகளை பொருட்படுத்தாமல் விடுவது என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இந்தக் குழந்தை களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை வழங்குகிறது.
தமிழகத்தின் அரசு தேர்வு முறைகளிலும் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. தேர்வு முறையிலும் இந்த சலுகைகள் தரப்படுகின்றன. சம்பந்தப்பட்ட குழந்தையின் மருத்துவ சான்றிதழையும் பள்ளிச் சான்றிதழையும் இணைத்து, டீ.பீ.ஐ. (டைரக்டரேட் ஆஃப் பப்ளிக் இன்ஸ்ட் ரக்ஷன்ஸ்)க்கு பெற்றோர் விண்ணப்பம் அளித்தால், அக் குழந்தைக்கு இந்தச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன.’’ |
| |