வாக்கு வாதத்திற்கும், உரையாடலுக்கும் என்ன வேறுபாடு...?
Mon Mar 23, 2015 6:15 am
வாக்குவாதத்தில் நீங்கள் அடுத்தவர் சொல்வதைக்
கேட்க நீங்கள் தயாராய் இருப்பதில்லை.
ஒரு வேளை நீங்கள் கவனித்தால் கூட,
அந்த கவனித்தல் தவறாக இருக்கும்.
உண்மையாகவே நீங்கள் கவனிப்பதில்லை.
உங்கள் விவாதத்திற்கு தயார் செய்து கொண்டிருப்பீர்கள்.
அடுத்தவர் பேசிக் கொண்டிருக்கும் போது,
நீங்கள் முரண்பாட்டிற்குத் தயாராகிறீர்கள்.
உங்கள் வாய்ப்புக்காக,மறுபடி விவாதிப்பதற்காகக் காத்திருக்கிறீர்கள்.
உங்களுக்குள் ஏற்கனவே ஒரு எதிர்ப்புத் தன்மையைப் பெற்றுள்ளீர்கள்.
ஒரு கோட்பாடைக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் தேடலில் இல்லை.
அறியாமையில் இல்லை.
வெகுளியாய் இல்லை.
ஏற்கனவே நிரப்பப்பட்டிருக்கிறீர்கள்.
சில கோட்பாடுகளை எடுத்துச் சொல்கிறீர்கள்.
அவற்றை உண்மை என்று நிரூபிக்க முயல்கிறீர்கள்.
வாக்குவாதம் செய்பவர்களால் உரையாடலில் ஈடுபட முடியாது.
அவர்களால் மோதிக் கொள்ளத் தான் முடியும்.
குழப்பம் வந்தவுடன் ஒருவரை ஒருவர் எதிர்த்து கொள்கின்றனர்.
இந்த மாதிரியான விவாதத்தில் நீங்கள் எதையாவது நிரூபித்து விட்டதாக நினைக்கலாம்.
ஆனால் எதுவுமே நிரூபிக்கப்படுவதில்லை.
நீங்கள் அடுத்தவரை அமைதியாக்கி விடலாம்.
ஆனால் அவர்களை மாற்றிவிட முடியாது.
உங்களால் சமாதானப்படுத்த முடியாது.
ஏனெனில் இது ஒரு போர் போன்றது.
ஒரு நாகரீகமான போர்.
வார்த்தைகளைக் கொண்டு சண்டையிடும் போர்.
- இஸ்லாத்தின்படி முகமது, இயேசு ஈஸா மஸீஹ் வேறுபாடு
- வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் என்ன? உபயோகமான தகவல்கள்
- 'கிரெடிட் கார்டு' பெற்றவுடன் செய்ய வேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன
- நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன? நிலத்தை எப்படி கையகப்படுத்துகிறார்கள்? வழிமுறைகள் என்ன?
- ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum