அன்பே பெரியது
Wed Mar 25, 2015 11:02 am
விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. I கொரிந்தியர் 13:13.
இது 17-ம் நூற்றாண்டில் அமெரிக்க தேசத்தில் நடந்த உண்மைச்சம்பவம். வயதான முதியவர் ஒருவர், ஆற்றின் கரையிலே ஆற்றைக் கடந்து மறுகரைக்கு செல்ல காத்துக் கொண்டிருந்தார். ஆற்றில் இடுப்பு அளவே தண்ணீர் சென்றாலும், அது குளிர் காலமாக இருந்த படியால் தண்ணீருக்குள் நடந்து செல்ல முடியாது. ஆகவே குதிரையின் மூலமாக மக்கள் மறுகரைக்கு செல்வர். அப்படி குதிரையின் மீது வருபவர்களின் குதிரையில் தானும் ஏறி மறுகரைக்கு சென்று விட யோசித்தவராய் ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்ததார். குதிரைகளில் பலர் அந்த கடந்து செல்லும்படியாக வந்தனர். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த அந்த முதியவரோ யாரிடமும் சென்று உதவி கேட்க்கவில்லை. கடைசியாக அந்த ஆற்றைக் கடக்க ஒருவர் வந்தார். அவரை உற்று நோக்கிய முதியவர், தன்னை மறுகரையில் சேர்க்கும் படியாக அவரிடம் உதவி கேட்டார்.
அந்த மனிதன் முதியவரிடம், “நான் கடைசியாக இந்த ஆற்றைக் கடக்க வந்தவன். எனக்கு முன்பாக பலர் இந்த ஆற்றைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றனர். ஏன் அவர்களிடம் உதவி கேட்கவில்லை. என்னைப் பார்த்தவுடன், நீங்கள் உதவி கேட்டதின் நோக்கம் என்ன?” என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர், “நான் அவர்களை உற்று நோக்கியபொழுது, அவர்கள் கண்களில் அன்பும் உருக்கமும் தெரியவில்லை. ஆகவே அவர்களிடம் உதவி கேட்பது வீண் என்று எண்ணினேன். ஆனால் உங்களைப் பார்த்த பொழுது உமது கண்களில் அன்பும் உருக்கமும் தெரிந்தது. ஆகவே நீங்கள் நிச்சயமாக எனக்கு உதவி செய்வீர்கள் என்று நிச்ச்யத்தவனாய் உம்மிடம் கேட்டேன்” என்றார். அப்பொழுது அந்த முதியவரை தனது குதிரையில் ஏற்றி அவரது வீற்ற்க்கே சென்று இறக்கிவிட்டார் அந்த மனிதர்.
பின்னர் குதிரையில் வந்த அந்த நபர், தான் எவ்வளவு அவசரமாக சென்றாலும் தன்னால் இயன்ற அளவிற்கு பிறருக்கு உதவி செய்வதாக தீர்மானம் எடுத்தார். குதிரையில் வந்த அந்த நபராகிய தாமஸ் ஜெபர்சன், பின்னாளில் அமெரிக்க ஜனாதியாக உயர்ந்து, அநேக ஏழை மக்களுக்கு உதவினார். இந்த உலகத்தின் மக்கள் நம்மை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ளவேண்டும் என்று இயேசு நமக்கு கற்பித்துக் கொடுத்துள்ளார். *நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்* (யோவான் 13:35).
ஒரு திருச்சபை விசுவாசிகளுக்கு, வேறு திருச்சபை விசுவாசிகளைப் பிடிக்காது. திருச்சபைகுள்ளேயே ஒரு சிலருக்குள் பிரிவினை காணப்படும். குடுமத்திற்குள்ளே அன்பு காணப்படாது. கோபம் வந்து சண்டை போடுவார்கள். ஆனால் மன்னிப்பு கேட்கவோ, மன்னிக்கவோ தயங்குவார்கள். வேதம் சொல்கின்றது, *அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்* (I யோவான் 4:. இதை வாசித்துகொண்டிருகின்ற இயேசுவுக்கு பிரியமாவர்களே, யார்மீதாவது உங்களுக்கு கசப்புணர்வு இருந்தால் உடனடியாக அவர்களை மன்னித்தது விடுங்கள். இயன்ற அளவிற்கு அன்போடும் உருக்கத்தொடும் வாழ்ந்து இயேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையின் மூலமாக மற்றவர்களுக்கு பிரதிபலியுங்கள்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum