கொர்ரி டென் பூம் - Corrie ten Boom (1892-1983)
Thu Mar 26, 2015 12:40 am
விசுவாசத்தில் வாழ்க்கை
கொர்ரி டென் பூம் - Corrie ten Boom (1892-1983)
இரண்டாம் உலகப் போரின் பொழுது ஹிட்லரின் நாஷி படையினர் நெதர்லாந்து நாட்டை கைப்பற்றினர். கிறிஸ்தவர்கள் மண்ணிக்கும் மனம் உடையவர்கள் என்பதை உலகிற்கு காண்பித்த கொர்ரி டென் பூம் அம்மையார் அந்த நாட்களில் நெதர்லாந்தில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார். ஹிட்லரின் நாஷி படையினர் அங்கு வாழ்ந்த யூதர்களை பிடித்து வன்கொடுமை முகாம்களில் அடைத்து சித்தரவதை செய்தனர். உறைவிடம் இல்லாது தவித்த யூதர்களுக்கு தங்களுடைய வீட்டிலே மறைவிடம் அமைத்து கொடுத்தனர் கொர்ரி டென் பூம் குடும்பத்தினர். வீட்டின் மேல்புறத்தில் சுவருக்குள் மறைவிடம் அமைத்து அநேக யூதர்களை காப்பாற்றினர். இதை அறிந்த நாஷி படையினர் 1944 ம் ஆண்டு பிப்ரவரி 28 ம் தேதி கொர்ரி டென் பூம் குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்தனர். திருமணம் ஆகாத கொர்ரி டென் பூமையும் அவருடைய சகோதரியாகிய பெட்சியையும் தொலைதூரத்தில் வன்கொடுமை முகாமில் அடைத்தனர். கொர்ரி டென் பூமும் அவளது சகோதரி பெட்சியும் நாஷி படையினரால் சொல்லன்னா சித்திரவ்தைகளுக்குள்ளாயினர்.
கொர்ரி டென் பூம் தடுப்பு முகாமில் இருந்த பொழுது ஒருநாள் ஜலதோஷம் பிடித்து கண்களிலும் மூக்கிலும் இருந்து தண்ணீர் வந்து கொண்டே இருந்தது. இதைத் தாங்கிக் கொள்ள இயலாத கொர்ரி, பக்கத்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது சகோதரி பெட்சியை நோக்கி, “இதை சமாளிக்க ஒரு கை குட்டை கூட தன்னிடம் இல்லையே” என்று துக்கத்தோடு சொன்னாள். உடனே பெட்சி “நீ ஜெபிக்க வேண்டியதுதானே?” என்று சொன்னாள். ஒரு கைக்குட்டையை கேட்டு ஜெபிக்க வேண்டுமா என்று மனதினுள் சிரிந்துக் கொண்டாள் கொர்ரி. உடனே பெட்சி, “எங்கள் பரலோக தகப்பனே, கொர்ரிக்கு மிகவும் ஜலதோஷம் பிடித்து கஷ்டப்படுகிறாள். அவளுக்கு ஒரு கைக்குட்டை கூட இல்லை. அவளுக்கு ஒரு கைக்குட்டை தேவை. இதை உம்மால் செய்ய முடியும் என்று நான் விசுவாசிக்கின்றேன். ஆமென்” என்று செபித்தால். சில நிமிடங்களில் “கொர்ரி இங்கே வா. இதை வாங்கிக்கொள்” என்று பூட்டிய சிறையின் முன் நின்று சிறை மருத்துவமனை தாதி (Nurse) அவசரப்படுத்தினாள். கதவண்டை சென்ற கொர்ரியிடம் தாதி ஒரு சிறு பொட்டலத்தைக் கொடுத்தாள். அதை உடனே பிரித்த பொழுது, அதனுள் ஒரு கைக்குட்டை இருந்தது. “என்ன ஆச்சர்யம். நான் கேட்கவே இல்லையே. எனக்கு கைக்குட்டை தேவை என்று உனக்கு எப்படி தெரியும்?” என்றாள். அதற்க்கு தாதி, கைக்குட்டைகளை நான் எடுத்துக்கொண்டிருந்த பொழுது, ஒரு கைக்குட்டையை கொர்ரிக்கு கொடு என்று என் இருதயத்தில் ஒரு சத்தம் கேட்டது. ஆகவே தான் கொண்டு வந்தேன்” என்று சொல்லி நாஷி படையினரின் பார்வையில் படாமல் சென்றாள். மிகுந்த ஆச்சரியப்பட்ட கொர்ரி தேவனுக்கு தன் வாழ்வையே அர்ப்பணித்தார். “அந்த கைக்குட்டையைக் காணும் பொழுதெல்லாம், நான் தேவனுடைய அன்பைக் காண்கிறேன்” என்று அறிக்கை செய்தார்.
இந்நிலையில் தனது சகோதரி பெட்சி தடுப்பு முகாமிலேயே இயேசு பாதம் சேர்ந்தாள். ஹிட்லரின் நாஷி படையினர் இரண்டாம் உலகப் போரில் தோல்வியை சந்தித்ததால் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் விடுவிக்கப் பட்டார்கள். நெதர்லாந்து திரும்பிய கொர்ரி போரில் பாதிக்கப்பட்டோருக்காக மறுவாழ்வு மையம் தொடக்கி அநேகருக்கு கிறிஸ்த்துவின் அன்பை அறிவித்தார். ஒருமுறை நற்செய்தி கூட்டத்தில் கிறிஸ்த்துவின் மன்னிக்கும் அன்பை அறிவித்து முடிக்கையில், தனது சகோதரி பெட்சியை கொடூரமாக சித்திரவதை செய்த நபர் மனம் மாறி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருப்பதைக் கண்டார். தனது சகோதரியின் இறப்புக்கு காரணமான அந்த மனிதனை மனதார மன்னித்தார். அந்த மனிதனின் அதிக நேரம் பிடித்து அமைதியாய் கண்ணீருடன் கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்தினார். திருமணமே செய்யாமல் 93 வயது வரை கிறிஸ்த்துவின் மன்னிக்கும் அன்பை உலகிற்க்கு காண்பித்து 1983 ம் ஆண்டு ஏப்ரல் 15 ம் தேதி இயேசுவின் விண்ணரசில் நுழைந்தார் கொர்ரி டென் பூம் அம்மையார்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum