கதம்பச் சாம்பார்
Wed Mar 06, 2013 9:42 am
தேவையான பொருள்கள்:
அவரைக்காய், கொத்தவரங்காய், தடியங்காய், பரங்கி, பூசணி, கத்திரி, புடலை, சேனை, வாழை, காராமணிக்காய், பச்சை மொச்சை, நிலக்கடலை…
உருளைக்
கிழங்கு, பீன்ஸ், கேரட், குடமிளகாய், முருங்கை, தக்காளி..(விரும்பினால்
மட்டும். சிலர் நாட்டுக்காய் தவிர மற்றவை இந்த நாள்களில் சேர்ப்பதில்லை.
ஆனால் பொதுவாக சாம்பாரில் இவையும் சுவை சேர்க்கும்.)
புளி – பெரிய எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு – 1/2 கப்
சாம்பார்ப் பொடி – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - சிறிது
மசாலா அரைக்க:
காய்ந்த மிளகாய் – 1
தனியா – 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிது
தாளிக்க - எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை
செய்முறை:

- புளியை இரண்டு மூன்று முறைகளாகக் கரைத்துவைத்துக் கொள்ளவும்.
- துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
- காய்கறிகளை
பெரிய துண்டங்களாக நறுக்கி, பயறுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து
வேகவைத்துக் கொள்ளவும். பெரிய அளவில் நறுக்குவதால் இதையும் குக்கரிலேயே
தண்ணீர் சேர்க்காமல் வேகவைக்கலாம். - காய்ந்த மிளகாய், தனியா, தேங்காய்த் துருவலை சிறிது எண்ணையில் வறுத்து, கொத்தமல்லித் தழையுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய் தாளிக்கவும்.
- கரைத்து வைத்துள்ள புளி, அரைத்து வைத்துள்ள மசாலா, வேகவைத்துள்ள காய்கறிகள், சாம்பார்ப் பொடி, தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
- பச்சை வாசனை போனதும், வேகவைத்துள்ள பருப்பைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்களுக்குக் கொதிக்க வைத்து இறக்கவும்.
- கொத்தமல்லித் தழை நறுக்கிப் போட்டு பரிமாறவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum