இன்று_அல்ல_நாளை
Thu Apr 02, 2015 2:38 pm
Joselin Jenix
ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் விடுதியில் தங்கி படித்த மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் தங்கள் கல்வி ஆண்டின் கடைசி நாளில் பிரிவு உபசர்ணை நடத்தினர். கிறிஸ்தவ கல்லூரி என்பதால் ஒரு பிரசங்கியாரை செய்தி அளிக்க அழைத்தனர்.
இறுதி நாள் வந்தது
பிரசங்கியார் செய்தியளித்தார். பாவத்தை குறித்து ஆணித்தரமாக பேசினார். நரகத்தை குறித்து கூறினார். நீ மரித்ததின் பிறகு எங்கே செல்வாய். ஆணித்தரமாக பேசினார். இறுதி ஜெபத்தின் போது அனேக மாணவ மாணவிகள் இயேசுக்கு தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அனைவரும் அழுது தாங்கள் செய்த பாவங்கழுக்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்டார்கள்.
இறுதியில் பிறசங்கியார் அவர்களிடம் இவ்வாறாக கூறினார்.
நான் இயேசு கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன். என் பாவத்தை அறிக்கையிடுகிறேன். நான் பாவத்துக்கு செத்து பரிசுத்தமாய் வாழுகிறேன்.
இவ்வாறு நீங்கள் உங்கள் டையரியில் எழுதி இன்றைய நாளையும் குறித்து வையுங்கள் என்றார்.
அனைவரும் எழுதினார்கள்.
ஆனால் ஒரு மாணவி மட்டும் இவ்வாறாக எழுதினாள்
#நான்_இயேசு_கிறிஸ்துவை_என்_சொந்த_இரட்சகராக_ஏற்றுக்கொள்கிறேன் ஆனால்
#இன்று_அல்ல_நாளை
ஏன் என்று சொன்னால் இவளுக்கு ஒரு ஆண் நண்பர் உண்டாம். இந்த பிரிவு நிகழ்ச்சி முடிந்ததும் அவனை பார்க்க செல்ல வேண்டும். நாளை அவள் தன் வீட்டுக்கு செல்லவேண்டும் என்பதால் இன்று தான் கடைசியாக ஆண் நண்பருடன் இன்பமாக இருக்க முடியும்.
நாளை மத்தியானம் தான் இல்லத்துக்கு இவள் செல்வாள்.
அதனால் தான் இவள் அவ்வாறாக தனது டையரியில் எழுதினாள் .
நிகழ்ச்சி முடிந்ததும் சின்ன சிற்றுண்டி ஆயத்தம் செய்யப்பட்டிருந்தது. அனைவரும் சாப்பிட்டார்கள். ஆனால் அந்த மாணவியோ நிகழ்ச்சி முடிந்ததும் தனது நண்பருடன் கடைசியாக இன்பமாக இருக்க தன் வாகனத்தை எடுத்துவிட்டு வேகமாக சென்றாள்.
செய்தியாளர் அரைமணி நேரம் கழித்து அந்த இடத்திலிருந்து விடைபெற்றார். சாலையில் வரும் வழியில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம்
ஏன் இவ்வளவு கூட்டம் என்று விசாரித்தார். அப்போது ஒருவர்
ஐயா சில நிமிடங்களுக்கு முன்பாக சற்று அந்தபக்கம் கோரமான விபத்து ஒன்று நடந்தது வேகமாக ஸ்கூட்டியில் வந்த பெண் பேருந்தின் மீது மோதினாள். இதில் அந்த இடத்திலேயே பெண் மரித்துபோனாள் என்றார்.
சிறிது நேரத்தில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. செய்தியாளர் விபத்து நடந்த இடத்தை பார்த்தவாறே சென்றார்.
தற்செயலாக சிதறிக்கிடந்த புஸ்தகங்கள் அவர் கண்ணில் பட்டது. அந்த கல்லூரி புத்தகத்தில் கல்லூரியின் புகைபடம் மற்றும் கல்லூரியின் பெயர் இருந்தது. உடனே அவர் தனது வாகனத்தை அருகில் நிறுத்தி இந்த கல்லூரியில் அல்லவா நான் செய்தி கொடுத்துவிட்டு வருகிறேன் என்று மனதுக்குள் கூறியவாறே புத்தகத்தை திறந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி. இவர் எந்த பிரிவில் மூன்றாம் ஆண்டு மாணவர்களிடம் செய்தியளித்தாரோ அதே பிரிவில் உள்ள மாணவி.
உடனே அவளது டையரியை திறந்து பார்த்தார். அவர் தலையில் இடி விழுந்தது போல் ஆனது. அந்த வரிகளை அவர் படித்தார்.
" நான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன். #ஆனால்_இன்று_ #அல்ல_நாளை செய்தியாளர் கதறி அழுதார். ஒருவேளை இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டிருந்தால் இந்நேரம் பரலோகத்தில் இருந்திருக்கலாமே கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டாளே என்று அழுதார்.
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே நமக்கும் பல வாய்ப்புகள் கிடைத்தது ஆனால் நாமும் அற்ப்ப காரியங்களுக்காக இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்,சிலர் கல்லூரி வாழ்க்கை முடிந்தபிறகு, என்றும் சிலர் திருமணம் முடிந்த பிறகு என்றும் இன்னும் சிலர் வாலிப வயதில் எல்லாம் அனுபவித்துவிட்டு வயதான பிறகு இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்று கொள்ளலாம் என்று நினைக்கின்றார்கள்.
ஆனால் மரணம் என்பது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. இன்று இரவு தூங்கி காலையில் எழுப்புவோம் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறதா? இல்லை
கிடைத்த நேரத்தை பயன்படுத்துவோம்
பரலோகத்தில் நாம் சந்திப்போம்.
நன்றி #ஜோஸ்லின்_ஜெனிக்ஸ்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum